அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஆக்கிரமிப்பு THE INVASION OF THE UNITED STATES Jeffersonville Indiana U.S.A. 54-05-09 சில நேரங்களில் குறிப்பிட்ட காரியங்கள் சம்பவிப்பதற்கான கர்த்தருடைய சித்தம்... நாங்கள் சமீபத்தில், டென்வர் சென்று, திரும்பினோம். கூட்டத்தைக் குறித்த அறிக்கையை நான் கூற வேண்டும் என்று நான் நினைக்கிறேன்: பல வருடங்களில் நான் நடத்தியிருந்த சிறந்த கூட்டங்களில் அதுவும் ஒன்றாயிருந்தது. எங்களுக்கு ஒரு அற்புதமான நேரம் உண்டாயிருந்தது. இரண்டாயிரத்துக்கும் சற்று அதிகமானோர் தங்களுடைய இருதயங்களை கிறிஸ்துவுக்குக் கொடுத்தனர், அதுமட்டுமின்றி அவர்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையும் பெற்றுக் கொண்டனர், அதுமட்டுமின்றி மகத்தான அடையாளங்களும் அற்புதங்களும் அங்கே டென்வரில் ஜனங்களுக்கு மத்தியில் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து செய்தார். எங்களுக்கு ஒரு அற்புதமான பொழிதலும், ஜனங்களின் மகத்தான ஒரு ஒன்றுகூடுதலும் உண்டாயிருந்தது. நாங்கள் துவக்கத்தில் சுமார் ஐயாயிரம் பேரோடு, துவங்கினோம். எங்களுக்கு ஒரு மிகப் பெரிய தோட்டங்கள் கிடைத்திருந்தன. மூன்றாம் இரவில் ஜனங்கள் நிற்பதற்கு கூட அந்த இடத்தில் இடம் இல்லாமலிருந்தது. ஐந்து இரவுகளுமே அப்பேர்ப்பட்ட ஒரு அற்புதமான நேரத்தை கொண்டதாய் இருந்தது. 2. நானும் பையனும், கனடாவிற்குச் செல்ல, நாங்கள் அங்கிருந்து புறப்பட்டோம். நாங்கள் மலைகளுக்கு மேல் ஏறி, பனிப்புயலண்டை வந்தோம். உங்களுடைய வானொலியில், நீங்கள் அதைக் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். மேலும் அதில் நூற்று எண்பத்தெட்டு பேர் இறந்தனர். அங்கே மேலே மலைகளில், பல நாட்களாக நாங்கள் ஒரு பனிப்பொழிவில் சிக்கிக் கொண்டோம். எங்களுடைய கூட்டமோ கடந்து போய்விட்டிருந்தது, நாங்கள் மீண்டும் புறப்படுவதற்கு முன்பு, நாங்கள், இப்பொழுது வீட்டிற்கு திரும்பி வந்தோம். எனவே அது ஒரு சிறந்த கூட்டமாய், மற்றும் வேறு ஏதோ ஒன்றாய் இருக்கும் என்றும், தேவனுடைய சித்தத்திற்காக அது அவ்வாறு இருந்திருக்கலாம் என்றும் நாங்கள் நம்புகிறோம். நாங்கள் அறியாத ஒரு காரியத்தை எங்களுக்காக அவர் ஒழுங்குபடுத்தியிருந்தார். 3. நாம் ஒரு இருண்ட உலகத்தில் ஒரு விதமாக நடக்கிறோம், ஆனால் இருளில் அல்ல. ஒளியானது செல்லுகிற போது, நாம் பின்தொடர்கிறோம் அப்படியானால் நாம் ஒளியைப் பின்தொடர்கிறோம். 4. நாம் ஒன்றுமே அறியாதிருக்கிற ஏதோ ஒரு காரியத்தை ஒருவேளை நம்முடைய பரலோகப் பிதா உடையவராய் இருந்திருக்கலாம். அங்கே ஏதாவது ஆபத்து இருந்திருக்கலாம். அல்லது, மீண்டும், யாரையாவது கொண்டு வர அவர் கிரியை செய்துகொண்டிருந்திருக்கலாம். நீங்கள் பாருங்கள், தேவன் அதைப் போன்ற ஒரு நபரின் பெயரில் மாத்திரமே கிரியை செய்ய முடியும்; அவர் அந்த ஒரு நபருக்காக ஒரு முழு தேசத்தையே மாற்றுகிறார், அவர்களை உள்ளே கொண்டு வருவதற்காகவே. எனவே அது முழுவதுமே தேவனுடைய நல்ல மகிமைக்காகவே இருந்தது என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். நாங்கள் அதற்காகவும், எங்களை பாதுகாப்பதற்காகவும் அவருக்கு நன்றி கூறுகிறோம். அநேகம் இருந்தன, நாங்கள்... 5. பில்லியும் நானும் அவர்களை, சாலை மற்றும் அது போன்ற காரியங்களில், விபத்துக்குள்ளானவர்கள் மற்றும் ஒவ்வொரு காரியத்தையும் எடுத்துச் செல்ல உதவினோம். ஆனால் நாங்கள் எந்த தொல்லையும் இல்லாமல் கடந்து வந்தோம். நாங்கள் ஒருமுறை சாலையிலிருந்து இறங்கிவிட்டோம், ஆனால் அது ஒரு சில நொடி பொழுதுகளாக மாத்திரமே இருந்தன. அங்கே ஒரு மனிதன் ஒரு பண்ணையில் இருந்து இறங்கி ஒரு டிராக்டரினால் எங்களை வெளியே இழுத்துவிட்டார். அப்படியே சரிக்குச் சென்றது; அது மிகவும் வழவழப்பாய் இருந்தது. 6. இதுவோ அவர்களுக்கு இல்லாதிருந்த காரியங்களில் ஒன்றாக இருந்ததற்காக...அந்த தேசத்தில், வருடத்தின் அந்த நேரத்தில், மொண்டானாவில் உள்ள ரொவுண்டப்பில், அந்த முகாமில், எப்போதாவது அதைப் போன்ற ஒரு புயல் வந்திருந்ததை, பண்டைய காலத்தவர்களால் நினைவுகூர முடியவில்லை, முடியவில்லை. நாங்கள்...அதைப்போன்ற சிறப்பான உண்மையான எந்த காரியத்தையோ, நம்முடைய கர்த்தர் தம்முடைய கையில் அங்கே எங்கே வைத்திருந்தார் என்பதை நாங்கள் அறிவோம். அது எங்களுடைய நன்மைக்கான ஒரு நோக்கத்திற்கானதாய் இருந்தது. எங்களுடைய நன்மைக் காகவே, அதற்காகத் தான் அது இருந்தது. 7. எனவே நான் திரும்பி வந்தப் பிறகு, நான் சகோதரன் நெவிலை அழைத்து, நான், "நான் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருக்கப்போகிறேன். மேலும்—மேலும் நான் வர வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், வந்து ஞாயிறு பாடப் பள்ளியை வைத்துக்கொள்ளலாம், ஏன், சரிதானே” என்று கூறினேன். மேலும் நான், “அதன்பின்னர் நான்...மேலும் நான் வருவதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன்” என்றேன். 8. அவர், “ஏன், நிச்சயமாக, சகோதரன் பில்” என்றார். “நீங்கள் வருவதற்காக நாங்கள் எப்பொழுதுமே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்” என்று ஒரு மிகப் பெரிய திறந்த இருதயத்துடனும் வரவேற்புடனும் அந்த விதமாகக், கூறினார். மேலும் அதன் பின்னர் அதை தன்னுடைய வானொலி ஒளிபரப்பில், நேற்று அதை அறிவித்தார். எனவே நாங்கள் இந்த எல்லா காரியங்களுக் காகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். 9. மேலும் இந்தக் காலை, இப்பொழுது, அன்னையர் தினமாக இருக்கிறது. பெரும்பாலான ஜனங்கள், நீங்கள் அன்னையர் தின பிரசங்கங்களை எங்கும் கேட்பீர்கள், ஜனங்கள் அன்னையைக் குறித்து பேசுகின்றனர், அது அற்புதமாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். மீதமுள்ள ஆராதனைக்காக அதை விட்டு விடுங்கள். 10 இந்தக் காலை நான் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஆக்கிரமிப்பு என்ற ஒரு ஒரு பொருளின் பேரில் பேச விரும்பினதை அறிவித்திருந்தேன். அதை, நீங்கள் அநேகமாக உங்களுடைய வானொலி ஒளிபரப்பில் கேட்டிருப்பீர்கள், நீங்கள் இன்றைக்கு அவைகளைக் குறித்து அதிகமாக கேட்கலாம். இன்றிரவு ஆராதனைகளில், ஒருவேளை ஒரு அன்னையருடைய தின பிரசங்கம் இருக்கும். எனவே நான், இந்த காலையில், “ஆக்கிரமிப்பு” என்பதை, நான் அறிவிக்கலாம் என்று நினைத்தேன். 11. நான் டென்வரில் இதன் பேரில் பேசினேன், இங்கோ, தேவனுக்கு சித்தமானால், இந்தக் காலையில் நான் அதை அளிக்கும்படி கொண்டிருந்த நோக்கத்தின் அணுகுமுறை சரியாக அதுவல்ல. மேலும், அது, அதனோடு ஒரு அற்புதமான நேரமாய் இருந்தது. கர்த்தர் ஒரு அற்புதமான வழியில் ஆசீர்வதித் திருந்தார். அது சில நேரங்களில் நமக்கு ஒரு விதமானதை அளிக்கிறது... 12. இதைப் பற்றியது என்ன என்பதை உணர, நீங்கள் சற்று அசைக்கப்பட வேண்டியதாயிருக்கிறது, நாம் சில சமயங்களில், அசைக்கப்பட வேண்டுமல்லவா? தேவன் அதைச் செய்வார் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். 13. மேலும், அந்த வழி மூலமாக, அங்கே நாம் சென்றடைந்த போது...அந்தக் கூட்டத்திற்கு நிதி உதவி அளித்தவர்கள் டென்வர் வர்த்தக புருஷர்களாக இருந்தனர், நான் இதற்கு முன்பு எப்போதும் பெற்றிருந்ததை காட்டிலும் இது சற்று வித்தியாசமான ஆதரவாய் இருந்தது. 14. வழக்கமாக, ஊழியக்காரர்கள், அவர்கள் கூட்டத்திற்கு நிதி உதவி அளிக்கும் போது, நீங்கள்..."நீங்கள் அதை அறிவித்தீர்களா?” என்று கேட்பீர்கள். “ஆம், சபைக்கு.” அதற்கு மேல் வேறெதுவுமேயில்லை. அது மேய்ப்பர்கள்; அவர்கள் தங்களுடைய சபை அதைக் குறித்து அறிந்துகொள்ள விரும்புகின்றனர். அது ஒரு அருமையான வார்த்தையாக உள்ளது. அது அவர்களுடைய வேலையாகும். 15. ஆனால் வர்த்தக புருஷர்கள் சற்று வித்தியாசமாக இருந்தனர். அவர்களோ இதை குறித்து உலகமே அறிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினர், எனவே அவர்கள் அதைக் குறித்த விளம்பரத்தை மூவாயிரம் அல்லது நான்காயிரம் டாலர்கள் செலவில் எல்லா பயண வண்டிகளிலும், வாடகை கார்களிலும், கார்களின் எல்லா முட்டுதாங்கிகளிலும் மற்றும் எங்கும் வெளியிட்டனர். எங்களுக்கு ஒரு அற்புதமான நேரம் உண்டாயிருந்தது. 16. ஆராதனை முடிவுற்ற பிறகு, அவர்கள் என்னை ஒரு பக்கமாக அழைத்து, “சகோதரன் பிரான்ஹாம், நாங்கள் இப்பொழுது உங்களுக்காக என்ன செய்யலாம்? நாங்கள் உங்களுக்கு என்ன கடன் பெற்றிருக்கிறோம்?” என்று கேட்டனர். 17. நான் அதற்கு, "ஏன், நிச்சயமாகவே எதுவுமே இல்லை” என்று கூறினேன். நான், "நீங்கள் எனக்கு எதுவும் கடன் பட்டிருக்கவில்லை” என்று கூறினேன். நான், “நீங்கள் விரும்பினால், நீங்கள், என்னுடைய உணவக கட்டணத்தை இங்கே, செலுத்துங்கள்” என்றேன். 18. நாங்கள் உங்களுக்காக ஏதோ ஒரு காரியத்தை செய்ய விரும்புகிறோம்." அவர்களோ விரும்பமாட்டார்கள்... நானும் அவர்களிடத்திலிருந்து எதையும் எடுத்துக்கொள்ள மனதாயிருக்க வில்லை. 19. எனவே மேலாளர் அவர்களை அழைத்தார். அவர், “அவர் வேட்டையாடவும் மீன் பிடிக்கவும் விரும்புகிறார் என்று நான் நினைக்கிறேன், அவர் விரும்பவில்லையா?” என்றார். அவரோ, “ஆம்” என்றார். 20. எனவே வர்த்தக புருஷர்களில் ஒருவர் அங்கே ஒரு பண்ணையை வைத்திருந்தார், மேலும் அவர், “நான் அதைக் குறித்து தற்பொழுது அவருக்கு ஒரு ஏற்பாடு செய்வேன்” என்று கூறினார். 21. பாருங்கள், திரு. மூர் அதைக் காண்பதற்கு சென்றார். அவர் குதிரையில், கிட்டத்தட்ட முப்பத்தைந்து மைல்கள் திரும்பிச் செல்ல வேண்டியதாய் இருந்தது. நான் கூறினேன்...திரு. மூர், “சகோதரி பிரான்ஹாம் ஒரு குதிரையின் மேல் அமர்ந்து, அதற்கு திரும்பி செல்வதை நான் காண விரும்புகிறேன்" என்று கூறினார். எனவே அவர், அவர்கள், மற்றும்... 22. ஆனால், அதற்குப் பின்னர், என்றாலும், அவர்கள் கொலராடோவில் உள்ள சில்வர் ப்ளூமில் உள்ள ஒரு சொந்த இடத்திற்கு சென்றனர். இது இப்பொழுது இந்த பக்கத்தில் இருக்க வேண்டும். அவர்கள் அங்கே ஒரு சிறிய பண்ணையை வாங்கி, இப்போது எனக்காக ஐந்து அறைகள் கொண்ட ஒரு வீட்டைக் கட்டினார்கள்...கொலராடோ, சில்வர் ப்ளூமில், மலைகளின் மையத்தில் இது உள்ளது. எனவே மீனவர்களாகிய உங்களுக்கு, இது ஒரு நல்ல நேரம் என்று நான் நினைக்கிறேன், எனவே இளைப்பாறுவதற்கு இது ஒரு நல்ல இடமாக இருக்கும், கூட்டங்கள் மற்ற காரியங்களுக்குப் பிறகு, தேவன் அனுமதித்தால் செல்வோம். அது அவரைப் பொறுத்தது, நீங்கள் பாருங்கள். 23. நான் இப்பொழுது வார்த்தைக்கு நம்முடைய கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். நான் வார்த்தையை, ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையை விரும்புகிறேன். அது, வார்த்தையானது உட்புறத்தில் ஜீவனாய் உள்ளது. இப்பொழுது, "வார்த்தை, எழுத்துக் கொல்லுகிறது, ஆனால் ஆவியோ ஜீவனை அளிக்கிறது.” ஜீவன் வார்த்தையில் இருக்கிறது, ஏனென்றால் அது தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறது. ஜீவன் அதனுடைய வார்த்தையில் இருக்கிறது. நான் உங்களுக்கு சொன்னது போல, "நான் உங்களுக்கு அளிக்கிறேன்..." 24. நீங்களோ, “சகோதரன் பிரான்ஹாம், இந்தக் காலை, நான் பசியாய் இருக்கிறேன். நீர் எனக்கு ஐந்து டாலர்களைத் தருவீரா?” என்று கேட்டால். 25. அப்பொழுது நானோ, "நான் தருவேன்” என்று கூறுவேன். இப்பொழுது, என்னுடைய வாக்குத்தத்தத்தில் உள்ளதைப் போலவே அதில் அவ்வளவு ஜீவன் உள்ளது. 26. அந்த விதமாகவே அது தேவன் மூலமாகவும் உள்ளது. தேவன் எந்தக் காரியத்தையாவது வாக்களிக்கிறபோது, அப்பொழுது தேவன் என்னவாயிருக்கிறாரோ, அவருடைய...அவர் தன்னுடைய வார்த்தையில் இருக்க வேண்டும். புரிகிறதா? இந்த வார்த்தைக்கு மதிப்பு...இந்த வார்த்தை தேவனைப் போன்றே உள்ளது. அது தேவனாய் இருக்கிறது. 27. நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதே உங்களுடைய வார்த்தையாக இருக்கிறது. அதுவே உங்களுடைய பிணைப்பு; நாம் இதை வழக்கமாக அவ்வாறு அழைப்போம். உங்களுடைய பிணைப்பு உங்களுடைய வார்த்தையாக இருக்கிறது. நாங்கள் உங்களுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை யென்றால், அப்பொழுது என்னால் நம்பிக்கைக்கொள்ள' முடியாது. ஆனால் உங்களுடைய வார்த்தையை எந்த காரியத்திற்காகவும் என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்தால், அப்பொழுது அது கனத்துக்குரிய ஒரு மனிதனாய் இருக்கிறது. 28. வேதாகமம், "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது” என்று உரைத்துள்ளது. புரிகிறதா? பார்த்தீர்களா? “அந்த வார்த்தை மாம்சமாகி, நமக்குள்ளே வாசம்பண்ணினார்.” 29. நான் நினைத்தால், இது, இந்தக் காலை, நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த பூமியே, தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறது. அந்த மரம் தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறது. நீங்கள், உங்களுடைய சரீரம், தேவனுடைய வார்த்தையாக இருக்கிறது. தேவன் அந்த விதமாக பேசி அதை உண்டாக்கினார், அதை ஒன்றுமில்லாததிலிருந்து உண்டாக்கினார்; அது எதுவுமில்லாதிருந்ததாய் இருந்தது. 30. நீங்கள் எப்போதாவது மானிட வாழ்க்கையும், அது எங்கிருந்து வந்தது என்பதையும் கவனித்தீர்களா? ஒரு சிறிய உயிரணு, ஒரு மானிடக் கண்ணினால் அதைக் காண முடியாத அளவிற்கு மிகச் சிறியது; ஒரு பெரிய, சக்தி வாய்ந்த கண்ணாடியின் மூலமாக மாத்திரமே காண முடியும். அங்கிருந்து நூற்றைம்பது அல்லது இருநூறு பவுண்டு எடை கொண்ட ஒரு மனிதன் வெளியே வருகிறான். அது எங்கிருந்து வந்தது? பார்த்தீர்களா? தேவன் அதை உரைத்தார், அது அப்படியே துவங்கியது, இயல்பாகவே, வளர்ந்து, அது சரியாக அப்படியே உற்பத்தி செய்தது. அவர் ஒவ்வொரு மரத்தையும், ஒவ்வொரு காரியத்தையும், ஜீவிக்கும்படி உரைத்தார். தேவனுடைய வார்த்தையைப் பார்ப்பதற்கு, இந்தக் காலை, இது அப்பேர்ப்பட்ட ஒரு அற்புதமான, காரியமாய் உள்ளது. 31. இப்பொழுது, இது, இந்தக் காலை, பழைய ஏற்பாட்டில், நாளாகமத்திற்குத் திருப்புவோம். நான் சற்று நிலைகுலைந்து போயிருக்கிறேன்.. நீங்கள் இப்பொழுது நாளாகமம், அதிகாரத்திற்கு திருப்பிக் கொண்டிருக்கையில். ஒரு சிறு களைப்புற்று இருக்கிறேன். ஆனால் கர்த்தருக்கு சித்தமானால்... 32. என்னால் உறுதியாக சொல்ல முடியாது; நாம் புதன்கிழமை இரவு அதை அறிந்து கொள்ளலாம். கர்த்தருக்கு சித்தமானால், சபையானது அந்த விதமாக வழிநடத்தப்படுவதை உணர்கிறது. நான் புதன்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, மற்றும் ஞாயிற்றுக்கிழமை, இங்கே ஒரு எழுப்புதலாக, வார்த்தையிலிருந்து ஒரு போதனை எழுப்புதலைக் கொண்டிருக்க விரும்புகிறேன். (சபையோர், “ஆமென்” என்கின்றனர்.-ஆசி.) புதன்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக் கிழமை, சனிக்கிழமை, மற்றும் ஞாயிற்றுக்கிழமை, வார்த்தையின் பேரிலான போதனை; சுகமளிக்கும் ஆராதனைகள் அல்ல, ஆனால் போதனை. கர்த்தர் நம்மை ஒருகால் அந்த விதமாக நடத்தலாம். அதன் பின்னர் நாம்... நான் உங்களோடு இருக்கவும் மற்றும் வார்த்தையின் பேரில் ஐக்கியம் கொண்டிருக்கவும், உங்களோடு இருக்கவும் விரும்புகிறேன். அந்த அருமையான, அற்புதமான "ஆமெனுக்காக” உங்களுக்கு, மிகுந்த நன்றி. 33. இப்பொழுது, நாளாகமம் 18-ம் அதிகாரத்தில், 12-ம் வசனம் துவங்கி, நாம் நம்முடைய சிந்தனைகளை, இந்த நாளின் மிக முக்கியமான பொருளின் பேரில் சிறிது நேரம், அடிப்படையாக வைக்க விரும்புகிறோம். முதலாம் நாளாகம-...இல்லை, இரண்டாம் நாளாகமம், நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இரண்டாம் நாளாகமம் 18:12, நாம் அதிலிருந்து ஒரு பாகத்தை வாசித்து, நம்முடைய கர்த்தர் நம்மை என்ன அறிந்துகொள்ளும்படி செய்வார் என்பதைப் பார்ப்போம். மிகாயாவை அழைக்கப்போன ஆள் அவனுடைனே பேசி: இதோ, தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் ஏகவாக்காய் ராஜாவுக்கு நன்மையாயிருக்கிறது; உம்முடைய வார்த்தையும் அவர்களில் ஒருவர் வார்த்தையைப் போல இருக்கும் படிக்கு நன்மையாகச் சொல்லும் என்றான். அதற்கு மிகாயா: என் தேவன் சொல்வதையே சொல்வேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான். அவன் ராஜாவினிடத்தில் வந்தபோது, ராஜா அவனைப் பார்த்து: மிகாயாவே, நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப் போகலாமா, போகலாகாதா என்று கேட்டான். அதற்கு அவன்: போங்கள்; உங்களுக்கு வாய்க்கும்; உங்கள் கையில் ஒப்புக் கொடுக்கப் படுவார்கள் என்றான். 34. இப்பொழுது, ஒரு சில நிமிடங்களுக்காக நம்முடைய சிந்தையை அடிப்படையாக வைக்க; இதன் பேரில், அவரிடத்தில் மீண்டும் ஒரு வார்த்தை பேசுவோம். 35. எங்களுடைய பரலோக பிதாவே, நன்றியுள்ள இருதயங்களோடு நாங்கள் இப்பொழுது உம்மை, இழக்கப்பட்ட ஆத்துமாக்களின் சார்பில், தேவையுள்ளவர்களின் சார்பில், சபையின் சார்பில் அணுகுகிறோம். அதாவது பரிசுத்த ஆவியானவர் இப்பொழுது வார்த்தைக்குள்ளாக துரிதமாக செல்வராக என்றே, நாங்கள் ஜெபிக்கிறோம். இங்கே தேவையா யிருக்கிற ஒவ்வொரு இருதயத்திற்கும் அதை நேரடியாக கொண்டு செல்லும். அவர் தம்முடைய செய்தியின் வல்லமையின் வார்த்தையை இருதயத்துக்குள்ளாக அளிக்கும் போது, நாங்கள் யாவரும் அதன் மூலமாக, இந்த காலை செழிப்படைந்து; கூடாரத்தை விட்டு, செல்லும்போது, களிகூர்ந்து தேவனைத் துதித்து, “அவருடைய பிரசன்னத்தினால், நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளே கொழுந்து விட்டெரிகிறது” என்று கூறுவோமாக. ஏனென்றால் நாங்கள் இதை அவருடைய நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென். 36. நம்முடைய காட்சி, இந்தக் காலை, ஒரு சோகத்தின் பேரிலான அடிப்படையைக் கொண்டுள்ளது. பழைய ஏற்பாடு, எனக்கு, எப்பொழுதுமே ஒரு நிழலாக அல்லது ஒரு—அல்லது புதிய ஏற்பாட்டின் ஒரு முன்னறிவிப்பாய் உள்ளது. அநேக சமயங்களில், யாரோ ஒருவர், “சகோதரன் பிரான்ஹாம், நீர் ஏன் எப்பொழுதும் பழைய ஏற்பாட்டை எடுத்துக்கொள்கிறீர்?” என்று கேட்டிருக்கிறார். “கிட்டத்தட்ட எப்பொழுதுமே, ஒரு பாடப் பகுதியை எடுத்துக் கொள்ள, நீங்கள் பழைய ஏற்பாட்டிற்கு திரும்பிச் செல்வீர்கள்.” நான் மாதிரிப் படிவத்தை விரும்புகிறபடியால் நான் அதை செய்கிறேன். நான் விரும்புகிறதோ... 37. யாவரும் அறிந்துள்ளபடி, என்னுடைய கல்வி மிகவும் குறைவானது. கிட்டத்தட்ட எங்கோ சரியானது உள்ளது என்பதை நான் அறிந்துகொள்ள ஒரே வழி, அது என்ன மாதிரியாயிருந்தது என்பதை காணும்படி, அது என்னவாயிருந்தது என்று காண அந்தத் திட்ட வரைபடத்தை நோக்கி பார்ப்பதேயாகும். அதன் பின்னர் அது என்னவாயிருந்ததோ இது இங்கே என்னவாயிருக்கிறது என்பதற்கு ஒத்ததான ஏதோ ஒன்றாய் இருக்கும் என்பதை நான் அறிந்து கொள்கிறேன், ஏனென்றால் அது அதனுடைய நிழலாய் உள்ளது. இஸ்ரவேல் புத்திரர் என்ன செய்தனர் என்பதை காணும்படிக்கு, அந்தப் பாவத்திற்குரிய தண்டனை என்னவாயிருந்தது என்பதைக் காணும்படிக்கு, தீர்க்கதரிசிகளின் நீதி என்னவாக இருந்தது என்பதைக் காண, அந்த காரியங்கள் எல்லாம் என்னவாயிருந்தன என்பதைக் காண நான் எப்பொழுதுமே பழைய ஏற்பாட்டில் திரும்பிப் பார்க்கிறேன்; அதன்பின்னர் இது இங்கு என்னவாக இருக்கிறது என்பதை குறித்ததான ஒரு யோசனை எனக்கு உண்டாயிருக்கும், அது முடிவிலே பொதுவாக என்னவாக முடிவடையும் என்று முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது. 38. இந்த நேரத்தில், இஸ்ரவேலுக்கு ஒரு மகத்தான காரியம் நடந்திருந்தது. இது அதனுடைய நள்ளிரவில் அந்தகாரமாய் இருந்தது. 39. பழைய ஏற்பாட்டில், கர்த்தருக்கு சித்தமானால், வருகின்ற ஆராதனைகளில் ஒருகால், பழைய ஏற்பாட்டில் ஏழு சபைக் காலங்கள் எப்படி மாதிரியாக இருந்தன என்பதை நான் காண்பிக்க விரும்புகிறேன். புறஜாதி சபையின் சபை காலங்களின் துவக்கத்தை போன்று அவர்கள் எப்படி சரியாக துவங்கினர் என்றும், அதைப் போன்ற ஒரு இருண்ட காலத்தினூடாக சென்று, பெந்தேகோஸ்தே காலத்தின் மகிமைக்குள்ளாக எப்படி வெளிவந்தனர் என்றும், யூத யுகத்தில்...சபையின் ஆரம்பத்தில் பரிசுத்த ஆவியின் பொழிதல் எப்படி இருந்தது என்றும் காண்பிக்கவுள்ளேன். அதன்பின்னர் மற்றொரு பறஜாதி சபையின் காலத்தினூடாக, ஒரு இருளின் காலத்தினூடாகச் சென்று, பின்னர் முடிவிலே, ஆயிர வருட அரசாட்சிக்குள்ளாக மீண்டும் வெளியே வருகிறது. 40. இப்பொழுது, எப்படியாய் அங்கே இந்த நூற்றாண்டுகளின் மத்தியில் திரும்பவும், இந்த பெரிய ஆகாப் ராஜா வல்லமையில் எழும்பினான். மேலும் அவன் மற்ற இஸ்ரவேல் இராஜாக்களின் நற்பெயரின் பேரில் ஒருவிதமாக பயணித்துக் கொண்டிருந்தான், அது ஒரு...ஆகாப், தானே, ஒருவிதமான ஒரு-ஒரு எல்லைக்கோடு விசுவாசியாய் இருந்தான். நான் அவ்வப்போது அந்தவிதமாக அவனை குறிப்பிட்டிருக்கிறேன், ஏனென்றால் அவன் வேலியின் இந்தப் பக்கத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்திலும், வேலியின் அந்தப் பக்கத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்திலும் இருந்தான். 41. அதைப் போன்று நிலையற்ற ஒரு மனிதனானால், நீங்கள் எங்கே நிற்க வேண்டும் என்பதை ஒருபோதும் அறிந்துகொள்ளவே மாட்டீர்கள். அல்லது, ஒரு கிறிஸ்தவனாயிருப்பதாக கூறிக்கொள்ளும் ஒரு நபர், அந்த நிலையற்றவர், அந்த நபரைக் குறித்து என்ன செய்ய வேண்டும் என்பதே உங்களுக்குத் தெரியாது. இன்றைக்கு அவர்கள் ஒரு கிறிஸ்தவராக இருக்கிறார்கள்; நாளைக்கு அவர்கள் எங்கே இருப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியாது. இன்றைக்கு சபையில், அவர்கள் களிகூர்ந்துகொண்டும் பாடிக்கொண்டும் தேவனைத் துதித்துகொண்டும் இருக்கிறார்கள்; நாளை, வெளியே குடித்துக்கொண்டும், வெறியாட்டத்திலும் பெண்களை சுற்றி ஓடிக் கொண்டும் இருப்பார்கள். அப்படியானால் அந்த விதமான ஒரு நபர் எந்தக் காரியத்தையும் செய்வது கடினமாய் இருக்கிறது. 42. ஒரு சிறுவனாக இருந்தபோது, எனக்கு நினைவிருக்கிறது, ஒருமுறை எங்களிடம் ஒரு-ஒரு வயதான குதிரை இருந்தது, அது எல்லா நேரத்திலும் எப்போதும் வேலிகளைத் தாண்டும். என்னுடைய வயதில், இருக்கிற அனேக புருஷர்களுக்கு, முன்னிருந்த குதிரை நாட்கள், இலேசான ஒற்றைக் குதிரை வண்டி நாட்கள் நினைவிருக்கும் என்று நான் நினைக்கிறேன். நானே பலமுறை, இங்கு இந்தத் தெருவில், ஒரு குதிரையை, ஒரு லேசான ஒற்றைக் குதிரை வண்டியை ஓட்டிக்கொண்டு வந்துள்ளேன். எனக்கு நாற்பத்தைந்து வயதாகிறது. எனவே, அவர்கள்...எனக்கு இந்த வயதான குதிரையை, நினைவிருக்கிறது, நீங்கள் ஒரு பசு மாட்டிற்கு நுகத்தை வைப்பது போல, நாங்கள் இந்த குதிரை வேலியிலிருந்து தாண்டி குதிக்காமல் இருக்க, ஒரு நுகத்தை இதனுடைய கழுத்தின் மேல் வைப்போம். அதுவோ எப்படியும் தாண்டி குதிக்கும். அது அந்த நுகத்தை அப்படியே சுற்றித் திருப்பி கீழேத் தொங்கவிடும். அது வேலியைத் தாண்டும். ஒரு நாள், அது... 43. எது அந்த வயோதிக குதிரையை கவர்ந்து கொண்டுடிருந்தது என்று நான் வியப்புற்றேன். அங்கு கீழே ஒரு பெரிய பள்ளம் இருந்தது. இப்பொழுது, அதுவோ உயர் ரக மணல் புல்லில், உயரமாக நின்றுகொண்டிருந்தது, ஓ, ஆனால் அது விரும்பினதோ... அங்கிருந்த அந்த ஒரு குழிக்குள் பழத்தோட்டப் புல்லின் சில கத்திகள் இருந்தன. அது அந்த வேலியைத் தாண்டி இந்தக் கம்பிகள் கண்ணாடிகள் இருந்த அந்த பள்ளத்திற்குள் குதித்து, அங்கே நாங்கள்...எங்களுடைய—எங்களுடைய குவியலில் இருந்த, அந்தப் பழத்தோட்ட புல்லினை வாய் நிறைய புசிக்க அங்கே சென்றது. நாங்கள் இன்னும் சில குதிரைகளை கொண்டு வந்து அந்தக் குதிரையை பள்ளத்திலிருந்து இழுத்தோம். அது உள்ளே விழுந்தபோது, அது மேலே மாட்டித் தொங்கினது. அது அங்கே வெளியே நின்றபோது, அது நடுங்கிக்கொண்டும் இரத்தம் கசிந்துகொண்டும், மேலும்-மேலும் அது எப்படியாய் இருந்தது, அது கிட்டத்தட்ட தன்னுடைய முழங்கால்வரை வளர்ந்துள்ள, உயர்ரக மணல் புல்லில் நின்றுகொண்டிருந்தபோது, அந்த பழத்தோட்ட புல்லினை ஒரு வாய் நிறைய அல்லது இருவாய் புசிக்க அந்நிலையை அடைந்தது. 44. நான் அந்த காட்சியை குறித்து அவ்வப்போது நினைத்துப் பார்த்திருக்கிறேன். "துரோகிகளுடைய வழியோ கரடு முரடானது.” அது புசித்துக்கொண்டு ஒரு அற்புதமான நேரத்தை அனுபவித்துக்கொண்டிருந்த இடத்தில் அப்படியே தரித்திருக்க மனதில்லாதிருந்தது, ஆனால்...அது அந்த மற்ற வித்தியாசமான வகையான கொஞ்சம் புற்களை ஒரு வாய் நிறையப் பெறுவதற்கு, அந்த வேலியைத் தாண்டி அந்த எல்லா காயங்களையும் அதைப் போன்ற வெட்டு காயத்தையும் பெறவேண்டியதாய் இருந்தது. இப்பொழுது, கிட்டத்தட்ட அந்த விதமாகவே ஜனங்கள் செய்கிறார்கள், அதாவது தேவனுடைய மேய்ச்சலின் வேலையைத் தாண்டுகிறார்கள். நீங்கள் அதை நம்பவில்லையா? வெளியே போகின்றனர், இன்றைக்கு வெளியே போய்; உள்ளே வருகிறார்கள். சபையில் ஒரு அற்புதமான நேரம் உண்டாயிருக்கிறது; அதன்பின்னர், நாளை அதைப் போன்று ஏதோ ஒரு காரியத்திற்காக விற்றுப்போடுகிறார்கள். அது இதை மிக கடினமாக்குகிறது. 45. ஆகாப் ஏறக்குறைய அந்த விதமான ஒரு நபராக இருந்தான். காற்று வீசின ஒவ்வொரு வழியிலும், அது இந்தப் பக்கமாக இருந்தாலும் அல்லது அந்தப் பக்கமாக இருந்தாலும், ஆகாப் தன்னுடைய பயணத்தை அமைத்திருந்தான். ஒரு குட்டி இளவரசியாய் இருந்த, ஒரு ராஜாவின் குமாரத்தியான, ஒரு யேசபேல் என்ற இளம் பெண்ணினால், அவனுடைய திருமணத்தில் அவன் எல்லா விதமான குழப்பத்தையும் அடைந்திருந்தான். பார்ப்பதற்கு மிகவும் அழகான, மிக அழகுள்ள ஸ்தீரி, ஆனால் அவளுடைய இருதயத்திலோ அவள் பொல்லாங் கானவளாய் இருந்தாள். அவள் ஒரு விக்கிரகாரதனைக்காரியாய் இருந்தாள், அவளே எல்லா இஸ்ரவேலருக்கும்... காரணமா யிருந்தாள். 46. இப்பொழுது, நான் எப்படியாவது ஒரு சில நிமிடங்கள் அங்கே ஒரு எல்லைக்கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன், அதுபோல, அங்கே உள்ள, தாய்மையின் பேரிலான எந்த மையத்திற்குள் நுழைவதற்கு, பாருங்கள். ஒரு மனிதன் விவாகம் செய்துகொள்ளத் தொடங்கும்போது; அந்த மாதிரியான ஒரு பெண், அவனுக்கு அந்த ஸ்திரீ...காண்பதற்கு அழகைவிட மற்றவற்றையும் உடையவளாக இருக்க வேண்டும். ஆத்துமாவும் சரீரமும் ஒன்றாக இணைக்கப்பட்ட ஒருவரையே, நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்; உண்மையாகவே உங்களுடைய நண்பராய் இருக்கப்போகின்ற, நண்பராக இருக்கின்ற ஒருவரை, தொடர்ந்து உங்களுடன் வாழ்விலும் தாழ்விலும் உறுதியாக இருக்கக்கூடியவரையே பெற்றுக்கொள்ள வேண்டும். 47. இப்பொழுது, ஆனால், ஆகாப், அவள் அழகாய் இருந்த காரணத்தால், அவன் அவளிடத்தில் விழுந்துபோனான், அதனால் திருமணம் செய்து கொள்கிறான் என்று, நான் நினைக்கிறேன். அவளைக் குறித்து வேறெந்தக் காரியமும் இருந்திருக்க முடியாது, ஏனென்றால், அவள் அவ்வளவு பொல்லாதவளாக இருந்தாள். அவள் அங்கே வந்தாள். அதன்பின்னர், உண்மையாகவே, அந்த விதமாக அவளோடு பிணைக்கப்பட்டு, அவளை நேசித்தான், ஏன், எல்லா இஸ்ரவேலரும் தேவனுக்கு விரோதமாக சென்று பாவம் செய்து, தேவனுடைய பலிபீடங்களை இடித்துப்போட இவன் காரணமாயிருந்தான்; பாகாலின் பலிபீடங்களையோ கட்டினான். அந்த நேரத்தில், அவர்கள் இஸ்ரவேல் முழுவதிலும் பாகால் வழிபாட்டை உடையவர்களாக இருந்தனர். 48. இப்பொழுது, அவனுடைய மனைவி நீதிமானாகிய நாபோத்தின்...காரணமாய் இருந்தாள். உங்களில் அநேகர் அவனைக் குறித்து வாசித்திருக்கிறீர்கள். எப்படியாய் அவன் நாபோத்தினுடைய தோட்டத்தை, வஞ்சனையினால் எடுத்துக் கொண்டான்; ஒரு பொய்யான, ஆணையிட்டு, அவனுக்கு எதிராக பொய் சாட்சிகளை வைத்திருந்தான். ஏனென்றால், அவள் தன்னுடைய கணவனுக்காக ஏதோ ஒரு காரியத்தைச் செய்ய விரும்பினாள்; அரண்மனை நிலத்திற்கு அருகில் இருந்த ஒரு தோட்டத்தை எடுத்துக்கொள்ள, ஒரு நீதிமானைக் கொன்றுபோட்டான். 49. இவை எல்லாவற்றையும், தேவன் உற்று நோக்கிக் கொண்டிருந்தார். எனவே ஒரு மகத்தான, வல்லமையுள்ள கர்த்தருடைய ஊழியக்காரனாய் இருந்த, தீர்க்கதரிசி, எலியா, தீர்க்கதரிசனமுரைத்து யேசபேலுக்கு என்ன சம்பவிக்கும் என்று அவளிடமே கூறினான். ஆகாபினுடைய சொந்த இரத்தத்தை நாய்கள் நக்கும் என்று எலியா அவனிடத்திலேயே கூறியிருந்தான். இப்பொழுது, தேவன் எந்த காரியத்தையாவது கூறியிருக்கும் போது..உண்மையாகவே, அவர்களுடைய நாட்களில், கர்த்தருடைய வார்த்தையானது நேரடியாக தீர்க்கதரிசியின் மூலமாக வந்தது. 50. “பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன், கிறிஸ்து இயேசு மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்." 51. எனவே, இது வார்த்தையாயிருக்கிறது. இதற்கு முரணாக எந்தக் காரியமாவது இருக்குமாயின், அதை அப்படியே விட்டுவிடுங்கள். புரிகிறதா? இப்பொழுது, இரண்டாவதாக, அவர் இன்றைக்கு தீர்க்கதரிசி, ஞானதிருஷ்டிக்காரர், போன்றோரினூடாக பேசுகிறார். ஆனால் முதலாவது இது, வார்த்தையாக இருக்கிறது. இப்பொழுது... 52. ஆகாப் இந்த பொல்லாங்கினை செய்திருந்தான். அவன் தொடர்ந்து செய்தான்; தேவன் அநேக வருடங்களாக ஜனங்களை ஆசீர்வதிக்கிறார். மேலும், முடிவிலே, ஆகாப் இஸ்ரவேலின் மேல் ராஜாவா இருந்தபோது, யோசபாத் யூதாவின் மேல் ராஜாவாயிருந்தான். 53. மேலும், அப்பொழுது, யோசபாத் ஒரு நீதிமானாக இருந்தான். அவன் ஆசாவின் குமாரனாய் இருந்தான். ஆசா ஒரு-ஒரு நீதிமானாக இருந்தான், அவன் விக்கிரகத்தின் பலிபீடங்களை எல்லாம் இடித்துப்போட்டான்; யெகோவாவின் பலிபீடங்களை கட்டியெழுப்பினான். அவர்கள் யூதேயாவில், வழக்கம்போல, ஒரு-ஒரு எழுப்புதலை, உடையவர்களாயிருந்தனர். 54. அதன் பின்னர் சிறிது காலம் கழித்து, யோசபாத் இல்லை சரியாகக் கூறினால், ஆகாப் அனுப்பப்பட்டான், மேலும் அவன் சிரியாவில், மற்றொரு துண்டு நிலத்தை கண்டுபிடித்து, அது அவனுக்கு சொந்தமானது என்று அவன் எண்ணினான், எனவே அவன் போய் அதைக் கைப்பற்றலாம் என்று எண்ணினான். எனவே யோசபாத் தன்னுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வருவானா என்று ஆகாப் இவனிடத்தில் கேட்டான். 55. மேலும், உண்மையாகவே, இப்பொழுது ஒரு பெரிய அபாயம் உள்ளது, பாருங்கள், அவர்கள் இந்த பெரிய ராஜா, ஆகாப் அங்கு இருந்ததை கண்டபோது, மேலும் அவர்கள் இந்த பெரிய ஒருவனான, யோசபாத் இங்கே இருப்பதையும் கண்டனர்; அவர்களில் ஒருவன் ஒரு வெதுவெதுப்பானவன்; மற்றவனோ ஆவியினால் நிரப்பப்பட்ட ஒரு மனிதன். நீங்கள் உங்களுடைய கூட்டணியை எப்படி அமைத்துக்கொள்கிறீர்கள் என்பதை கவனியுங்கள். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதையும், நீங்கள் உங்களை அவிசுவாசிகளோடு எப்படி இணைத்துக் கொள்கிறீர்கள் என்பதையும் கவனியுங்கள். குறிப்பாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த நாளில், உங்களை சுத்தமாக காத்துக் கொள்ளுங்கள். 56. சபை, எந்த ஒரு சந்தேகத்தின் நிழலுமின்றி, இது என் இருதயத்தில் எரிகின்றது என்று, நான் விசுவாசிக்கிறேன். அந்த காரணத்தினால் தான் இந்த ஐந்து இரவுகளாக, சீக்கிரமாகவே நான் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன்; மீண்டும் ஒருமுறை, அது சம்பவிப்பதற்கு முன்னர், வேதாகமத்தினூடாக, ஒரு முழுமையான அலசி ஆராய்தலை இந்த சபைக்கு கொடுக்கிறேன். 57. நாம் நிழல்களின் நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அது எந்த நேரத்திலும் சம்பவிக்கக்கூடும். காரியங்கள் சம்பவிப்பதற்கான நேரங்கள் வருகிறதை நாம் காணும்பொழுது; சத்துருவின் அதே அக்கிரமம், அதே அதிகாரங்கள். இந்த பனிப்புயல்களையும் மற்றும் சம்பவிக்கிற ஒவ்வொரு காரியத்தையும், இந்த எல்லா கொள்ளை நோய்களையும், பல்வேறுபட்ட எல்லா காரியங்களையும் நாம் பார்க்கிறோம். இந்த அணுகுண்டுகளின் தாக்குதல் மற்றுமுள்ள காரியங்கள் போன்றதான, இந்த குறுக்கீடுகளின் மூலமே இவையாவும் ஏற்பட்டுள்ளன. அவர்கள் இங்கே குழப்பமடைந்துள்ள எல்லா காரியங்களையும் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அவருடைய வார்த்தையை நிறைவேற்றும்படிக்கு, எல்லா பக்கத்திலும் தேவனுடைய பெரிய ஆய்வகத்தில் குழப்பமடைந்து கொண்டிருக்கின்றனர். அது சம்பவிக்கப்போகிறது. 58. எனவே, "பாவ மனிதன்" வல்லமையோடும், மிகுந்த வஞ்சனையோடும், எழும்புகிறான். என்னே. இந்தக் காலையில் ஒரு ஊழியக்காரர், ஆவியினால் நிரப்பப்பட்ட ஒரு மனிதன், மிருகத்தின் முத்திரையை எடுத்துக்கொண்டு அந்திகிறிஸ்து ரஷ்யாவாயிருந்தது என்று கூறுகிறதை நான் கேட்டேன். என்ன ஒரு பிழை. ஹு-ஹூ, ரஷ்யாவிற்கு அதனோடு எந்த சம்பந்தமும் இல்லை. இல்லை, ஐயா. அது வேதப்பிரகாரமானதாக உள்ளது. இப்பொழுது, நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த மகத்தான நேரத்தில், ஒரு எச்சரிப்பைக் கவனியுங்கள். 59. இப்பொழுது, இந்த யோசபாத், இஸ்ரவேலின் மகத்தான ராஜா, "வந்து, என்னைப் பார்" என்று கூறினதினால் ஒரு விதமான நல்ல உணர்வினைப் பெறுகிறான். அவன் அங்கே சென்றான். அவர்கள் அங்கே ஆடு மாடு, முதலியவற்றை எடுத்துக்கொண்டு பலி செலுத்தினர். எல்லா நேரத்திலுமே, ஆகாப்பினுடைய இருதயத்தில் அங்கே, அவன் ஒரு வஞ்சனைக்காரனாகவே இருந்தான், ஏனென்றால் அவன் அதை ஆராதித்துக் கொண்டிருக்கவில்லை... அந்த ஆடுகளையும் மற்ற காரியங்களையும் ஒரு உண்மையான இருதயத்தோடு பலியிட்டுக் கொண்டிருக்கவில்லை, ஏனென்றால், மொத்தத்தில், அவன் தன்னுடைய மனைவியினுடைய மார்க்கத்தின் பேரிலே அதிகம் சாய்ந்திருந்தான். 60. கவனியுங்கள், ஆகாப் யேசபேலை அந்த இஸ்ரவேலின் பெரிதான இருண்ட காலத்தில் விவாகம் செய்திருந்தபடியால், இன்றைக்கான ஒரு மாதிரியான, விக்கிரக ஆராதனையைக் அவன் இஸ்ரவேலுக்குள் கொண்டு வந்தான். வெறும் இருண்ட காலத்தில்; ஆதிகால அப்போஸ்தலர்களினூடாக நாம் வெளியே வந்தபோது, இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்று, இருண்ட காலங்களுக்குள்ளாக, ஆயிரத்து ஐநூறு வருடங்கள். ஆகாப் யேசபேலை மணந்து விக்கிரகாராதனையை இஸ்ரவேலுக்குள் கொண்டு வந்ததுபோல, பரிசுத்த ஆவியைக் கொண்ட சபையும் கொள்கைகளுக்குள்ளாக விவாகம் செய்துகொண்டு, விக்கிரகாராதனையைத் திரும்பக் கொண்டு வந்தது, இன்றைக்கு அது ஒரு கிறிஸ்தவ மார்க்கத்தின் ரூபத்தில் உள்ளது. புரிகிறதா? பாருங்கள், மிகவும் இருண்டதாக இருக்கிறது. இப்பொழுது அது ஒவ்வொரு நாளும் கீழே நகர்ந்து சென்றுள்ளது; ஒவ்வொரு சபைக் காலமும் அதே காரியத்துக்கு கீழே நகர்ந்து சென்று, பெரிய உச்சகட்டத்திற்கு, வெதுவெதுப்பான நிலைமைக்கு வருகிறது, வெதுவெதுப்பான லவோதிக்கியா சபைக் காலம். ஓ, நாம் என்ன ஒரு பயங்கரமான நேரத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 61. கவனியுங்கள். நான் மேற்கொண்டு செல்வதற்கு முன்பாக, நான் இங்கே முழுமையாக வெளிப்படுத்த விரும்புகிறேன். நான் மீண்டும் பண்டைய நாட்களை காண வாஞ்சித்துக் கொண்டிருக்கிற பண்டைய நாகரீகம் கொண்ட ஒரு பிரசிங்கியாராய் இருக்கிறேன். நான் மிகவும் சுகவீனமடைந்து இதைக் குறித்து களைப்புற்றுப் போகுமளவிற்கு, நான் மிக அதிகப்படியான இந்த ஆள்மாறாட்டத்தையும் ஹாலிவுட்டின் கவர்ச்சிகரமான சுவிசேஷத்தையும் கண்டிருக்கிறேன். ஆம், ஐயா. நான் பண்டைய நாகரிகத்தை காண விரும்புகிறேன். ஜனங்களுக்காக நாம் மிகவும் அழகான கிறிஸ்தவ மார்க்கத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோமே என்று நான் பயப்படுகிறேன்; அது ஒரு அபாயக் கோடாயுள்ளது. 62. இப்பொழுது, யோசபாத் இறங்கி வந்து, “ஓ, சரி, இந்தப் பெரிய இஸ்ரவேலின் ராஜா, நான் வெறுமனே...ஓ, நாம்...சரியாயிருக்கும்” என்று சிந்திக்கிறான். இந்த பெரிய எல்லா கவர்ச்சியின் மத்தியில், அவன் என்ன செய்தான்? பொதுவான இடத்தில், சத்துருவுடன் சண்டையிட செல்லும்படி, அவன் ஒரு கூட்டணியை அமைத்தான், ஏனென்றால் அவர்கள், "நாம் இருவரும் ஒரே ஜனங்கள்” என்றான். ஆனால் அவர்களால் அவ்வாறு இருக்கவில்லை. ஒன்று ஒரு ஆவினால் நிரப்பப்பட்ட குழுவாய் இருந்தது, மற்றொன்று ஒரு வெதுவெதுப்பான குழுவாய் இருந்தது. அவர்கள் ஒரே ஜனங்களாய் இருக்கவில்லை. இல்லை, ஐயா. உங்களால் இருக்க முடியாது... 63. இருளானது ஒளியோடு ஐக்கியங்கொண்டிருக்க முடியாது. இரவானது சூரிய வெளிச்சத்தின் பிரசன்னத்தில் இருக்க முடியாது. அந்த நேரங்களுக்கு இடையில், மிகவும் நம்பத்தகாத நேரம் அங்கு உள்ளது. சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருக்கிறபோது அல்லது உதயமாகிக் கொண்டிருக்கிற போது மிக நம்பத்தகாத நேரம் அங்கு உள்ளது. தெளிவாக பார்க்கும்படியான போதிய பார்வை இல்லை; உங்களுடைய மோட்டார் வாகனத்தின் மீதுள்ள வெளிச்சங்கள் நன்றாகவும் தெளிவாகவும் காண்பிக்காது. இருட்டாகவோ அல்லது வெளிச்சமாகவோ இருப்பதே மேலானதாகும். இயேசு, ‘அனலாயாவது அல்லது குளிராயாவது இருங்கள், வெதுவெதுப்பாக இருக்க வேண்டாம்” என்றார். வெறுமனே, அது ஒரு அபாயக் கோடாகும். 64. அதன்பின்னர் யோசபாத், அவன் வந்தபோது, அப்பொழுது இந்த பெரிய கூட்டணி அமைக்கப்பட்டது, அது தேவனைப் பிரியப்படுத்தவில்லை. கவனியுங்கள், இப்பொழுது எல்லாம் உற்சாகமும் கொண்ட, அவனுடைய நேரத்தில், “நான் இந்த ராஜாவோடு தயவு பெற்றுள்ளேன். மேலும், ஓ, நான்—நான்—நான் இந்த அண்டை வீட்டாரோடு ஐக்கியங்கொண்டிருக்கிறேன். நான் கொண்டிருப்பதோ...." 65. பாருங்கள், கவனமாயிருங்கள், அதாவது, சபை. புரிகிறதா? அதுதான் இங்கே இந்தக் கூடாரத்தைச் சுற்றிலும், மற்றதைச் சுற்றிலும் உள்ள எல்லா தொல்லைகளுக்கும் காரணமாகிறது. புரிகிறதா? நீங்கள் எதனோடு கலந்துகொண்டிருக்கிறீர்கள் என்பதைக் குறித்து ஜாக்கிரதையாயிருங்கள். புரிகிறதா? வெளியே வாருங்கள், ஒன்று கிறிஸ்துவுக்காக இருங்கள் அல்லது அவருக்கு எதிராக இருங்கள். புரிகிறதா? 66. இப்பொழுது இந்த நபர் கூட்டணியை அமைத்து, அவன் ஏதோ ஒரு பெரிய காரியத்தை செய்திருந்ததாக அவன் எண்ணிக் கொண்டான். அதே சமயத்தில், அவன், "அங்கே இப்பொழுது, நாம் செல்வதற்கு முன், நாம் இதைக் குறித்து கர்த்தரிடத்தில் கலந்தாலோசிக்க வேண்டுமல்லவா?" என்று கேட்டான். இப்பொழுது யோசபாத் தன்னுடைய தவறிலும், அதாவது அவன் இந்த ராஜாவினிடத்தில் அங்கே சென்றிருந்தும், தனக்குள் போதுமான மார்க்கத்தை உடையவனாய் இருந்தான், ஆனால் அவன், “சரி, நாம் கர்த்தரிடத்தில் கொஞ்சமாவது கலந்தா லோசிக்க வேண்டும்” என்று நினைக்கும்படி தனக்குள் போதிய மார்க்கத்தை உடையவனாய் இருந்தான். 67. இப்பொழுது, ஆகாாப் ஒரு வார்த்தையும் கூறாமல் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தான்; தன்னுடைய சொந்த அறிவுத்திறமற்ற, சரீரப்பிரகாரமான, காரியங்களை செய்வதற்குரிய மானிட வழியில் இருந்தான். 68. நான் இங்கே யோசிக்கிறேன், சபையானது, அப்படியில்லா திருந்திருந்தால், ஏராளமான சமயங்களில், நாம் தவறுகளை செய்துள்ளோம். அதைக் கண்டுபிடித்து, “சரி, இது இந்த விதமாக இருக்க வேண்டும்,” என்று கூறுகிறோம், நாமோ அதை அந்த விதமாக அமைத்தோம். 69. இன்றைக்கு அமெரிக்க சுவிசேஷம் முழுவதுமாக அப்படித் தான் இருக்கிறது என்று நான் கருதுகிறேன், அதாவது நாம் அதை ஒரு வடிவத்தில் அமைத்துள்ளோம், அது ஹாலிவுட் சுவிசேஷம், முழுவதும் கவர்ச்சியை பற்றியது என்றே, நான் கூறுவேன். இன்றைக்கு, சுவிசேஷகர் மேடைக்கு வருகிறதை நாம் கவனிக்கிறோம், மேலும், என்னே, அவர் எல்லாவற்றிலும் மிகைப்படுத்திக்கொண்டு, அவர் பிரசங்கத்தை துவங்குவதற்கு முன்பாகவே ஏராளமான நகைச்சுவைகளை சொல்கிறார், அதைப் போன்ற காரியங்களை செய்து தொடர்ந்து அவ்வாறே செய்து, பிரசங்க பீடத்தில் ஒரு கோமாளியைபோல நடந்து கொள்கிறார். பீட அழைப்பு விடுவதற்கான நேரம் வருகிறபோது, பீட அழைப்பை ஏற்படுத்துவதற்கான எந்த உத்தமத்தையும் கூட ஜனங்கள் காண்கிறதில்லை. அது உண்மை. அந்த காரணத்தினால் தான் உலகம் இன்றைக்கு வெதுவெதுப்பான நிலைமையை பெற்றுள்ளது, அது அதில்தான் உள்ளது. 70. இன்றைக்கு, நான் வியப்புறுகிறேன். அது வெறுமனே, இன்றைக்கு, நான்...சபை, நம்முடைய பையன்களை பள்ளிக்கு அனுப்பி, உளவியல், அது போன்றவற்றை கற்கும்படிக்கும், எப்படி ஒரு திட்டத்தை ஏற்படுத்துவது என்பதை அறிந்துகொள்வதற்கும், பிரசங்க பீடத்தில் ஏறுவதற்கும், நம்முடையதை ஏற்பாடு செய்வதற்கும்...நாம் முயற்சித்துள்ளோம். இந்த செய்தி ஜனங்களைக் கவர்ந்து, அவர்களுடைய கவனத்தை ஈர்க்கும் வகையில் மிகவும் கவர்ச்சிகரமாக கவர்ச்சிகரமாக உள்ளது. மேலும் பல சிறந்த உளவியலாளர்கள் போதகர்களாக வெளியே சென்று, நாடகமாக்கி மொத்தமாக எதையாவது கூறுகிறார்கள். மேலும் நான் அப்படியே வியப்புகிறேன், அவர்கள்...அதாவது...நாம் எப்பொழுதுமே அழகைக் குறித்தும் சபையின் கவர்ச்சியைக் குறித்தும் சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் அவர்களிடம், “ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்” என்று சொல்லத் தவறுகிறோம். உள்ளே வருகின்ற அந்த நபருக்காக, சபையின் அழகை நாம் மிகவும் அழகாக்கவில்லையா என்று நான் வியப்புறுகிறேன். 71. உதாரணமாக, பாப்ட்டிஸ்ட் சபை இன்றைக்கு, "44-ல் பத்து இலட்சம்” என்ற ஒரு விளம்பர கவர்ச்சி வாசகத்தைப் பெற்று, ஆயிரக்கணக்கில் உறுப்பினர்களையும் சேர்த்துக்கொண்டு, பல்லாயிரக்கணக்கில், மனமாற்றமடையாத, ஜனங்கள் உள்ளே வந்து சபையில் சேர்ந்துகொள்ளச் செய்கிறது. அப்படிப்பட்ட உறுப்பினர்களை உள்ளே சேர்த்துக் கொள்வது இயேசு கிறிஸ்துவின் சபைக்கு கடனாக உள்ளது. அவர்கள் இன்னமும் குடிக்கிறார்கள். அவர்கள் இன்னமும் புகைப்பிடிக்கிறார்கள். அவர்கள் இன்னமும் சூதாடுகிறார்கள். அவர்கள் இன்னமும் பொய் சொல்லுகிறார்கள். 72. அவர்கள் சபைக்கு வந்து, ஒரு கூட்ட ஹாலிவுட் சுவிசேஷகர்கள் எழும்பி, ஏராளமான கவர்ச்சியை காண்பித்து, மேடையின் மேல் ஏராளமான கருவிகளை மேலும் கீழும் அமைத்து, மகிழ்விக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். 73. எப்பொழுது, அவர்கள் ஒரு பழைய பாணியைக் கொண்டிருக்க வேண்டும், தேவனிடத்தில்-முதலில், கூக்குரலிட்டு அங்கே பீட அழைப்பினை விடுக்க வேண்டும்; அங்கே புருஷர்களும் ஸ்திரீகளும் கவர்ச்சியாகவோ, அல்லது ஓடி வந்து ஒரு கோமாளியாக நடிக்க வருகிறதில்லை, ஆனால் பீடத்தண்டை முழங்கால்படியிட்டு அங்கே இயேசு கிறிஸ்துவின் மரணத்தை, அவர்களுக்காக மரித்ததையும், அவர்கள் மீண்டும் உத்தமமாக தேவனோடு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் உணர வேண்டும். 74. அந்த விதமான ஒரு நேரத்தில் நாம் ஜெபித்துக் கொண்டிருக்க வில்லையா என்று நான் வியப்புறுகிறேன், பெரிய சுவிசேஷர்களை நாம் எடுத்துக்கொள்ளும்போது, இன்றைக்கு தேசங்களை கடந்து சென்று கொண்டிருக்கிற அநேகரைப்போல, உளவியலை கற்க்கிற புகழ்பெற்ற சுவிசேஷகர்கள் சபைக்கு ஜனங்களை கவர்ந்திழுக்கிறார்கள். ஆனால் நீங்கள் அவர்களை ஒருமுறை சபைக்குள்ளாக அழைத்தப் பிறகு அதன்பின்னர் நீங்கள் அவர்களுக்கு என்ன செய்யப்போகிறீர்கள்? அவர்கள் சபைக்குள் நுழைந்த பிறகு அவர்களுக்கு சம்பவிக்கப்போகிறது என்ன- என்ன? அப்படியே சபையில் சேர்ந்துகொண்டு, அவர்கள் சபைக்குள் வந்தபோது கொண்டிருந்த அதே வாஞ்சையோடும் அதே பாவத்தோடும் திரும்பிச் செல்கிறார்கள். அவர்கள் அதே விதமாகவே திரும்பி செல்லுகிறார்கள். அந்த காரணத்தினால்தான், இன்றைக்கு, உலகமானது உற்று நோக்கி, “பாருங்கள், அந்த மனிதன் இந்த மார்க்கத்தை பெற்றுள்ளதால், இந்த நபர் இந்த மார்க்கத்தை பெற்றுள்ளதால்..." என்கின்றனர். 75. நாம் இன்றைக்கு அதை மிகவும் எளிமையாக்கியுள்ளோம் என்பதற்கு நான் பயப்படுகிறேன். அது, நான் விரும்புகிறேன்... நான் நினைக்கிறேன், சந்தோஷம், நிச்சயமாகவே, எல்லா சந்தோஷங்களும் இயேசு கிறிஸ்துவில் இருக்கின்றன என்று நான் விசுவாசிக்கிறேன். அது உண்மை. அது சந்தோஷமும் மகிழ்ச்சியுமாய் இருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். ஆனால் நினைவிருக்கட்டும், சகோதரனே, அது மரணவேதனையும் துன்பமும் மற்றும் சிலுவையின் வழியாயும் உள்ளது. நீங்களும் கூட அதை உணர வேண்டும். அது உண்மை. நாம் அதற்கு சற்று மிகவும் மிருதுவாக- மிகவும் மிருதுவாக வர்ணம் பூசி இருந்திருக்கிறோமா என்று நான் யோசிக்கிறேன். 76. உதாரணமாக, நான் பார்த்துக் கொண்டிருந்தபோது, என்னுடைய மனைவி வைத்தாள்...நான் புறப்படத் துவங்கியபோது, அவள் என்னுடைய கோட்டில் இந்த காலை ஒரு ரோஜா மலரை வைத்தாள். அவள், “நீங்கள் அதை அணிந்துகொள்ள வேண்டும். உங்களுடைய தாயார் உயிரோடு இருந்துகொண்டிருக்கிறார்கள்” என்று கூறினாள். அப்பொழுது நான், “ஓ, தேனே, எனக்குத் தெரியாது” என்று கூறினான். 77. அன்னையருடைய தினம் அற்புதமானது, ஆனால் அது உலகத்தைப் போன்று உள்ளது, அவர்கள் அந்தக் காரியத்தை வணிகமயமாக்கியுள்ளனர், வெறுமனே பூக்கள் மற்றும் அது போன்ற காரியங்களையே விற்கின்றனர். ஏன், அது அன்னையருக்கு ஒரு அவமானமாய் உள்ளது. ஏன், என்னுடைய தாயார் வருடத்தின் ஒவ்வொரு நாளும் என்னுடைய தயாராக இருக்கிறார், ஆம், ஐயா, வெறுமென ஒரு நாள் மட்டுமல்ல. நானோ, “நீங்கள் உங்களுடைய தாயாரை நேசிக்கிறீர்களா?” என்று கேட்கலாம். 78. "நான் கடந்த அன்னையருடைய தினத்திற்கு ஒரு பூங்கொத்தை அவளுக்கு அனுப்பினேன்." பாருங்கள், சகோதரனே, அவள் ஒவ்வொரு நாளும் தாயாக இருக்க வேண்டும். ஆனால் இதுவோ வணிகமாக உள்ளது. 79. அந்த மலர் அழகாக இருக்கிறது. எனக்கு ஒரு அழகான மலர் பிடிக்கும். நான் செய்கிறது போலவே அதைக் குறித்து நினைக்கிறேன்...அந்த மலர் எவ்வளவு அழகாக இருக்கிறது. அது மலர்கிறது. அது மனம் கொண்டுள்ளது. வழிப்போக்கர் அதன் வாசனையை முகருகின்றனர். மிருகங்கள் வந்து அதனுடைய வாசனையை முகருகின்றன. ஆனால், இப்பொழுது பாருங்கள், அது அழகாக இருக்கிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சபையைப்போல, அது மிகவும் மகிமையான காரியமாக இருக்கிறது; தெய்வீக சுகமளித்தல்கள், வல்லமைகள், அதிசயங்கள், அடையாளங்கள், அற்புதங்கள், பாவத்திலிருந்து விடுதலை. அது ஒரு அழகான ஸ்தலமாக இருக்கிறது. ஆனால், பாருங்கள், அந்த ரோஜா...எல்லா இயற்கையையும் போலவே, சபைக்கு, நாம் வரவேண்டும். 80. அந்த ரோஜா, அழகாக இருப்பதால், தேசத்தில் உள்ள ஒவ்வொரு பசுவும் தன்னால் முடிந்தால் அதனை நக்கும். ஆனால் இயற்கையோ, முட்கள் என்று அழைக்கப்படுகிற, சிறு ஈட்டிகள், ஒரு சிறிய முட்கள் வெளியே குத்தி நிற்கும்படி அங்கே உருவாக்கியுள்ளது, அவை அவற்றை விட்டுவிடுகின்றன. அதுவே இதனைப் பாதுகாக்கிறது. சரியாக அதுவே. 81. நான் நினைக்கிறேன், இன்றைக்கு, இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கான தேவனுடைய வார்த்தையை நாம் பெற்றிருக்கவில்லையென்றால், தேவனுடைய பரிசுத்தத்தின் வல்லமையின் அழுகைச் சுற்றிலும், நாம் தேசத்தில் உள்ள ஒவ்வொரு பசுவையும் அதனை நக்கி அழித்துப்போட விடப்போகிறோம். அது இதனைக் கசக்கிப்போடும். அது சபைக்கு ஒரு கடனாக இருக்கும். அது உண்மையே. 82. நான் நினைக்கிறேன், இன்றைக்கு, நமக்குத் தேவையே அதிகமான பண்டைய நாகரீகமும், தேவனால் அழைக்கப்பட்ட ஊழியர்களுமே, பயிற்சியற்ற, அதிக கல்வி இல்லாதவர்களாகவும் இருக்கலாம், ஆனால் அதுவோ ஜனங்களைப் பிடித்து பீடத்தண்டை கொண்டு வந்து, அங்கே வியாகுலப்பட வைக்கும். ஒரு மகிழ்ச்சியோடும் சிரிப்போடும், மெல்லும் பசை மிட்டாய்யை மென்றுகொண்டு தங்களுடைய பெயர்களை ஒரு காகிதத்தில் போட்டுக்கொள்பவர் அல்ல; ஆனால், சகோதரனே, புருஷரும் ஸ்திரிகளும் தங்களுடைய பாவங்களிலிருந்து முழுவதுமாக மனந்திரும்பி தேவனிடத்தில் நெருக்கமாக வரும்வரையில், பண்டைய கதறுதலும் மரித்தலும் இருக்க வேண்டும். ஆமென். 83. நான் உங்களுக்கு சொல்லுகிறேன், நாம், “கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள், உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள்” என அது போன்ற யாவற்றையும் பெற்றுவிட்டோம். அதெல்லாம் சரிதான், சகோதரனே, ஆனால் அது பாவத்தை வெளியேற்றுகிறதில்லை. 84. நீங்கள் முதலாவது மனந்திரும்பி, சரியாகி, அங்கே முழங்காற்படியிட்டு உண்மையாகவே கதறியிருக்க வேண்டும். பண்டைய நாகரீக ஜனங்கள் நடைபிரகாரங்களினூடாக நடந்து, வீதிகளில் மேலும் கீழும் ஓடி அழுது, தங்களுடைய அண்டை வீட்டார் இடத்தில் பேசின காலங்களை என்னால் நினைவு கூற முடிகிறது. அது அந்த நாளின் கிறிஸ்தவர்களாக இருந்தனர், கர்த்தருடைய காரியங்களை குறித்து அவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தனர். 85. மேலும், இன்றைக்கு, நாம் நம்முடைய பெயரை சபை புத்தகத்தில் பதிவு செய்துகொண்டு, வெளியே போய் வீட்டில் தரித்திருந்து, அதை குறித்து ஒரு வார்த்தையும் ஒருபோதும் கூறுகிறதில்லை. அக்கறையற்றிருக்கிறோம். "நாம் சபையைச் சேர்ந்துள்ள வரை, அது சரிதான்.” ஜனங்களே, அங்கே நாம் தவறாக இருக்கிறோம் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். சோதித்துப் பாருங்கள். ஏனென்றால், அது நியாயத்தீர்ப்பில் நிற்காது. இல்லை, ஐயா. அது நிற்காது. 86. ஒன்றுமே இல்லாமல், “என்னை பின்பற்றுகிறவன், தன்னைத் தான் வெறுத்து தன் சிலுவை எடுத்துக்கொண்டு அனுதினமும் மரிக்கட்டும்.” அங்கேயே சிலுவையில், மரிக்கும் வரை தரித்திருங்கள். அது உண்மை. வேதனையாயிற்றே! "அந்த விதமாகவே, நான் அந்த வழியை,” “கர்த்தருடைய நிந்திக்கப்பட்ட சிலருடன் ஏற்றுக் கொள்வேன்” என்று நீங்கள் பாடுகிறீர்கள். 87. நாம் என்னே ஒரு நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றே, இன்றைக்கு நான் நினைக்கிறேன்! அதாவது, சுவிசேஷத்தை, அவர்கள் அதை மகத்தான பெரிய பிரகாசமான விளக்குகளில் வைத்து, மேலும் அவர்கள் முயற்சிப்பதோ... சுவிசேஷகர் பட்டணத்துக்குள் வருவதை நீங்கள் காணும்போது, நீங்கள் வியப்புறுகிறீர்கள். நான், என்னுடைய கூட்டங்களும் அதே விதமான குற்றத்துக்குள்ளாய் இருந்து வருகின்றன. அது உண்மையே. சில நேரத்தில், யார் பட்டணத்திற்குள் வருகிறது என்று நான் வியப்புறுகிறேன், சுவிசேஷகரா அல்லது இயேசு கிறிஸ்துவா? ஏன், அவர்கள் செய்வதோ.... 88. அண்மையில், நான் இங்கு ஒரு இடத்திற்கு சென்றிருந்தேன், அங்கு ஒரு குறிப்பிட்ட சுவிசேஷகர் வரப்போவதாக இருந்தது. இயேசுவின் நாமம்...ஏன், “இந்த வேளைக்கான மனிதன்,” இதனைக் கொண்ட மனிதன், அதனைக் கொண்ட மனிதன் என்று, அவர்கள் சுவிசேஷனின் படத்தை வைத்திருந்தார்கள். 89. நான், சில சமயங்களில் என்னுடைய ஊழியத்தைக் குறித்தும், ஜனங்கள் வருகிறதை காண்பதைக் குறித்தும் எண்ணிப் பார்க்கிறேன். மேலும் நான் ஒரு உணவக விடுதி அறைக்குள் சென்று, "தேவனே, ஜனங்கள் யாரைக் யாரைக் காண வருகிறார்கள், என்னையா அல்லது உம்மையா?” என்று கேட்பேன். புரிகிறதா? “அவர்கள் என்னைக் காண வந்து கொண்டிருந்தால், அவர்கள் இழக்கப்பட்டுப் போவார்கள்; ஆனால், ஓ தேவனே, என்னைக் கிழித்துப்போட்டு, என்னை அப்புறப்படுத்தும். நான் உம்மைப் பிரதிநிதித்துவப்படுத்த விரும்புகிறேன், அந்த ஒருவருக்கு முன்பாகவே என்றோ ஒரு நாள் நாங்கள் நிற்போம், நடுங்கின கரங்களோடு நடுங்கிக்கொண்டு, பலவீனமான சரீரத்தோடு உம்மை நோக்கி பார்த்துக்கொண்டிருப்போம். உம்முடைய தீர்மானத்தினால் என்னுடைய ஆத்துமா தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது என்று அறிவேன்." நாம் கிறிஸ்துவை உயர்த்துவோமாக. 90. இன்றைக்கு, நீங்கள், “சரி, நான் பாப்டிஸ்டை சேர்ந்தவன். நான் ஒரு மெத்தடிஸ்ட். நான் கூடாரத்தை சேர்ந்தவன். நான் இதைச் செய்கிறேன்” என்று கூறுகிறீர்கள். ஓ, அதற்கு இதனோடு எந்த சம்பந்தமும் இல்லை; ஒரு காரியமும் இல்லை. நான் சில நேரத்தில் வியப்புறுகிறேன். 91. இங்கே அண்மையில், இந்த பட்டணத்தில் நடக்கப்போவதாக இருந்த குறிப்பிட்ட தொடர் கூட்டத்தைக் குறித்த, ஒரு-ஒரு விளம்பரத்தை நான் கண்டேன். அந்த மனிதனின் வார்த்தை, அந்த மனிதனுடைய பெயர் மிகப் பெரிய எழுத்துக்களில் இந்த விதமாக, சுற்றிலுமாய் இருந்தது. மேலும் அடியில், ஒரு சிறு மூலையில், இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கிறார் என்று போடப்பட்டிருந்தது,” கீழே மூலையில் இருந்தது. பார்த்தீர்களா? 92. அவர்கள் கிறிஸ்துவினிடத்திலிருந்து எல்லா பரிசுத்தங் களையும் எடுத்துவிட்டு, ஏதோ ஒரு மனிதனின் மேல், அல்லது ஏதோ ஒரு சபையின் மேல், அல்லது ஏதோ ஒரு ஸ்தாபனத்தின் மேல் வைத்துவிட்டனர். சகோதரனே, நான் உங்களுக்கு சொல்லுகிறேன், நீங்கள் சபையின் மூலமாக...கவர்ச்சிகரமான, ஹாலிவுட் கோமாளியைப், போன்றவையே பெற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால், இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தில், அவர் ஒருவரே மகிமைப்பட வேண்டும். அது உண்மையே. இப்பொழுது, அதுதான் சத்தியம், என் சகோதரனே சகோதரியே. 93. என் மீது கோபங்கொள்ள வேண்டாம். நான் உங்களுக்கு பிரசங்கித்துக்கொண்டிருக்கிறதை சற்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நான் என்னுடைய வாழ்க்கையில் பிரசங்கிக்கும் கடைசி கடைசி பிரசங்கம் இது என்பதைப் போன்றே நான் பிரசிங்கிக்க விரும்புகிறேன். நான் பிரசங்கிக்கும் ஒவ்வொரு பிரசங்கத்தையும், மரித்துக்கொண்டிருக்கிற ஒரு மனிதனான நான் மரித்துக்கொண்டிருக்கிற மனிதர்களுக்கு பிரசிங்கப்பதைப் போலவே நான் பிரசங்கிக்க விரும்புகிறேன். மேலும், நான்; என்னுடைய வெளிச்சம் ஒவ்வொரு நாளும், மங்கிக்கொண்டிருக்கிறது; உங்களுடையதும், கூட. நாம் அழிவுக்கேதுவாக மரித்துக்கொண்டிருக்கிறோம். இந்நாட்களில் ஒன்றில், நாம் ஜீவனுள்ள தேவனை சந்திக்க வேண்டும், நாம் இதைக் குறித்து ஆழ்ந்த உத்தமத்தில் இருப்பது மேலானது. 94. வெறுமனே ஒரு வசீகரத்தில், தொடர்ந்து சென்று, சபையைச் சேர்ந்து, இங்கும் அங்கும் போய், இந்த விதமாக மற்றும் அந்த விதமாக நடந்துகொள்கிறோம். 95. நாம் நம்முடைய வீடுகளில் இரவும் பகலும் தேவனை நோக்கிக் கூப்பிடுகிற, பண்டைய மாதிரியான ஜெபக்கூட்டங்களை கொண்டிருப்பது நல்லதாகும். நாளானது சமீபித்து விட்டது, "இடுக்கமான நேரம், தொல்லையின் நேரம்.” வேதம், "ஒரு அந்தகாரமான நாள்” என்று கூறிற்று. நாம் அதில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 96. இந்த பெரிய மனிதன் அங்கே உற்சாகத்தில் எப்படி கீழே இறங்கிவிட்டான். அவன் தன்னை வெதுவெதுப்பானவைகளோடு, எல்லைக்கோடுகளோடும் இணைத்துக்கொண்டு, அவன் ஏதோ பெரிதான ஒன்றை செய்து கொண்டிருப்பதாக எண்ணிக் கொண்டு, தேவன் தன்னை ஆசீர்வதித்து கொண்டிருந்தார் என்று எண்ணிக்கொண்டான். மேலும் அது சரி என்று தெரியாமல், அப்பொழுது அவன் இந்த எல்லா குழுவையும் தன்னோடு கொண்டு வந்து கொண்டிருந்தான். என்ன? “இங்கே யூதா, நம்முடைய சிறிய குழு, இஸ்ரவேலின் பெரும் படைகளோடு வந்து தங்களை இணைத்துக்கொள்ளும். நாம் என்ன ஒரு வல்லமையான ஜனங்களாய் இருப்போம்." 97. அங்கு தான் உங்கள் காரியமே உள்ளது. அதுதான் அந்திக் கிறிஸ்துவை உள்ளே கொண்டு வர எப்பொழுதும் பிசாசு பயன்படுத்திக் கொண்டிருக்கிற வஞ்சகத்தின் முறையாய் உள்ளது; நான் இதற்கு உறுதுணையாக நின்று கொண்டிருப்பதுபோலவே. "நாம் நம்முடைய முயற்சிகளை ஒன்றாக இணைப்போம்." நம்மால் அதை செய்ய முடியாது. இரண்டுபேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய, அவர்கள் எப்படி ஒருமித்து நடந்துபோக முடியும்? 98. அமெரிக்க ஐக்கிய நாடுகள் முன்பு ரஷ்யாவோடு இணைந்தபோது அதையே, அதே அனுபவத்தையே அதே தவறை செய்தது. அந்த நேரத்தில் அவர்கள் கிட்டத்தட்ட யுத்தத்திற்கு தயாராக இருந்தனர், ரஷ்யாவோடு தங்களை இணைத்துக்கொண்டனர். இப்பொழுது நமக்கு என்ன கிடைத்தது என்று நீங்கள் பார்க்கிறீர்களா, நீங்கள் காணவில்லையா? அவர்கள் நம்முடைய ஆகாய விமானங்களையும், நம்முடைய எல்லா ரகசியங்களையும், நம்முடைய அணுகுண்டுகளையும் பெற்றுக்கொண்டு, அதை திருப்பி நம் மீது வீசுவதற்கு அங்கே ஒவ்வொரு காரியமும் உள்ளது. அதே காரியமே ஆவிக்குரியப்பிரகாரமாகவும் செல்கிறது. 99. யோசபாத் இந்தக் கூட்டணியை அமைத்துக் கொண்ட பிறகு, அதன்பின்னரே அவர்கள் கலந்தாலோசித்தனர் என்பதை, நாம் கண்டறிகிறோம். இப்பொழுது கவனியுங்கள், வெளிப்புற உலகத்தை கவனியுங்கள், அவனோ, “நிச்சயமாகவே, நாம் இங்கு ஏராளமான தீர்க்கதரிசிகளை உடையவர்களாக இருக்கிறோம். நாம் அவர்களை ஒரு வேதாகம் கருத்தரங்கு நிறையப் பெற்றுள்ளோம்” என்று கூறினான். 100. பயிற்றுவிக்கப்பட்டிருந்த அந்த நபர்களை, உளவியலை அறிந்திருந்தவர்களை, அது குறித்து எல்லாவற்றையும் அறிந்திருந்த அவர்களை அழைத்து வர அவர்கள் சென்றனர். “இப்பொழுது வாருங்கள், நாங்கள் கர்த்தரிடத்தில் கேட்டு கலந்தாலோசிக்கப்போகிறோம்” என்றனர். 101. அவர்கள் யாவரும், உண்மையாகவே, தங்களுடைய மாம்சப்பிரகாரமான இறுமாப்பு சிந்தை கொண்டு, அங்கு வந்து, "இப்பொழுது, பாருங்கள், நாம்.. நீங்கள் போகலாம். கர்த்தர் உங்களோடு இருக்கிறார், கர்த்தர் உங்களுக்கு அந்த துண்டு நிலத்தை அங்குத் தரப்போகிறார். அதாவது அது உங்களுடையதாக இருக்கப் போகிறது. நீங்கள் சீரியர்களை மிகவும் பின்னுக்குத் தள்ளப்போகிறீர்கள். நீங்கள் அதை செய்யப்போகிறீர்கள்” என்றனர். அவர்களில் ஒருவன் தனக்குத் தானே ஒரு பெரிய ஜோடி இரும்பு கொம்புகளை உருவாக்கிக் கொண்டு, இப்படி சுற்றி ஓட ஆரம்பித்து, "இப்படித்தான், நீங்கள் அந்த சீரியர்களை விரட்டப் போகின்றீர்கள்” என்றான். 102. ஆனால், யோசபாத், அந்த வடிகட்டிய முட்டாள்தனமான கோமாளித்தனத்தை பொறுத்துக்கொள்ள, இன்னும் கொஞ்சம் ஆவிக்குரியவனாய் இருந்தான். அது உண்மை. 103. தேவனே, எங்களுக்கு இன்னும் சில யோசபாத்களைத் தாரும், இங்கே சுகவீனமும் சோர்வுமுற்றிருக்கிற இந்த ஹாலிவுட் கோமாளித்தனம் உள்ளது. அது உண்மை, அவர்கள் இல்லாத ஏதோ ஒன்றாக இருக்கும்படி நடித்து, அவ்வாறு செய்கிறார்கள்; உருவாக்குதல், நாடகமாக்குதல், உள்ளே இழுத்துக் கொள்ளுதல். அதன பின்னர் அவர்கள் உள்ளே வரும்போது, நீங்கள் உள்ளே நுழைந்தபோது உங்களுக்கு என்ன கிடைத்தது? ஒரு மனிதனிடம், "ஒரு பாலைவனத்திற்குள் நீந்த வா” என்று கேட்பது போல. பின்னர் துக்கங்களை ஏற்படுத்துவதற்கு உங்களுடைய தலையில் வளைகுடா மணலைத் தவிர வேறு ஒன்றுமில்லை. 104. இப்பொழுது கவனியுங்கள், உங்களால் அவர்களுக்கு என்ன கொண்டு வர முடியும்? ஒரு குறிப்பிட்ட பெண்மணி அன்றொரு நாள் என்னிடத்தில், “ஒரு மனிதன், 'நான் சபைக்கு செல்வேன், ஆனால் நான் சபைக்கு செல்லுபோது நான் என்ன—என்ன பெற்றுக்கொள்வேன்? என்று கேட்டான்.' அதற்கு, 'அவர்கள் செய்வதெல்லாம் இரவு உணவையும், மற்றும் அவர்கள்...இதைக் குறித்தும், அதைக் குறித்தும் இன்னும் மற்றதைக் குறித்தும் ஏற்பாடு செய்வதுதான்' என்று பதிலளித்தானாம்” என்று கூறினாள். அப்பொழுது அந்த பெண்மணி, "அவரை எங்கே அனுப்புவது என்று எனக்குத் தெரியாததால் நான் பேசாமல் நின்றுவிட்டேன்” என்று கூறினாளாம். அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. மேலும், “என்னால் அவர்கள் உண்மையாகவே பண்டையை நாகரீக பாட்டுக்களைப் பாடுகிற சபையையும் மற்றும் தெய்வபக்தியாய் ஜீவிக்கின்றவர்களையும் கண்டறிய முடிந்தால் நலமாய் இருக்கும்” என்றாளாம். 105. பிள்ளைகள் பசியாய் இருக்கிறார்கள், அவர்கள் ஒரு குப்பைத் தொட்டியில் இருந்து புசிப்பார்கள். உண்மையான ஜீவனுள்ள தேவனுடைய...வார்த்தையை அவர்களுக்கு போஷிப்பது ஜீவனுள்ள தேவனுடைய சபையைப் பொறுத்ததாயுள்ளது. 106. அங்கே, அந்த எல்லா கவர்ச்சியான காரியத்திலும், யோசபாத், "இன்னும் ஒருவன் இருக்கவில்லையா?” என்று கேட்டான். 107. “இன்னும் ஒருவனா?” என்று ஆகாப் கேட்டான். “சரி, இன்னும் ஒருவனோடு நீ என்ன செய்ய வேண்டும்? நாம் மிகச் சிறந்த நானூறு பேர்களை, தேர்ந்தெடுக்கப்பட்ட, கல்வி பயின்ற, உயரிய நிலையில் போஷிக்கப்பட்டு, அங்கே தேசத்திலேயே மிகச் சிறந்த உடை உடுத்தியிருக்கின்றவர்கள் இங்கே நிற்கப் பெற்றுள்ளோமே. அவர்கள் ஒவ்வொருவரும் ஒருமனதோடு, ஒரே இருதயத்தோடு, ஒரே சத்தத்தோடு, 'போங்கள்! தேவன் உங்களோடு இருக்கிறார்’” என்று கூறுகின்றார்களே. 108. அமெரிக்க ஐக்கிய நாடுகளும் அதே காரியத்தை சந்தித்திருக்கவில்லையா என்று நான் யோசிக்கிறேன். தேவனுடைய சபையும் அதே காரியத்தை சந்தித்திருக்கவில்லையா என்று நான் யோசிக்கிறேன். நான் யோசிக்கிறேன். “சரி,” “பாருங்கள், அவர்கள் வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மகத்தான பெரிய கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோரை நடத்திக் கொண்டிருக் கிறார்கள்” என்று கூறுகிறார்கள். ஆனால் இன்னும் ஒன்று இருக்காதா என்றே நான் எதிர்பார்க்கிறேன். வித்தியாசமான ஏதோ ஒன்று இருக்காதா என்றே நான் எதிர்பார்க்கிறேன். 109. ஆறு வாரங்கள் நாம் முப்பதாயிரம் மனமாற்ற மடைந்தவர்களை பெற்று, ஆறு வாரம் கழித்து அவர்கள் ஒருவரை கூட நாம் பெற்றிருக்கவில்லை என்பதையும், நாம் கண்டறிகிறோம். எங்கோ ஏதோ காரியம் தவறாய் உள்ளது. அது உண்மை. அது முழுவதுமே கவர்ச்சிகரமாய், காட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. உலகத்திற்கு, தொலைக்காட்சிகள் மூலமாக, வானொலி மூலமாக, படக்காட்சி மூலமாக காட்டப்படுகிறது, அங்குள்ள அந்த விற்பனை நிலையங்கள், ஹாலிவுட்டின் அடிமுட்டாள்தனத்தினால் இந்த தேசத்தை சீரழித்துள்ளது. அது உண்மை. ஒவ்வொரு காரியமும் பெரிய கவர்ச்சியாய் இருக்க வேண்டும். அது உண்மையல்லவா? அது உண்மை என்பதை நீங்கள் அறிவீர்கள். அநேக வருடங்களுக்கு முன்னர் வழக்கமாக நாம் பெற்றிருந்த பண்டைய மாதிரியான மார்க்கத்தை நாம் இனிமேல் பெற்றுக்கொள்ளப்போவதில்லை. அது கைவிடப்பட் டுள்ளதால்தான். நாம் அதை இன்னும், சற்று நேரத்தில் பெற்றுக்கொள்வதை, நீங்கள் காணலாம். 110. ஏன், என்ன ஒரு அழகான காட்சி, இல்லையென்றால் ஒரு பரபரப்பான காட்சி என்றே, நான் சொல்ல வேண்டும். இந்த யோசபாத் இங்கே வந்து, "ஆம், நான் அவர்கள் அனைவரையும் பார்க்கிறேன். அவர்கள், ஒவ்வொருவரும், தங்களுடைய பட்டங்களைப் பெற்றுள்ளனர்" என்று கூறிவிட்டு, மேலும் அது என்னவாக இருந்தாலும். “அவர்கள் எல்லோரும் தீர்க்கதரிசிகளாக அல்லது பெரிய ஊழியக்காரர்களாக இருக்க வேண்டும். அவர்கள் பெரிய கல்லூரியிலிருந்து வந்துள்ளனர். மேலும் அவர்கள் யாவரும் இவ்வாறு உள்ளனர். அவர்கள் யாவரும் பெரிய தீர்க்கதரிசியின் பள்ளியில் இருந்து வந்துள்ளனர், மற்றும் ஒவ்வொரு காரியமுமே. அவர்கள் யாவரும் ஏகமனதாய் இருக்கின்றனர். அது உண்மை. ஆனால் இன்னும் ஒருவன் இருக்கவில்லையா?” என்று கேட்டான். 111. “சரி, நானூறு பேரும் ஒரே நேரத்தில் சம்மதமளித்துக் கொண்டிருக்கும்போது இன்னும் ஒருவன் உனக்கு எதற்கு தேவை?' என்றான். 112. ஆனால் அந்த மனிதன் அவனுடைய இருதயத்தின் ஆழத்தில் தேவனை உடையவனாய் இருந்தான். அதைக் குறித்து ஏதோ காரியம் தவறாய் இருந்தது என்பதை அவன் அறிந்திருந்தான். ஆம், ஐயா. ஏதோக் காரியம் அழகிப்போயிருந்ததை அவன் அறிந்திருந்தான். ஏன்? நான் உங்களுக்கு கூறட்டும்... வேதவாக்கியம் அதை மேற்கோள் காட்டுகிறதில்லை, ஆனால் நான் என்ன புரிந்துகொண்டேன் என்பது இங்கு உள்ளது. அந்த மாய்மாலக்காரன் அங்கு இருந்தான் என்பதை யோசபாத் அறிந்திருந்தான் என்பதை—என்பதை நான் அறிவேன், ஆகாப், அதாவது அவன் தேவனோடு சரியாய் இருக்கவில்லை. எலியா தேவனுடைய வார்த்தையை அவனுக்குத் தீர்க்கதரிசனமாய் உரைத்திருந்தான். அவன் சபித்திருந்ததை தேவனால் எப்படி ஆசீர்வதிக்க முடியும்? ஆமென். 113. நண்பனே, இன்றைக்கும் அதே காரியத்தையே நான் கூறுகிறேன். தேவனுக்கு உண்மையாக நின்றுகொண்டிருக்கிற, ஜீவனுள்ள தேவனுடைய சபையும், அதே காரியத்தையேக் கூறும். உங்களால் எண்ணெயையும் தண்ணீரையும் ஒன்றாகக் கலந்து அதை இரட்சிப்பு என்று அழைக்க முடியாது. உங்களால் முடியாது. சகோதரனே, உன்னை வேறுபிரித்துக்கொள்ள வேண்டும். ஏதோ காரியம் சம்பவிக்க வேண்டும். ஏதேனும் நம்பிக்கை விடப்பட்டிருந்தால், நாம் ஏதோ ஒரு காரியத்தை செய்ய வேண்டும், அதைத் துரிதமாக செய்ய வேண்டும்; ஏனென்றால், எடுத்துக்கொள்ளப்படுவதற்கான நேரம் சமீபித்துவிட்டது. 114. காரியங்கள், ஒவ்வொரு காரியமும், குவிந்துகொண்டே இருக்கின்றன, சபையோ மிகவும் தொலைதூரத்தில் உள்ளது. அவர்கள் எல்லா விதமான பத்திரிகைகளையும், புத்தகங்களையும், கதைகள், மற்றும் ஒவ்வொரு காரியத்தையும் வாசிக்கிறார்கள். நான் இன்றைக்கு செல்லக்கூடிய ஒரு...என்னால் ஒரு சபைக்கு செல்ல முடியும், மேலும் என்னால், "ஓ, எத்தனை பேருக்கு தெரியும்...” என்று கூற முடியும். அவர்கள் இந்த பெரிய எழுப்புதல்களுக்குப் பிறகு, ஒவ்வொரு பாடலையும் அறிந்திருக்கிறார்கள். “இப்பொழுது, என்ன—என்ன குறிப்பிட்டப் பக்கத்தில் பாடல் உள்ளது?” அவர்கள் அதை அறிந்திருக்கிறார்கள். அது யாராய் உள்ளது என்று அவர்களுக்கு தெரியும். ஜனாதிபதிக்காக யார் போட்டியிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும், யார் இதற்காக போட்டியிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும், எத்தனை திரைப்பட நட்சத்திரங்களுக்கு திருமணமாகிவிட்டது, இது மற்றும் அது, மற்றது என்பதையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள். ஆனால், தேவனுடைய வார்த்தையை, அவர்கள் அதைக் குறித்து ஒன்றையுமே அறிந்திருக்கவில்லை. அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. எனவே நாம் அவர்களுடைய...கொடுத்துக் கொண்டிருக்கிறோம். மேலும், அதே சமயத்தில், அவர்கள் கிறிஸ்தவர்களாக இருப்பதாக கூறுகிறார்கள். 115. ஜனங்களின் மீது குற்றமில்லை. இது மேடைக்கு பின்னால் இருந்து வருகிறது, அங்கிருந்தே அது வருகிறது. சரியாக. அது மேடைக்கு பின்னால் இருந்து வருகிறது. அவர்கள் இவர்களுக்கு எல்லா விதமான தாளங்களையும் மற்றும் எல்லாவிதமான இது மற்றும் அது, மற்றும் ஸ்தாபனங்களையும், வாலிபக் குழுக்களை எப்படி உருவாக்க வேண்டும் என்றும், அதை போன்ற ஒவ்வொரு காரியத்தையும் கற்பிக்கிறார்கள். அதற்காகத்தான் அது செலுத்தப்பட்டுள்ளதா என்று நான் யோசிக்கிறேன். அதற்கு எதிராக ஒன்றுமேயில்லை, ஆனால் அது தேவனுடைய தேவையா என்று நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். 116. இயேசுவானவர், “ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்திலே பிரவேசிக்க மாட்டான். என்னை...என்னை பின்பற்றினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன்னுடைய சொந்த உலக பிரகாரமான இன்பங்களை வெறுத்து, தன்னுடைய சிலுவை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்” என்று கூறினார். சிலுவை "மரணத்தையும், வியாகுலத்தையும்” குறித்த ஒரு அடையாளமாக இருக்கிறது. "ஒரு கிறிஸ்தவராக இருக்க விரும்புபவன், அவன் தானே தன்னுடைய சொந்த சிந்தனைகளை களைந்து போடக்கடவன். அவன் தானே தன்னுடைய சொந்த கிரியைகளையும் அகற்றிப்போடக்கடவன். அவன் தன்னைக் குறித்த ஒவ்வொரு காரியத்தையும் களைந்து போட்டு, தன்னையே மறுதலித்து, அந்த அர்ப்பணிக்கப்பட்ட சிலுவையை எடுத்துக்கொண்டு, அனுதினமும் என்னைப் பின்பற்றக்கடவன். என்னை பின்பற்றி வருபவன் அதை செய்யக்கடவன்.” அதைத்தான் இயேசு கூறினார். 117. ஆனால், இன்றைக்கு, நாம், “ஒவ்வொருவரும் ஒரு பெரு மகிழ்ச்சியான நேரத்தை உடையவர்களாக இருக்கிறார்கள். எல்லோருமே தங்களுடைய கரங்களை தட்டுகிறார்கள். ஒவ்வொருவரும், 'அல்லேலூயா!' என்று சத்தமிடுகிறார்கள். ஒவ்வொருவரும் இதைச் செய்கிறார்கள்” என்று கூறுகிறோம். நாம் ஒரு கூட்ட வம்புச் சண்டையே பெற்றுள்ளோம்! ஆமென். தேவனே... நாம் இந்த புதிய பாடல்களைப் பெற்றுக்கொண்டு அவைகளை மிக வேகமாக பாடுகிறோம், நாம் அவைகளோடு மதிற்சுவரின் வழியாக ஓடிக்கொண்டிருப்பது போன்று, அல்லது அதைப் போன்று ஏதோ ஒரு காரியத்தை போன்று அது காணப்படுகிறது. 118. நான் நினைக்கிறேன், என் தேவனே, உம்மண்டை, அருகிலே என்று நான் பாடிக் கொண்டிருந்தால், சபை முழுவதும் சிறப்பாக இருக்கும்; பண்டைய மாதிரியான ஞானப்பாட்டுக்கள். 119. ஒரு நடன இசைக் குழு ஐனங்களைக் கொண்டு வர, கடந்த இரவு, இங்கே ஒரு நடன இசைக் குழுவில் இசைத்துக்கொண்டிருந்த ஒரு பையன், இன்று இரவு இங்கே ஜீவனுள்ள தேவனுடைய சபையில் இசைத்துக்கொண்டிருப்பதா? அது தேவனுடைய பார்வையில் அருவருப்பானதாக உள்ளது. அந்த மனிதன் முதலாவது நிரூபிக்கப்படட்டும், அவன் தேவனோடு சரியாக இருக்கிறான் என்பதை காண்பிக்கும்படியான, மனந்திரும்புதலின் கனியை, அவன் கனியைத் தரட்டும். 120. அவர்கள் உலகப்பிரகாரமான அமெரிக்க நீக்ரோக்களின் ஆரவார இசைக்கூத்தை மேடைக்குள் கொண்டு வருகிறார்கள். அவர்கள் ஹாலிவுட்டை, கவர்ச்சிகரமான பிரசங்கத்தையே, சரியாக மேடையில் கொண்டு வருகிறார்கள். 121. ஏன், கென்டக்கியில் உள்ள, லூயிவில்லில், ஒரு சில வாரங்களுக்கு முன்னர், உங்களுடைய அழகான நகரத்தில் நான் தங்கியிருக்கவில்லையா? தேவனுடைய அற்புதங்களைக் காண உற்சாகமாக, அவர்கள் எல்லோரும் அங்கே அமர்ந்து கொண்டிருந்தபோது என்னுடைய இருதயம் நொறுங்கினது; மேலும் நீங்கள் சுவிசேஷத்தைப் பிரசிங்கத்தவுடனே, அவர்கள் நிரம்பி, ஒரு நொடியில், தங்களுடைய முதுகைத் திருப்பிக்கொண்டு கட்டிடத்தைவிட்டு வெளியே செல்வார்கள். நிச்சயமாக. அவர்கள் அதை விரும்புகிறதில்லை. அவர்களுடைய இருதயங்கள் கடினப்பட்டிருக்கின்றன. வெளியேறுகிறார்கள்; அவர்களில் அநேகர், பிராட்டஸ்டண்டுகள் கூட, பிராட்டஸ்டண்டு சபைகளுக்குச் செல்கிறவர்கள். ஆனால் அவர்கள் நிரம்பியிருந்த... மூடத்தனத்தினாலும் மற்றும் சபைக் கோட்பாடு களினாலும், அது போன்ற ஒவ்வொரு காரியத்தினாலும் மூடத்தனத்தால் முழுவதுமாக நிரப்பப்பட்டு, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியைக் குறித்து ஒன்றுமே அறியாத அளவுக்கு அவர்கள் இருக்கிறார்கள். “தேவபக்தியின் வேஷத்தை மறுதலித்து, அதனுடைய பலனை மறுதலிக்கிறார்கள்.” நாம் என்னே ஒரு நாளில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். அது எங்கும் குவிக்கிறதை கவனியுங்கள். 122. யோசபாத், “ஆகாபே, எனக்குத் தெரியும். உங்களுடைய நானூறு பிரசங்கிமார்கள் இருக்கிறார்கள். அவர்கள் யாவரும் அருமையாய் காணப்படுகின்ற நபர்களாய், அவர்கள் ஒவ்வொருவரும் நன்கு உடை உடுத்தி தங்களுடைய தலையை சீராக வாரி, மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்தையும் உடையவர்களாய், அவர்கள் இன்னும் என்னவாகவெல்லாமோ இருக்கலாம். அவர்கள் தங்களுடைய டி.டி பட்டங்களைப் பெற்றிருக்கலாம். அவர்கள் தங்களுடைய எல்லா விதமான பட்டங்களையும் பெற்றிருக்கலாம். அவர்கள் வேத வாக்கியங்களை, முதலில் இருந்து முடியும் வரை அறிந்திருக்கலாம். ஆனால் உங்களுக்கு எங்காவது, இன்னும் ஒருவன் இருக்கவில்லையா? எங்காவது இன்னும் ஒருவன் இருக்கவில்லையா?” என்று கேட்டான். 123. அதற்கு அவன், "ஆம், இன்னும் ஒருவன் இருக்கிறான், ஆனால் நான் அவனை வெறுக்கிறேன்” என்றான். அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. "நான் அவனை வெறுக்கிறேன்.” நினைவிருக்கட்டும், ஆகாப் ஒரு மதசம்பந்தமான மனிதனாய் இருந்தான், இவர்கள் மதசம்பந்தமான போதகர்களாயிருந்தனர், ஆனால் அவர்கள் இந்த மனிதன் கொண்டிருந்த சத்தியத்தை வெறுத்தனர். அவன், “நான் அவனை வெறுக்கிறேன்” என்றான். “அவன் எப்பொழுதுமே எனக்கு எதிராக ஏதாவது ஒரு காரியத்தை பேசிக் கொண்டேயிருப்பான்” என்றான். தேவனுடைய வார்த்தையானது அவனை ஆக்கினைத்தீர்ப்புக்குட்படுத்தியிருந்தபோது, அவனால் அதை செய்யாமல் எப்படி இருந்திருக்க முடியும்? 124. நீங்கள் ஒரு தேவனுடைய மனிதனாக அல்லது ஒரு தேவனுடைய ஸ்திரியாக இருப்பீர்களானால், பாவமும் மற்ற காரியங்களும், குவிந்து பாரமாக்கப்பட்டு, அதைப் போன்ற ஒவ்வொரு காரியமும் இருப்பதைக் கண்டு அறிந்திருந்தால்; மானிட ஆத்துமாக்கள் நரகத்திற்கு; ஒரு நாளில் பத்து லட்சம் பேர் செல்வதைக் கண்டால்; அப்படியே அமர்ந்திருந்து எப்படி உங்களால் அடக்கிக்கொள்ள முடியும்? உங்களால் அதைச் செய்ய முடியாது. அன்றொரு நாள் யாரோ ஒருவர் என்னிடத்தில் கூறினார், “உங்களால் அதை நிறுத்த முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று கேட்டார். 125. நானோ, "இல்லை. என்னால் அதை நிறுத்த முடியாது, ஏனென்றால் தேவன் கூறினார். ஆனால் ஒரு நாள், நியாயத்தீர்ப்பிலே, அவர்கள் அந்த பெரிய திரையை இழுக்கப்போகிறார்கள், அப்பொழுது அப்பாலுள்ள புகைப்படக் கருவி ஒளிர, அந்த ஒளிப்பதிவு கருவி இயக்கப்படப்போகிறது. நான் நின்று அதைக் கேட்கப்போகிறேன்; அதற்கு எதிராக என்னுடைய சத்தம் எச்சரிப்பதை நான் கேட்க விரும்புகிறேன். என்னுடைய சத்தம் அதற்கு எதிராக வரும்போது தேவன் என்னை நியாயந்தீர்ப்பார்” என்றேன். ஆம், ஐயா. நாம் இந்த ஜீவியத்தை, இந்த தலைமுறையை காணும்போது, அப்பால் நியாயத்தீர்ப்பில் மீண்டும் செயல்படுத்திக் காட்டப்படும். நிச்சயமாகவே. நாம் ஒரு பயங்கரமான நேரத்தில் ஜீவித்து கொண்டிருக்கிறோம். இதுதான். அவன் செய்கிறதை நாம் காண்கிறோம்...அவன், "இன்னும் ஒருவன் இருக்கவில்லையா?” என்று கேட்டான். 126. அவன், "ஆம், ஆனால் நான் நான் அவனை வெறுக்கிறேன், ஏனென்றால் அவன் எப்பொழுதுமே எனக்கு எதிராக பொல்லாங்காய் தீர்க்கதரிசனமுரைத்துக் கொண்டிருக்கிறான்” என்று கூறினான். 127. இது சம்பவித்துக் கொண்டிருக்கிறதை அவன் காண்கிறபோது, அவனால் எப்படி அந்த கடினமான காரியங்களை பிரசங்கிக்காமல் இருக்க முடியும்? ஆகாப் தான் இருந்ததைப் போலவே வாழ்ந்து அவன் செய்து கொண்டிருந்த காரியங்களை செய்து கொண்டு, ஜனங்களையும் அவர்கள் இருக்கிறது போலவே அவர்களையும் வாழச் செய்து கொண்டிருந்ததைப் பாருங்கள். 128. ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள பாவத்தை கடிந்து கொள்ளாமல் சத்தமிடாமல் எப்படி ஒரு தேவனுடைய மனிதனால் அல்லது ஒரு தேவனுடைய ஸ்திரீயால் இருக்க முடியும்? அவர்கள் இந்த வெதுவெதுப்பான பிரசங்கிமார்களை, கவர்ச்சி யாளர்களை, கல்வி கற்றவர்களை, என அதைப் போன்றவர்களைக் காணும்பொழுது, வஞ்சனையின் கீழ், இலட்சக்கணக்கான, ஜனங்கள் நரகத்திற்கு செல்ல அனுமதிக்கிறார்கள்; ஏராளமான...பரிசுத்த ஜனங்களிலும் கூட. நான் மெத்தோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், அதைப் போன்ற காரியங்களை குறித்து நான் அதிகமாக பேசிக் கொண்டிருக்கவில்லை; அவர்களிடம் கூட, இது உள்ளது. ஆனால் இது உங்களுடைய சொந்த தர வரிசைகளில் உள்ளது. 129. என்னே, மேடைக்கு வருகிறார்கள், கிறிஸ்தவர்களைப் போன்றில்லாமல் மற்ற எந்த ஒரு காரியத்தையும் போல, மற்ற எந்த ஒரு காரியத்தையும் போலவே ஜீவிக்கிறார்கள், தேசங்கள் மற்றும் காரியங்கள் முழுவதுமே, அதன்பின்னர் அவர்கள் அதை “மதம்” என்று அழைக்கிறார்கள். இது ஒரு மதம், ஆனால் இது கர்த்தருடைய இரட்சிப்பிலிருந்து வெகு தூரத்தில் இருக்கிறது. அது உண்மை. அவர்கள் உணர்ச்சிவசப்படக்கூடிய மிகப்பெரிய கூட்ட ஜனங்களைப் பெற்றுள்ளனர். அதன்பின்னர் அந்த உணர்ச்சிவசப்படுதல் முற்றுப்பெற்றவுடனே, அதன்பின்னர், முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, நீங்கள் அவர்களில் ஒருவரைக் கூட கண்டு பிடிக்க முடியாது; சபை காலியாக உள்ளது. சகோதரனே, ஒரு மனிதன் தேவனை நேசிப்பானானால், ஒவ்வொரு முறையும், சபையில் அவனுடைய இருக்கையை அவன் நிரப்பியிருப்பான். அவனால் அதிலிருந்து விலகி இருக்க முடியாது. அது உண்மை. 130. இப்பொழுது கவனியுங்கள், இன்னும் ஒரு சில நிமிடங்களில். நான் துரிதமாக முயற்சித்து, இப்பொழுது நேரடியாக விஷயத்திற்கு வரவிருக்கிறேன், ஏனென்றால் என்னுடைய நேரம் போய்க்கொண்டிருக்கிறது. கவனியுங்கள், அப்பொழுது அவன், "இன்னும் ஒருவன் இருக்கவில்லையா?” என்று கேட்டான். 131. அவனோ, “ஆம், ஆனால் நான் அவனை வெறுக்கிறேன். அவன் எப்பொழுதுமே எனக்கு எதிராக தீர்க்கதரிசனமுரைத்துக் கொண்டிருக்கிறான். அவன் எனக்கு எதிராக பொல்லாத காரியங்களை கூறிக் கொண்டிருக்கிறான்" என்று கூறினான். “சரி, போய் அவனை அழைத்து வாருங்கள்” என்றான். அவன், “அவனுடைய பெயர் மிகாயா” என்றான். 132. ஆனால் இந்த நபர்கள் சரியில்லாதிருந்தனர் என்பதை அறிந்துகொள்வதற்கு இந்த மனிதன் போதுமான மார்க்கத்தை உடையவனாய் இருந்தான். 133. தேவனுடைய ஆவியினால், சிறிதளவு, தொடப்பட்ட எந்த மனிதனுமே, இன்றைக்கு கிறிஸ்தவ மார்க்கம் என்று அழைக்கப்படுகின்ற, இந்த காரியங்கள், சரியல்ல என்பதை அறிந்திருக்கிறான். “உங்களால் உலகத்தையும் அல்லது உலகத்தின் காரியங்களையும் நேசிக்க முடியாது. நீங்கள் அவ்வாறு நேசித்தால், தேவனுடைய அன்பு உங்களிடத்தில் இல்லை." வேதம் அவண்ணமாய் கூறியுள்ளது. இப்பொழுது பாருங்கள். அவன், “போய் அவனை அழைத்து வாருங்கள்” என்றான். அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். 134. அப்பொழுது அவன் ஒரு சிறு தூதனை, சபையின் மூப்பனை, ஒரு வேளை அல்லது யாரோ ஒருவரை அனுப்ப, அங்கு புறப்பட்டுப் போய், "இப்பொழுது பார், மிகாயா, நாங்கள் இங்கே ஆகாப் மற்றும் யோசபாத்துக்கு முன்பாக உம்மை அழைத்துக்கொண்டு வருகிறோம். இப்பொழுது அவர்கள் இருவரும் அங்கே அமர்ந்து கொண்டிருக்கிறார்கள், அவர்கள் இப்பொழுது பெரிய மனிதர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் ஆசிரியர்களாய் இருக்கிறார்கள், அவர்கள் மேதைகளாய் இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய பட்டம், முதலியவற்றைப் பெற்றிருக்கிறார்கள். நம்முடைய ஒவ்வொரு வேத பாட கருத்தரங்கு ஒவ்வொன்றும், இங்கே நம்முடைய சபைகள் ஒவ்வொன்றும், இது கர்த்தருடைய சித்தமாய் இருக்கிறது என்பதில் முழு உடன்பாட்டில் உள்ளனர். இப்பொழுது அவர்கள் கூறுகிற அதே காரியத்தை நீ கூறு, மேலும், நான் உனக்குச் சொல்வேன், அப்பொழுது நீ மேலான உடை உடுத்திக்கொண்டு, ஒரு காடிலா காரில் பயணம் செய்யலாம். நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ அதை செய்வாயானால் நீ ஒரு மகத்தான நபராக இருப்பாய். ஆம், ஐயா. நீ செழிப்பாய்." 135. மிகாயாவோ, "தேவன் கூறுகிறதை மாத்திரமே நான் சொல்வேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்” என்றான். ஆமென். ஆம். ஓ, என்னுடைய இருதயத்திற்கேற்ற ஒரு மனிதன் இருக்கிறான். “நான் அப்பமும் தண்ணீரும் புசிக்க வேண்டியிருக்கலாம்,” அவன் அதைச் செய்தான், "அதை செய்ததற்காகவே." அவன் ஒரு கன்னத்திலும் மற்றும் மற்றொரு கன்னத்திலும் அடித்திருக்கலாம், இன்னும் என்னவெல்லாமோ செய்திருக்கலாம், ஆனால் அவன் உண்மையைக் கூறி அதனைக் கொண்டே நின்றான். அது உண்மை என்பதை தேவன் றுதிப்படுத்தினார். அவன் மிகவும் பிரபலம் வாய்ந்தவனாக இருக்கவில்லை, ஆனால் அவன் தேவனை அறிந்திருந்தான். 136. அந்த சிறு உருவங்கொண்ட வயதான மிகாயாவை அங்கே கொண்டு வந்தனர். அப்பொழுது அவன், “சரி, மிகாயாகவே, இது குறித்து நீ என்ன சொல்லுகிறாய்?” என்று கேட்டான். 137. அப்பொழுது இவனோ, "புறப்பட்டு செல்லுங்கள். புறப்பட்டு செல்லுங்கள்” என்றான். “சமாதானமாக, செல்லுங்கள். முன்னோக்கிச் செல்லுங்கள், செழிப்பீர்கள், அதைத்தான் நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்" என்று கூறினான். “ஆனால் நான் இஸ்ரவேலர் ஒரு மேய்பனில்லாத ஆடுகளைப்போல, ஒரு மலையின்மேல், சிதறப்பட்டருப்பதைக் கண்டேன். அவ்வளவு தான்” என்று அவன் கூறினான். 138. அவன் அந்தவிதமாகக் கூறினபோது; ஆகாப் யோசபாத் தண்டைக்கு திருப்பினபோது, “நான் என்ன உங்களுக்கு சொன்னேன்? அந்த பரிசுத்த உருளையர்...” அல்லது, என்ன, என்னை மன்னித்துக் கொள்ளுங்கள், அல்லது, என்னவாக இருந்தாலும்; அந்த நபரோ, “அதாவது...நான் உங்களுக்கு என்ன சொல்லுவேன்? அந்த நபர் எனக்கு எதிராக பொல்லாங்காக—பொல்லாங்காக மாத்திரமே தீர்க்கதரிசனமாக உரைப்பான். நான் என்னக் கூறுவேன்? 'அவன் நம்முடைய சபையை மாத்திரம் கண்டனம் செய்வான், நம்முடைய ஊழியக்காரர்களை கண்டனம் செய்வான், நம்முடைய மார்க்கத்தின் வழியை கண்டனம் செய்வான்.' நான் உங்களுக்கு என்ன சொன்னேன்? அவன் இதையேக் கூறுவான். எனக்கு அவனைத் தெரியும். எனக்கு அவனுக்கு முன்னே அவனுடைய தந்தையாரைத் தெரியும்” என்றான். ஆமென். “எனக்கு அவனுடைய தந்தையாரை அவனுக்கு முன்னே தெரியும்." ஹு-ஹூ, ஆம், ஐயா, ஒரு உண்மையான தேவனுடைய மனிதன். “அவன் அதைக் கூறுவான் என்று எனக்குத் தெரியும்” என்றான். 139. எனவே அப்பொழுது அவன், “ஆம்” என்று கூறி, "நான் இஸ்ரவேலரை, ஒரு மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போன்று, ஒரு மலையின்மேல், சிதறப்பட்டிருக்கக் கண்டேன்” என்றான். எனவே அதன்பின்னரும் அவன், “நான்...” கூறினான். 140. அப்பொழுது பெரிய கொம்புகளைக் கொண்டிருந்த இந்த நபர்களில் ஒருவன், இடித்துத் தள்ளப்போகிறார். ஒரு பிரசங்கியார் நடந்து சென்று சிறு உருவங்கொண்ட மிகையாவைப் பிடித்து இழுத்து, அவன் தன்னால் முடிந்தவரை ஓங்கி அவனை வாயில் அடித்து, “தேவனுடைய ஆவி என்னிடத்திலிருந்து புறப்பட்டபோது எந்த வழியாய் சென்றது? உனக்கு தெரியுமா” என்று கேட்டான். 141. அவன், "உங்களை இங்கே சிறையில் அடைக்கும் வரை காத்திருங்கள், அது எந்த வழியாக புறப்பட்டு சென்றது என்பதை நீ அறிந்து கொள்வாய்” என்று கூறினான். அது உண்மையே. 142. ருஷ்யா இங்கிருந்து புறப்பட்டு, தேசங்களைக் கைப்பற்றி மற்றும் அதைப் போன்ற காரியங்களையும், இந்த தேசத்தையும் கைப்பற்றும் வரை காத்திருங்கள், அதனுடைய பின்னடைவு காரணமாக, எது சரி தவறு என்பதை நீங்கள் காண்பீர்கள். அது உண்மை. உங்களுடைய வெதுவெதுப்பான மார்க்கம் பலனைத் தருமா அல்லது இல்லையா என்பதை நீங்கள் காண்பீர்கள். 143. இந்த தேசம் கண்ணீர்களண்டைக்கு வரட்டும், நகைப்பிற்கும் மற்றும் நாடகத்திற்கும் வருவதல்ல. இந்த தேசம் அதனுடைய முழங்காலில், மனந்திரும்புதலுக்கு வரட்டும். அதுதான் நமக்குத் தேவை. சபையில் ஏராளமான ஜனங்களை பெற்றுக்கொள்வதற்கான ஒரு எழுப்புதலை அல்ல. ஒவ்வொரு மதுபான கடைகளையும் மூடி, புகை பிடிக்கும் யாவற்றையும் நிறுத்தி, அந்த தயாரிப்புத் தொழிற்சாலைகளை இடிப்பதே நமக்கு வேண்டும். ஒரு உண்மையான, பண்டைய நாகரீகங்கொண்ட, பரிசுத்த ஆவி தொடர் கூட்டம் துவங்க வேண்டும்; அங்கே புருஷரும் ஸ்திரீகளும், இரவும் பகலுமாய், முகங்குப்புறப்படுத்துக், கதற வேண்டும். நான் உங்களுக்குச் சொல்லுவேன், அது இந்த தேசம் எப்போதும் பெற்றிருந்ததில்லையே மிகப்பெரிய பாதுகாவலாய் இருக்கும். அது உண்மை. 144. பிரான்ஹாம் கூடாரம் அதனுடைய முட்டாள்தனத்தை விட்டுவிடட்டும். அது இங்கு பீடத்தண்டை திரும்பி வந்து தேவனோடு சரிப்படுத்திக்கொள்ளட்டும். அண்டை வீட்டாரோடு சமரசம் செய்து, அது போன்ற காரியங்களை செய்து, தேவனோடு சரிப்படுத்திக் கொள்ளட்டும். அப்பொழுது உங்களுக்கு எந்த வம்புகளும் மற்ற காரியங்களும் சம்பவிக்காது; அது உலகத்திலிருந்து வேறுபிரிக்கப்பட்ட இடமாய் இருக்கும். அது உண்மை. இப்பொழுது, அதுவே உண்மை. 145. அப்பொழுது அவன், “தேவனுடைய ஆவி எந்த வழியாய் என்னை விட்டுச் சென்றது?” என்று கேட்டான். 146. மிகாயா, “நான் தேவனையும், அவருடைய சேனையையும் அவருடைய ஆலோசனைக் கூட்டமும், மகிமையில் வீற்றிருப்பதைக் கண்டேன்” என்று கூறினான். 147. உங்களுக்கு தெரியுமா, தேவன் எப்பொழுதாவது, அங்கே ஒரு ஆலோசனையை வைத்திருக்கிறார். அவர், அவர் பரலோகத்தில், எப்பொழுதாவது ஒருமுறை, தம்முடைய தம்முடைய தூதர்களோடு ஒரு-ஒரு ஆலோசனையை நடத்துகிறார். 148. மேலும் அவன், "அவர் ஒரு சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பதையும் மற்றும் எல்லா ஜனங்களும் அவருக்கு வலப்பக்கமும் இடப்பக்கமும் நின்று கொண்டிருப்பதையும் நான் கண்டேன்” என்றேன். “அவர்கள் கலந்தாலோசித்துக் கொண்டிருந்தனர், 'ஆகாபை வஞ்சிக்கும்படிக்கு, அவனை இங்கே வெளியே கொண்டு வந்து எலியாவினுடைய தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றும்படிக்கு நாம் யாரை அனுப்பலாம்? தேவன் அவ்வண்ணமாய் கூறியிருக்கிறார், என்ன சம்பவிக்கப் போவதாக இருந்தது, எனவே நாம் யாரை கீழே அனுப்பலாம் என்று பார்ப்போம்” என்றனர். 149. "கீழே இருந்து ஒரு பொய்யின் ஆவி வருகிறது," உண்மையாகவே, நரகத்திலிருந்து, "தேவனுக்கு முன்பாக வந்து, 'நான் கீழே போய், நான் அந்த பிரசங்கிமார்களுக்குள் சென்று அவர்கள் எல்லோரையும் ஒரு பொய்யைத் தீர்க்கதரிசனமாக கூறச் செய்வேன்” என்று கூறிற்று. ஓ, அது அவர்களை பெருமை கொள்ளச் செய்ததா. அது அவர்களை வேடிக்கையாக உணரச் செய்ததா, எப்பொழுது, "அவர்கள், 'நான் போய் அந்த பிரசங்கிமார்கள், அவர்கள் ஒவ்வொருவரையும், ஒரு பொய்யை தீர்க்கதரிசனமாக உரைக்க செய்வேன்” என்றது. அவன் கீழே சென்று அந்த பிரசங்கிமார்களுக்குள் நுழைந்து கொண்டான், அவர்கள் ஒரு பொய்யை தீர்க்கதரிசனமாக உரைக்கத் தொடங்கினர். 150. மேலும், சகோதரனே, அதே தேவன் இன்றைக்கு அதே சிங்காசனத்தில் அரசாளுகிறார். அதே பொய்யின் ஆவி இன்றைக்கு அதே காரியத்தை செய்து, பொய்களை தீர்க்கதரிசனமாக உரைக்கிறது. 151. முதல் உலகப்போருக்குப் பிறகு அவர்கள் தொடர்ந்து, “சமாதானம், சமாதானம், சமாதானம்,” என்று கூறிக்கொண்டே இருக்கிறார்கள். 152. அது எங்கிருந்து வருகிறது என்பதை நான் உங்களுக்கு காண்பிக்கட்டும். முதல் உலகப்போரில், பிரான்ஸ், அங்கே, கவலையற்ற பத்தொன்பதாவது நூற்றாண்டுகளிலே, தேவனிடத்தில் இருந்து விலகத், தொடங்கி... 153. இப்பொழுது நான் ஒழுக்கத்தின் பேரில் சற்று நேரம் பேசப்போகிறேன், எனவே நீங்கள் யாவரும் உண்மையாகவே ஒரு சில நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்திருங்கள். 154. பாருங்கள், அங்கே ஆரம்பத்தில், துவக்கத்தில், பிரான்சில், அங்குதான் முதலில் ஆடம்பரமும் அசுத்தமும் துவங்கியது. உலகத்தில் எப்போதாவது ஒரு அசுத்தம் இருந்திருந்தால், அது பிரான்சில் உள்ள பாரிஸில் தான். நான் அதிலுள்ள எல்லா இடங்களுக்கும் கிட்டத்தட்ட பயணம் செய்திருக்கிறேன், நான் எப்போதும் கண்டத்திலேயே மிகவும் மோசமான இடம் அதுதான். லண்டன், இங்கிலாந்தும் விதிவிலக்கல்ல. அதற்கேற்ப நாடுகள் அதற்கேற்ப சரியாக வந்து கொண்டிருக்கிறது. அது உண்மை. அந்நிலையில் தான் அவர்கள் இருக்கிறார்கள். 155. ஒவ்வொரு முறையும் நீங்கள் ஸ்திரியின் ஒழுக்கத்தை முறித்தெரியும்போது, நீங்கள் அந்த தேசத்தின் ஒழுக்கத்தையே முறிக்கிறீர்கள். 156. இங்கே நீங்கள், அவர்களுடைய சொந்த தேசங்களுக்கு சென்று, நீங்கள் ஒரு மிஷனரி என்று கூறினால் அவர்கள் அதை விரும்புகிறதில்லை..."நீங்கள் எங்களை என்ன செய்ய சொல்லப் போகிறீர்கள், எங்களுடைய மனைவிகளைக் குறித்து அல்லது எங்களுடைய பெண்களைக் குறித்து எப்படி அசுத்தமான பாடல்களை பாடுவது? எங்களுடைய மனைவிகளை எப்படி விவாகரத்து செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லப் போகிறீர்களா? எப்படி விஸ்கி அருந்துவது மற்றும் நாங்கள் செய்கிற விதமாகவே செல்வதை எங்களுக்குப் போதிப்பீர்களா?” என்று கேட்கிறார்கள். அப்படித்தான் நாங்கள் இருக்கிறோம். 157. நாங்கள் எங்களை மதசம்பந்தமான தேசம், கிறிஸ்தவ தேசம் என்று அழைத்துக் கொள்கிறோம். சரி, அவர்கள், “அஞ்ஞானிகள்” ஆப்பிரிக்காவில் உள்ளவர்கள் நாம் எப்படி ஒழுக்கமாக வாழ வேண்டும் என்பதை, நமக்கு கற்றுக் கொடுக்க முடியும். மிகவும் அழுகிப்போன இடம், அமெரிக்க ஐக்கிய நாடுகளில், அல்லது, உலகத்தில், கிட்டத்தட்ட இந்த தேசத்தில், அது எப்படியாய் வந்துவிட்டது. நிச்சயமாகவே, நான் ஒரு அமெரிக்கன். ஆனால், சகோதரனே, என்னால் உதவ முடியாது, ஆகாப் அல்லது யோசபாத்திற்கு முன்பாக...தேவன் கூறுகிறதே சத்தியமாய் இருக்கிறது என்பதை நான் கூறத்தான் வேண்டும். இன்றைக்கு, சபையானது அதற்காகத்தான் இருக்க வேண்டியதாய் உள்ளது. அது தேசத்திற்கும் தேவனுக்கும் இடையே வருமாயின், அது எப்பொழுதும் தேவனுக்காகவே இருக்க வேண்டும். ஆம், ஐயா. 158. கவனியுங்கள், பிரான்சில், அவர்கள் தங்களுடைய எல்லா அழுகிப்போனத் தன்மைகளிலும் தொடங்கி, அங்கே அவர்கள் வாழ்ந்த விதமாகவே சென்று கொண்டிருக்கிறார்கள். அதன்பின்னர் தேவன் அவர்களை கொஞ்சம் அடிக்கும்படி, ஜெர்மனியை அவர்களுக்குள் அனுப்பினார். அதன்பின்னர் அவர்கள் அங்கே தங்களுடைய மறைவைக் காப்பாற்ற அங்கு சென்றனர். நாம் அதை செய்தவுடனே, யுத்தத்தில் வெற்றி பெற்று, ஜெர்மனியை திருப்பி அனுப்பி, பிரான்சோடு சமாதானம் செய்தோம், அவர்கள் தேவனிடம் திரும்பினார்களா? இல்லை, ஐயா. ஸ்திரிகள், மது, வரம்பு மீறிய ஒழுக்க கேடு, பாவம் மற்றும் பெண்களிடத்தில் அசுத்தம். 159. அப்பொழுது அவர்கள் என்ன செய்தனர்? என்ன சம்பவித்தது? இங்குதான் அவன் துவங்கினான். பிசாசு தன்னுடைய தலைமையகத்தை அங்கு அமைத்தான். பிரான்சில் உள்ள, பாரிசில், சரியாக அங்குதான், அவன் உலகத்தை மனச்சோர்வடையத், துவங்கினான். 160. அதன்பின்னர், நீங்கள் கவனிப்பீர்களேயானால், அவனால் ஊழியத்தின் மூலமாக இங்கே உள்ளே உள்ளே வர முடியவில்லை, எனவே அவன் செய்த காரியம் இங்கே ஹாலிவுட்டுக்குள்ளாக வந்தது. அவன் தன்னுடைய ஹாலி-...அமைத்தான். அவன் இங்கு ஹாலிவுட்டில் தன்னுடைய தலைமையகத்தை அமைத்தான். பிசாசு ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, பதினைந்து அல்லது இருபது ஆண்டுகளுக்கு முன்பு, தன்னுடைய பெரிதான படையுடன், இங்கே திரும்பவும் வந்து இறங்கி, கலிபோர்னியாவில் உள்ள, ஹாலிவுட்டிற்க்குச் சென்று வெற்றி பெற்றான். அவன் தன்னுடைய பேய்த்தனமான சக்திகளை கொண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளை ஆக்கிரமித்துள்ளான். சரி. நம்முடைய நாகரீகங்கள் யாவும் பாரிசிலிருந்து வந்தன. அவர்கள் அதை ஹாலிவுட்டில், திரைகளில் பெற்றுக்கொள்கிறார்கள். இந்த சிறு பெண்களும் மற்றும் சிறு பையன்களும், மற்ற காரியங்களை, இங்கே வெளியில் சென்று, அவர்கள் இந்த திரைப்படக் காட்சிகளை பார்க்கிறார்கள். 161. அருமையான சிறு பிள்ளைகள், அருமையான குட்டி நபர்கள், அவர்களுக்கு எதிராக ஒன்றுமேயில்லை. தேவன் அவர்களுடைய சிறு இருதயங்களை ஆசீர்வதிப்பாராக. என் இருதயம் அவர்களுக்காக இரத்தம் கசிகிறது. 162. இங்கே இந்தப் பட்டணத்தில், நான் என்னுடைய... என்னுடைய பையன்...ஒருவனிடத்தில், அன்றொரு நாள் பேசிக் கொண்டிருந்தேன். அவன், “அப்பா, நகரத்தில், பரிசுத்த ஆவியை பெற்றிருந்த, சில பயன்கள், முதலியவர்கள் அங்கே சுற்றி இருந்திருந்தால்” என்றான். நான் ஏன் டென்வர், கொலரோடா, அல்லது அதைப் போன்று எங்காவது தூரமாய் சென்று கொண்டிருந்தேன் என்று நீங்கள் யோசித்தீர்களா? தேவனை நோக்கி கதருகின்ற ஒரு கூட்ட ஜனங்கள் இருக்கின்ற எங்காவது என்னுடைய பிள்ளைகளை அழைத்துச் செல்லவே; சகோதரனே அதுதான் நமக்குத் தேவை. 163. இந்த நாடு, இந்த தேசம், இந்த பட்டணம், இந்த இடம், இது பரிதாபமாக இருக்குமளவிற்கு மிகவும் மனசோர்வடைந்துள்ளது. எனக்கு முற்றிலும் உண்மையாக தெரிந்ததை இப்போது மட்டும் இங்கே வெளிப்படுத்த முடிந்தால், இது ஒரு கலப்படமான கூட்டத்தினருக்கு முன்பாக காட்டப்படாது. அல்லது இங்கே இந்த சொந்த நகரத்தில் இங்கே; இங்கு மாத்திரம் அல்ல, ஆனால் மற்ற இடங்களில், எங்குமே, அது ஒரு எளிமையாக வரத் தொடங்குகிறது... 164. காரணம் ஏன்? ஜனங்கள்...பாருங்கள், நண்பர்களே, இது மிகவும் தந்திரமடைந்துள்ளது. அது உங்களை அடக்கி போடுமளவிற்கு, அது மிகவும் எளிதாக வருகிறது. பிசாசு வழக்கமாகவே நாகரீகங்களில் இருப்பான். அவன் நாகரீகங்களில் இருந்து வெளியேறாமல் இருக்கலாம், ஆனால் அவன் அந்த வேலையை விட்டு செல்லவில்லை, நான் உங்களுக்கு சொல்வேன். அவன் இன்னும் அந்த வேலையில்தான் இருக்கிறான். 165. பாருங்கள், இன்றைக்கு. நாம் சற்று நேரத்துக்கு முன்பு கூறியதுபோல, ஒரு ரோஜா மலரோடு இருந்த வயோதிக பெண்ணை, அந்த சிறு பெண்மணியை குறித்து, நாம் எடுத்துக் கொள்வோம். உதாரணமாக, அந்த ரோஜா, அது அழகாக இருக்கிறது; அது அங்கே பார்க்கப்பட வேண்டும், அது உண்மை. அது இந்த சபையை போலவே உள்ளது, அது காணப்பட வேண்டும். ஒரு அழகான சிறிய ஸ்திரீயைப்போலவே, அவள் அங்கே காணப்பட வேண்டும். அது உண்மை. ஆனால் அவள்...அவள் அருமையா இருக்கிறாள், அதாவது, அவள் தன்னுடைய கணவனுக்கு, அவள்—அவள் சரியாக இருக்கிறாள். ஆனால் அங்கே அவளை பாதுகாக்கும்படியாக ஒட்டியிருக்கிற அந்த ஒழுக்கமான வாளை அவள் பெற்றிருக்க வில்லையென்றால், அவள் சமூகத்திற்கும் மானிடர்களுக்கும் கடனாளியாகிறாள்; அப்பொழுது நாய்களும் அவளை ஏறெடுத்து பார்க்காத அளவிற்கு மிகவும் இழிவான, அவதூறான, அழுகிப்போனவளாகிறாள். அது உண்மையே. 166. ஜீவனுள்ள தேவனுடைய சபைக்கும் அதே காரியம் தான். அவர்கள் இங்கிருந்து வெளியேறி கவர்ச்சியாக்கவும் தங்களை மாற்றி அமைத்துக்கொள்ளவும் முயன்று அந்த விதமாக செயல்படும்போது...அவர்கள் இங்கே தங்களுடைய ஸ்திரீகளின் ஆடைகளை களைகிறார்கள், உண்மையே...இந்த பிசாசுகள் உங்களுடைய வீடுகளில் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன என்பதை ஜனங்கள் உணருகிறதில்லை. 167. அன்றொரு நாள் என்னுடைய சுற்றுப்புறத்தில் சரியாக, ஒரு வாலிபப் பெண்மணி ஒரு அருமையான ஸ்திரீ என்று நான் நினைக்கிறேன்...அவள் திருமணமான ஒரு பெண், ஒரு குழந்தையை பெற்றெடுத்தாள். மேலும் அந்த சிறு பெண் அங்கே வந்தாள். ஒரு... மனிதன் ஏதோ வேலையை செய்ய அந்த சாலைக்கு வந்தபோது, இந்த சிறிய பெண்மணி அங்கே, பயங்கரமாயிருந்த, மிகச் சிறிய ஆடைகளோடு வெளியேச் சென்றாள். 168. இது ஒரு மோசமான அன்னையர் தின உரையாய் இருக்கிறது. ஆனால், என்னுடைய சகோதரனே, நான் உங்களுக்கு ஒரு காரியத்தை சொல்லட்டும். தாயே, மீண்டும் தாயாக இருக்க திரும்புங்கள்! 169. ஒரு சிறு பையனும் கூட எங்களுடைய அக்கம் பக்கத்திற்குச் சென்று கொண்டிருந்தவன், உள்ளே வந்து, “அங்கே பாருங்கள்” என்று அதைக் குறித்து எங்களிடம் கூறினான். நானோ, “பார், ஒன்றுமில்லை” என்றேன். 170. இந்த ஸ்திரீ ஒரு அருமையான ஸ்தீரியாய் இருக்கிறாள். அவள் மனச்சோர்வடைந்திருக்கிறாள் என்று நான் கூறவில்லை. ஆனால், அதைத் குறித்த காரியம் என்னவென்றால், அவள் மீது அசுத்தமான, அழுக்கான ஆவி இருந்து, அவளை அதைச் செய்ய வைக்கிறது, அவளோ அதை அறியாதிருக்கிறாள். 171. இந்த உலகத்தில் ஒரு தாய் அல்லது எவரேனும் அந்த சிறிய அசுத்த ஆடைகளை அணிந்து, மனுஷனுக்கு முன்பாக அதைக் காண்பிக்க விரும்புவார்களா என்ன? சகோதரியே, நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். தாயே, நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். நான் உங்களுக்காக தேவனுக்கு நன்றி கூறுகிறேன். ஆனால், நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், ஆனால் அந்த ஒழுக்கங்களை பாதுகாக்க அங்கே நீங்கள் பரிசுத்த ஆவியை பெற்றிருக்க வில்லையென்றால், நீங்கள் மிகவும் அசிங்கமாக இருந்திருப்பீர்கள், யாருமே உங்களை பார்த்துவிட்டு பரலோகத்திற்கு சென்றிருந்திருக்கமாட்டார்கள். அது உண்மை. அது உண்மை. நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதைக் கவனியுங்கள்; அந்த ஒழுக்கங்கள். 172. இப்பொழுது, அது என்னவென்றால், பிசாசு உள்ளே வந்து, அவன் இந்தக் காரியங்களை ஜனங்களுக்குச் சொல்லியி ருக்கிறான். அவன் பிரசங்கிமார்களுக்குள் நுழைந்துள்ளான்; அவன் ஹாலிவுட்யை பின்பற்றிக் கொண்டிருக்கிறான். பெண் பிள்ளைகள் மற்றும் அந்த வாலிப பெண்மணிகள், அவர்கள் ஹாலிவுட்டை மாதிரியாகக் கொண்டுள்ளனர். இன்றைக்கு அவர்கள் நாட்டில் வைத்திருக்கும் மிகச் சிறந்த காரியங்கள், நீங்கள் கேட்கக் கூடிய மிகவும் ஒழுக்கமற்றதைக் குறித்துப் பேசுகின்றன; எல்லா வானொலியுமே பேசுகின்றன. 173. குமாரி கே ஸ்டார் போன்ற ஒரு வயோதிக பெண்மணி, அவளுக்கு எதிராக ஒன்றுமில்லை; ஆனால் காண்பதற்கு ஐம்பது வயது நிரம்பிய, வயோதிக பெண்மணி, மற்றும் எல்லாமே, ஒரு ஆகாரக் கோணியில் அவள் கொட்டப்பட்டதை போன்று, அவளுடைய ஆடைகள் எல்லாமே வெளியே இறுக்கமாக தள்ளப்பட்டதை போல் காணப்படுகின்றன. நான் ஒரு நகைச்சுவைக்காக அதை கூறிக் கொண்டிருக்கவில்லை, ஏனென்றால் நான் அந்த காரியங்களுக்கு எதிராக பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால் ஒரு ஸ்திரீ அந்த விதமாக நடந்து கொண்டு, எழும்பி வாலிப அமெரிக்க ஸ்திரீகளுக்கு ஒரு உதாரணமாக இருப்பது, அது நம்முடைய தேசத்திற்கு ஒரு கடனாக உள்ளது. அது பிசாசாய் இருக்கிறது. 174. ஆர்தர் காட்ஃபிரே போன்றவர்கள் மற்றும் அவர்கள் இங்கு சுற்றி ஓடிக்கொண்டு அவர்கள் செய்கிற காரியங்களை செய்து கொண்டிருக்கிறார்கள், தேசத்திலேயே மிகவும் குறிப்பிடத்தக்க அப்படிப்பட்ட மனிதர்கள், மற்றும், ஏன், அது ஒரு அவமானமாக இருக்கிறது. 175. அல்லேலூயா! பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கிறார் என்று நான் உணர்கின்ற காரணத்தால் அதைக் கூறுகிறேன். ஆக்கிமிப்பு வீடு வீடாக, இடத்திலிருந்து இடத்திற்கு, சபையிலிருந்து சபைக்கு, மனிதனிடத்திலிருந்து மனிதனுக்கு ஆக்கிரமிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 176. பிள்ளைகளே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எழுப்புதலின் ஒழுக்க நிலைபாடுகளோடும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடும் எழும்பி, “கர்த்தருடைய நிந்திக்கப்பட்ட சிலருடன் நான் வழியைத் தெரிந்துகொள்வேன்” என்று கூறுங்கள். ஆம், ஐயா. "நான் ஒரு உண்மையான தாயாக இருப்பேன்.” “நான் ஒரு உண்மையான தந்தையாய் இருப்பேன்.” முழு உலகமும், சுற்றிலுமுள்ள யாவும், சுற்றிலுமுள்ள யாவும் என் ஆத்துமாவை கைவிடும்பொழுது, அப்பொழுது அவரே என்னுடைய முழு நம்பிக்கையும் புகலிடமுமாய் இருக்கிறார். ஏனென்றால் கிறிஸ்துவின் மேல், அந்த திடமான கன்மலையின் மேல், நான் நிற்கிறேன்; மற்ற எல்லா நிலங்களும் அவிழ்ந்து கொண்டிருக்கும் மணலாய் இருக்கின்றன, மற்ற எல்லா நிலங்களுமே... 177. இந்த எல்லா விஷயத்திற்கும் காரணம் என்ன? ஊழியக்காரர்கள் இப்படி நடந்துகொள்ளக் காரணம் என்ன? பிரசங்கிமார்கள் இந்த பொய்யை ஜனங்களுக்கு தீர்க்கதரிசனமாக உரைக்க வைத்தது எது? 178. அநேக ஆண்டுகளுக்கு முன்பு, மெத்தோடிஸ்டு ஜனங்களாகிய, நீங்கள் ஏன் அதை செய்தீர்கள்...பண்டைய ஜான் ஸ்மித் தன்னுடைய பிரசங்க பீடத்தில், சுவிசேஷத்தை பிரசங்கிக்க நிரப்பப்பட்டிருந்தபோது, அவர் நான்கு மணி நேரம் ஒரு சிறிய பிரசங்கத்தைப் பிரசிங்கத்தார். மேலும் அவர், "அதைக் குறித்த பிரச்சனை என்னவென்றால், அதாவது என்னுடைய இருதயம் உடைந்துகொண்டிருக்கிறது” என்றார். அவர், “மெத்தோடிஸ்ட் குமாரத்திகளும் கூட தங்களுடைய விரல்களில் மோதிரங்களை அணிந்துகொண்டிருக்கிறார்கள்” என்றார். 179. மேலும், இன்றைக்கு, அவர்கள் குட்டை கால் சட்டைகளையும் மற்றும் சிறிய பழைய அசுத்த ஆடைகளையும் அணிந்துள்ளனர். அடுத்த ஐந்து வருடங்களுக்குள், ஏதாவது செய்யப்பட வில்லையென்றால், அவர்கள் முற்றிலும் நிர்வாணமாய் இருப்பார்கள். மெத்தோடிஸ்டு பிரசங்கிமார்களாகிய உங்களுக்கு, கேம்ப்லைட்டுகளாகிய உங்களுக்கு, பாப்டிஸ்டு களாகிய உங்களுக்கு என்ன நேர்ந்தது? ஆம், ஐயா. இது பிசாசு, தன்னுடைய சக்திகளை எரிந்துள்ளதாய் உள்ளது, அவன் இங்கே தன்னுடைய குட்டி பிசாசுகளை வைத்துள்ளான். 180. நீங்கள் அதை உணரவில்லை, நீங்கள் புகை பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள், ஸ்திரீகளாகி நீங்கள், ஸ்திரீகளாகி நீங்கள், நீங்கள் அங்கே செய்துகொண்டிருந்த விதமாகவே செய்து கொண்டிருக்கிறீர்கள், மேலும் குடித்துக் கொண்டு நீங்கள் செய்து கொண்டிருந்த வழியிலேயே தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உங்களுடைய முறைமையை விஷப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணருகிறதில்லை, உங்களை பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் முழு தலைமுறைகளையும் அழித்துக் கொண்டு இருக்கிறீர்கள், அப்படிப்பட்ட ஒரு காரியம் இருக்குமாயின். சிகரெட் புகைப்பதனால் எண்பத்தைந்து சதவீதத்திற்கும் மேலாக புற்றுநோய் பீடிக்க வாய்ப்பு இருக்கிறது, நீங்கள் வேண்டுமென்றே அவைகளுக்குள் செல்கிறீர்கள். சபைகள் அதை ஆதரிக்கின்றன. 181. ஒரு பெரிய பாப்டிஸ்ட் சபையில், இங்கே, அண்மையில்... நான் பாப்டிஸ்ட் சபையை தாக்கிக்கொண்டிருக்கிறேன். எனக்கு அதற்கு ஒரு உரிமை உண்டு; நான் வெளிவந்த பக்கமாக அவர்கள் சாய்கிறார்கள். ஆனால் அவர்கள் ஞாயிறு வேத பாடப் பள்ளி ஆராதனைக்கும் பிரசங்க ஆராதனைக்கும் இடையில் இடைவெளி கொடுக்க வேண்டியதாய் இருந்தபோது, மேய்ப்பர் மற்றும் யாவரும் வெளியே சென்று, புகைப்பிடிக்க, புருஷர்களும் ஸ்திரீகளும் சிகரெட்டுகளை புகைத்துக்கொண்டு தெருவில் வரிசையாக நின்றனர். பிசாசு அதை செய்திருக்கிறான். அது உண்மை. 182. அதன்பின்னர், இங்கே நம்முடைய சொந்த பட்டணத்தில், நம்முடைய மிகச் சிறந்த ஊழியக்காரர்களில் ஒருவர், இங்கே நியூ ஆல்பனியில், இந்த விளையாட்டு மைதானத்தில், இந்த நகரத்தின் நம்முடைய மிகச் சிறந்த ஊழியக்காரர்களில் ஒருவர் ஒரு சதுர நடன நிகழ்ச்சியை நடத்த, புருஷர்களையும் ஸ்தீரிகளையும் மேடையின் மேல் கொண்டு வருகிறார். 183. உலகம் என்ன கூறுகிறது என்பதற்கு கவலைப்படாதீர்கள், நீங்கள் அதை எப்படி நயந்து பேசி சுற்றி வளைத்து இணங்க வைக்க முயற்சித்தாலும் எனக்கு கவலையில்லை; சகோதரனே, உணர்ச்சி மிகுந்த மனிதன் மற்றொருவனுடைய மனைவியை அதே விதமாக, நல்லுணர்வோடு இழுக்க முடியாது என்பதை உணருங்கள். அது உண்மை என்பதை நீங்கள் அறிவீர்கள். 184. அவர்கள் நம்முடைய பெண்களைக் கொண்டு, அலுவலகங்களில்; ஆடைகளைக் களையச் செய்திருக்கின்றனர், மற்றும் வீதிகளில் மேலும் கீழுமாக வாடகை கார்களை ஓட்டச் செய்கின்றனர். எங்கே, அவர்கள் வீட்டிலே, அடுப்புக்கு பின்னால், சமையலில், ஆகாரத்தை ஆயத்தப்படுத்துகிறவர்களாக இருக்க வேண்டும். 185. அது என்னவாய் இருக்கிறது? அது பிசாசாய் இருக்கிறது. ஆக்கிரமிப்பு நடந்து கொண்டிருக்கிறது. நான் இந்த தனிப்பட்டவரை அல்லது அந்த தனிப்பட்டவரைக் குறித்து கூறிக்கொண்டிருக்கவில்லை. அசுத்த ஆவிகள் ஜனங்களை ஆட்கொண்டு, அதற்குள் செல்ல அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றன என்றே நான் கூறிக் கொண்டிருக்கிறேன். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஆக்கிரமிப்பு. 186. சபையின் கவிழ்ப்பு. சபையானது பிசாசினால் வீசி எறியப்பட்டுள்ளது. முன்னமே... 187. அவர்கள் இப்பொழுது ஒரு பையனை அழைத்துச் செல்கிறார்கள், அவன் ஒரு வேதாகம் கருத்தரங்கிற்கு வரும்பொழுது, முதலாவது காரியமாக அவன் அவனுடைய பட்டங்களை பெற்றுக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. அவன் உளவியலை எடுக்க வேண்டும். அவன் இறையியலை எடுக்க வேண்டும். அவன் தனக்குள் எல்லாவிதமான உபதேசங்களையும் பெற்றுக்கொண்டு, போதிக்க வேண்டும். அவன் உண்மையாகவே ஒரு அருமையான கல்வியை பெற்றிருக்கவில்லையென்றால், அவன் புத்திசாலி யாகவும் தன்னால் இருக்க முடிந்த அளவு பிரகாசமாகவும் இருக்கவில்லையென்றால், அப்பொழுது அவர்கள் அவனை புறம்பாக்கி விடுவார்கள்; அவன் தகுதி பெற முடியாது. அவன் என்ன செய்ய வேண்டும்? இங்கிருந்து வெளியே சென்று, அதற்கு இருந்ததைப் போன்ற, ஒரு சிறிய அரசியல் சொற்பொழிவை அளிக்க, ஒரு ஜன குழுவிற்கு, மரித்துக்கொண்டிருக்கிற ஒரு கூட்ட புருஷர்களுக்கும் ஸ்திரிகளுக்குமான, ஒரு சபை அரசியல் சொற்பொழிவு. 188. ஓ தேவனே, பண்டைய நாகரிக, மொழியின் முதல் எழுத்தையும் அதற்கு அடுத்ததையும் கூட அறியாத கல்வி நாகரீகமற்ற, அதாவது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமையை அறிந்து மனந்திரும்புதலை பிரசங்கிக்கும் சிலரை எங்களுக்கு அனுப்பும், கர்த்தராகிய இயேசுவை நேசிக்கும்படியாக, பீடத்தண்டை புருஷர்களையும் ஸ்தீரீகளையும் ஸ்தீரீகளையும் அனுப்பும். அனுப்பும். [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.) 189. இது ஒரு கடனாய் உள்ளது. அவன் வேதாகம கருத்தரங்குகளில் ஆக்கிரமித்துள்ளான். அவன் சபைகளில் ஆக்கிரமித்துள்ளான். அவன் நம்முடைய ஸ்தீரிகளின் ஆடைகளை களைந்துள்ளான். அவன் நம்முடைய புருஷர்களை நீங்கள் அவர்களிடத்தில் ஒன்றுமே சொல்ல முடியாத ஒரு நிலைக்கு கொண்டு வந்துவிட்டான். ஆண்களும் பெண்களும், நான் நினைக்கிறேன்... 190. நீங்களோ, “சரி, ஸ்திரீகள்தான்” என்று கூறலாம். ஆம், உங்களுடைய மனைவிகள் அதை செய்ய அனுமதிக்கும் புருஷர்களாகிய நீங்கள், எதிலிருந்து நீங்கள் உண்டாக்கப்பட்டவர்கள் என்பதையே முற்றிலும் காண்பிக்கிறது. அது அவமானம். அது ஒரு உண்மை. நிச்சயமாக. அது ஒரு பரிதாபமாக உள்ளது. 191. அதன்பின்னர் பிரசங்கியினிடத்திற்குச் செல்கிறான். இன்றைக்கு, பீடத்தில் நிற்கிற பிரசிங்கியார், ஒரு நவீன பிரசங்க பீடத்தில் நிற்கிறார். அங்கே, அவருக்கு முன்பாக தன்னுடைய ஜனங்களுடன் நிற்கிறார், மனந்திரும்புதல் பாவம், மற்றும் கிறிஸ்துவின் கரடுமுரடான சிலுவை ஆகியவைகளைத் தவிர உலகத்தில் உள்ள ஒவ்வொரு பழமையான காரியங்களைக் குறித்தும் பிரசங்கிக்கிறார். ஆம். 192. நீங்கள் உண்மைகளை கூறும்போது சுவிசேஷ ஊழியத்தில், நீங்கள் பேசுவதைக் கேட்க ஜனங்கள் வருவார்கள். நீங்கள் அந்தக் காரியத்திற்கு கொண்டு சென்று சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களை மனந்திரும்பச் செய்து அவர்களை சரி செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள். அவர்களோ, ‘அதைக் கேட்க வேண்டியதில்லை” என்று, அவர்கள் வெளியே நடந்து செல்கிறார்கள். இல்லை, அவர்கள் கேட்பதில்லை. ஆனால், சகோதரர்களே, அவர்கள் மனந்திரும்ப வேண்டும் அல்லது அழிந்து போக வேண்டும். 193. பிசாசுகளாயிற்றே! நீங்கள் பள்ளிக்கு செல்கிறீர்கள் அது பள்ளிகளை ஆக்கிரமித்துள்ளது. இன்றைக்கு நாடு முழுவதிலும், சுற்றி நோக்கிப் பாருங்கள். இங்கே பாருங்கள், ஜனங்களாகிய நீங்கள், பிராட்டஸ்டண்டுகளாகிய நீங்கள். பாருங்கள், நாலு பெரிய கத்தோலிக்க பள்ளிகள் மற்றுமுள்ள காரியங்கள் இன்றைக்கு கட்டியெழுப்பப்பட்டுள்ளன. அது ஏன்? நீங்கள் தடைகளை நீக்கிவிட்டீர்கள். 194. நான் கத்தோலிக்கத்தில் நம்பிக்கைக் கொண்டிராவிட்டாலும், அதற்கு எதிராக ஒன்றுமில்லை. நான் ஒரு கண்டிப்பான பிரொட்டெஸ்டென்ட். அது முற்றிலும் சரியே. அவர்கள் இல்லை என்று நிரூபிக்க முடியுமா...உங்களால் அவர்களோடு வாதிட முடியாது. அவர்களோ, “வேதம் என்ன கூறுகிறது என்று நாங்கள் கவலைப்படுகிறதில்லை. சபை என்ன கூறுகிறது என்பதை நாங்கள் அறிவோம்” என்று கூறுகின்றனர். 195. தேவன் தம்முடைய வார்த்தையில் இருக்கின்றார். இங்குதான் தேவன் இருக்கிறார். 196. ஆனால் சில கத்தோலிக்கர்கள், தங்களுடைய சபையோடு இணைந்திருப்பது, ஒரு பிராட்டஸ்டெண்ட்டாகிய, உங்களை வெட்கமடையச் செய்ய வேண்டும். அவர்கள் தங்களுடைய சபையோடு ஒட்டிக் கொண்டிருப்பதுபோல, நீங்கள் மாத்திரம் வேதாகமத்தோடு ஒட்டிக்கொண்டிருந்தால் நலமாயிருக்குமே. உண்மையே. ஆனால், அவர்கள் தவறாக இருக்கிறார்கள். அவர்கள் தவறாக இருக்கிறார்கள், என்று, சர்வவல்லமையுள்ள தேவனின் அதிகாரத்தின் கீழ் என்னால் கூற முடியும். முற்றிலுமாக. 197. நீங்கள் தவறாக இருக்கிறீர்கள், நீங்கள் செய்து கொண்டிருக்கிற விதம், ஏனென்றால் நீங்கள் உண்மையாகவே நன்றாக அறிந்து, நீங்கள் அதை செய்கிறீர்கள். அதுவே உங்களிடத்திலிருந்து ஒரு மாய்மாலத்தை உருவாக்குகிறது. நிச்சயமாகவே, அது ஒரு ஆக்கிரமிப்பு; சபைகள் வீழ்ச்சியுறுகின்றன. இப்பொழுது அதற்கு பதிலாக... 198. சபையானது, சபையை அழகாக மாற்ற முயற்சித்து, ஒரு பெரிய சபையைக் கட்டி, அதன் மீது பெரிய கோபுரங்களை வைத்து, பெரிய இசைக்கருவிகளையும், கத்தோலிக்க சபையைப் போலவே ஒவ்வொரு காரியத்தையும் வடிவமைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் கத்தோலிக்க சபையை போன்று வடிவமைக்க வேண்டியதில்லை, அவள் அழிவுக்குச் செல்ல ஆக்கினைத் தீர்ப்படைந்திருப்பாளேயானால். ஏனென்றால், அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாய் உள்ளது, அவள் அழிவுக்கு செல்ல ஆக்கினைத் தீர்ப்புக்குட்படுத்தப்பட்டிருக்கிறாள். நீங்கள் அவளைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தால், நீங்கள் அவளோடு சென்றுகொண்டிருக்கிறீர்கள். 199. ஆனால் இன்றைக்கு நமக்குத் தேவையென்னவென்றால், ஒரு பெரிய சபையல்ல, ஒரு பெரிய கோபுரமல்ல, பாவங்கள் சுட்டெரிக்கப்படுகின்ற பண்டைய-மாதிரியான பீடங்களின் கீழே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நேசிக்கிற புருஷர்களும் ஸ்திரீகளும் ஏறெடுக்கிற அர்ப்பணிக்கப்பட்ட ஜெபங்களேயாகும். நீங்கள் அதை அறிவீர்கள். அதுதான் நமக்குத் தேவை. நண்பர்களே, எனக்குச் செவி கொடுங்கள். எனக்குச் செவி கொடுங்கள். அதுவே அன்பாக உள்ளது. 200. என்னுடைய நேரம் போய்விட்டது. நான் அதன் பேரில் சற்று தாமதிக்க விரும்புகிறேன், எங்கே, சற்று, நான் அந்த ஆக்கிரமிப்பு, என்பதன் பேரில் சிறிது நேரம் எடுத்துக்கொண்டு, அது எங்கு சென்றது என்று கூறுவேன். அது ஆக்கிரமித்துள்ளது. அது நம்முடைய தேசங்களை ஆக்கிரமித்துள்ளது. அது ஐக்கிய நாடுகளை ஆக்கிரமித்துவிட்டது. 201. இப்பொழுது நினைவிருக்கட்டும், நான் என்னுடைய வாழ்நாளில் ஒருபோதும் ஒரு வாக்களித்ததேயில்லை; பாருங்கள், இப்பொழுது, அதன் பேரில் தற்பெருமை கொள்ள ஒன்றுமே இல்லை; நான் அதை செய்ய விரும்பினால், அது என்னுடைய அமெரிக்க பிறப்புரிமை. ஆனால் நான் என்னுடைய நண்பர்களை குறித்து, அங்கு அவர்களை சேர்த்துக்கொள்ள அதிகம் நினைக்கிறேன். பாருங்கள், அவர்கள் அருமையான மனிதர்களாக சென்று வஞ்சகர்களாக வெளியே வருவதையும் நான் பார்த்திருக்கிறேன். நான் அதை விரும்புகிறதில்லை. 202. எனக்கு ஒரு காரியம் உண்டு. நான் இங்கே வேட்பாளராக இருக்கிற ஒரு நபருக்காக இங்கே ஒரு மேடையைக் கட்டிக்கொண்டிருக்கிறேன், அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, அவருக்கு மாத்திரமேயாகும். நான் என்னுடைய நேரத்தை அவருக்காகவே அளிக்கிறேன். அது உண்மையே. என்னால் சபையை சரிப்படுத்த முடியுமென்றால், உலகத்தின் மற்றவை அதனைத்தானே பார்த்துக் கொள்ளும். அது உண்மை. 203. ஆனால் நான் உங்களுக்கு சொல்லட்டும், திரு ரூஸ்வெல்ட்....... அந்த மனிதன் மரித்துப் போய்விட்டார். அவர் இளைப்பாறட்டும்; அவர் இளைப்பாறுகிறார் என்று நான் நம்புகிறேன். உள்ளே வந்து, மூன்று அல்லது நான்கு முறைகள் போட்டியிட்டு, கைப்பற்றியதோ, வெறுமென ஒரு ஆரம்ப சர்வாதிகாரத்தையே. அது சம்பவிக்கும் என்று எங்கே வேதத்தில் கூறப்பட்டது என்பதை, என்னால் உங்களுக்கு அதில், நிரூபிக்க முடியும். அது உண்மை. நாம் எந்த ஒரு அரசியல் அமைப்பையும் பெற்றிருக்கவில்லை. அது சுக்குநூறாக உடைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு காரியமும் முழுவதும் நொறுக்கப்பட்டிருக்கிறது. குடியரசு கட்சியினரும் அவ்வளவு மோசமானவர்களாக இருக்கிறார்கள். இது ஆறில் ஒன்று என்றால், மற்றொன்று ஒன்றரை டஜனாக உள்ளது. ஒவ்வொரு 204. ஏனென்றால், இராஜ்ஜியமும் நொறுக்கப்படப்போகிறது, ஆனால் இயேசு கிறிஸ்துவின் இராஜ்ஜியமே என்றைக்குமாய் நிலைத்து நின்று ஆளுகை செய்யும். அது உண்மை. மேல்...மலைகளிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட கல்லை தானியேல் கண்டான், அது அரசியல் சம்பந்தமான உலகத்தின் மீது மோதி, அந்த விதமாக அதனை பொடியாக அரைத்துப்போட்டது, ஒரு கோடை காலத்தில் போரடிக்கும் களத்தில் உள்ள கோதுமையைப் போல. ஆனால் அந்தக் கல் வளர்ந்து பெரிய பர்வதமாகி வானளா-...முழு வானத்தையும் பூமியும் நிரப்பிற்று. அதுதான் இது. 205. அரசியல் சம்பந்தமான உலகம் போய்விட்டது. நம்முடைய தேசம் உடைந்துவிட்டது. கர்த்தர் உரைக்கிறதாவது என்று, சகோதரன் பிரான்ஹாம் அதைக் கூறினார் என்பதை, நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். நம்முடைய தேசம் அழிக்கப்பட்டுள்ளது. அது ஒருபோதும் எழும்பாது. மற்ற எல்லா தேசங்களைப் போல, அவள் போய்விட்டாள். இது இன்றைக்கு உலகத்திலேயே, மிகப்பெரிய தேசமாக நின்றுகொண்டிருக்கிறது, ஆனால் இது பிசாசின் வித்தையே ஜனங்களுடைய இருதயங்களுக்குள் விதைத்துள்ளது; அது எப்படி ஹாலிவுட்டுக்கு வந்தது, அது எப்படி ஜனங்களுக்குள் வந்து, மற்றும் இது எப்படி துவங்கியது. உங்களால் அவர்களுக்கு ஒன்றுமே சொல்ல முடியாது. 206. மதுபானத்தை மூட முயற்சிக்கும் ஒரு ஜனாதிபதியை அங்கே கொண்டு வாருங்கள் இப்பொழுது மதுவினை தடை செய்ததால், என்ன சம்பவிக்கும் என்பதையும் பாருங்கள். அவர் அங்கே அதை அமல்படுத்திய இரண்டு மணி நேரங்களில், அவர் சுடப்படுவார். நிச்சயமாகவே, அவரால் அதைத் தாங்க முடியாது; முழு உலகமும் அவருக்கு எதிராக இருக்கிறது. ஆம், ஐயா. உங்களால் அதைச் செய்ய முடியாது. 207. அவள் போய்விட்டாள். அவள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளாள், கம்யூனிசத்தின் ஆவி கைப்பற்றியுள்ளது. 208. இன்றைக்கு நம்முடைய பள்ளிகளுக்கு சென்று, நம்முடைய பள்ளி பிள்ளைகளைப் பாருங்கள். பள்ளிக்கு செல்லுகிற எங்களுடைய குட்டி நபர்களே, என்ன நடக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இங்கே பள்ளிகளில் உள்ள சிறுமிகள், மற்றும் அதைப் போன்ற காரியங்களில், பதினான்கு மற்றும் பதினைந்து வயதில், அவருடைய தாயார் அவர்களை பள்ளிக்கு அனுப்பி வைக்க, ஒழுக்கங்கெட்டு, பைத்தியமாகி, சோகமடைந்து, போதைக்கு அடிமையாகி, சிகரெட் பிடிப்பவர்களாய் அதைப் போன்ற ஒவ்வொரு காரியத்திலும் உள்ளனர்; ஒரு சிறிய வயதிலேயே, அது போன்று சிறு பிள்ளைகள் உள்ளனர். வைக்கோல் போரில் ஊசியை கண்டுபிடிப்பது போல அவர்களில் ஒரு கன்னிப் பெண்ணைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும், பையன்களோடு தவறாக சுற்றித்திரிந்து கொண்டு, இந்த ஆற்றங்கரையில் மற்றும் எங்கும் படுத்துக் கிடக்கிறார்கள். 209. என்னுடைய நண்பர்களே, என்னால் அதை உங்களுக்கு நிரூபிக்க முடியும். நான் எதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதை நான் அறிந்திருந்தாலொழிய நான் அதை பிரசங்க பீடத்திலிருந்து கூறமாட்டேன். நம்முடைய-நம்முடைய மாவட்டங்களில், இங்கே உள்ள பள்ளிகளில், இந்த மாவட்டங்களில் இங்கேயே, அந்த சிறு பெண்மணிகள் உடை உடுத்திக் கொண்டு, தெரிவதில்லை...அவர்கள் வேறு இடங்களுக்கு செல்வதாக அவர்களுடைய தாய்மாரிடத்தில் கூறிவிட்டு, பயன்களை சந்தித்து லூயிவில்லின் தெருக்களிலேயே விபச்சாரம் கூட செய்கிறார்கள் (அது என்ன?) மற்றும் பாடல் குழுக்களில் பாடுகிறார்கள். 210. காரணம், அவர்கள் அங்கு நின்று ஒரு சிறிய பன்டை சமூக சுவிசேஷத்தை பெற்றுக்கொண்டனர், பிரசங்கிமார்கள் நின்று மனந்திரும்புதலை பிரசங்கித்து ஆண்களையும் பெண்களையும் பீடத்தண்டை கொண்டு வருவதற்கு பதிலாக, சிறிய காரியங்களை குறித்தும், வேதாகமத்தின் சிறிய கதைகளைக் குறித்தும், அல்லது அதைப் போன்ற ஏதோ ஒன்றை பேசுகிறார்கள். 211. அவருடைய தகப்பனார் இரவிலே நடந்து சென்று, அவருடைய சிகரட்டை பற்ற வைத்து, ஒரு கண்ணாடி கோப்பை மதுவை எடுத்து, அமர்ந்து அதைக் குடிக்கிறார். தாயாரோ பகல் நேரம் முழுவதும், ஒரு கூட்ட ஸ்திரிகளோடு ஒரு சீட்டு விளையாட்டு குழுவில், அதைப்போன்ற ஏதோ சமூக காரியங்களில் வெளியே இருக்கிறாள். குழந்தை வேற எந்தவிதமாகவாவது இருக்க வேண்டும் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்? 212. பாருங்கள், நீங்கள் எந்த சூழலில் வாழ்கிறார்களோ, அதுதான் நீங்களாக இருக்கிறீர்கள். 213. நீங்கள் ஒரு மிகச் சிறிய குட்டிப் பெண்ணை, சிறு குட்டி பையனை, அவர்களை இங்கிருந்து வெளியே அழைத்துச் சென்று, அவர்களை யாருடனாவது வசிக்க விடுகிறீர்கள். நீங்கள் ஒரு மனிதனை அழைத்துச் செல்லுங்கள், நான் என்னுடைய பையனை அழைத்துச் செல்ல முடியும், யாருடனாவது ஒரு நாள் அவன் வெளியே இருக்கட்டும்; நான் உள்ளே வந்து, அவன் யாருடன் இருந்தான் என்பதை எப்பொழுதுமே என்னால் சொல்ல முடியும். நிச்சயமாகவே. கவனியுங்கள், அந்த சூழலில், அந்த ஆவி அவனைப் பிடித்துக்கொள்கிறது. 214. நீங்கள் ஒரு சபைக்குள்ளாகச் சென்று, அங்குள்ள ஜனங்கள் எல்லோரையும்... நீங்கள் பரிசுத்த ஆவியை பெற்றுள்ள சபைகளுக்குள்ளாக, அல்லது—அல்லது பெந்தேகோஸ்தே சபைகளுக்குள்ளாகச் சென்று, அவர்கள் அதை அவ்வாறு அழைக்கிறார்கள். ஒவ்வொருவரும் இருக்கட்டும்...ஓ, போதகர் செய்கிறது போலவே, அவர்கள் ஓடி தங்களுடைய தலைகளை முன்னும் பின்னுமாக அசைக்கிறார்கள்; முழு சபையும் அதேக் காரியத்தைச் செய்யத் துவங்குவதைக் கவனியுங்கள். புருஷர்கள், ஜனங்கள் எழுந்திருந்து மேலும் மேலும் பயங்கரமான அல்லது மற்ற ஏதாவது ஒன்றை செய்யட்டும்; சபை முழுவதுமே அதை செய்வதைக் கவனியுங்கள். போதகர் உண்மையாகவே வெற்றாச்சார முறைக்குள்ளாகி குளிர்ந்துபோயிருக்கின்ற ஒரு நிலைக்குள்ளாக இருப்பாரானால்; முழு குழுவும் அதைச் செய்வதைக் கவனியுங்கள். நீங்கள் அந்த சூழலுக்குள்ளாக வருகிறீர்கள். 215. நீங்கள் ஒரு நல்ல ஒழுக்கமான மனிதனை எடுத்துக்கொள்ளுங்கள், மேலும் அவன் ஒன்றுக்கும் உதவாத ஒழுங்கங்கெட்ட ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளட்டும்; அவனும் அவளைப் போன்று கூடிய சீக்கிரத்தில் ஒழுங்கங்கெட்டவனாக மாறக் கூடும். அதுதான் ஆகாபுக்கு சம்பவித்தது. அதையே எடுத்துக்கொள்ளுங்கள், நேர்மறாக, ஒரு நல்ல அருமையான எளிய பெண் ஒரு பைசாவிற்கு மதிப்பில்லாத ஒரு மனிதனை திருமணம் செய்து கொள்ளட்டும்; முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, அவன் செய்கிற அதே காரியத்தை அவள் செய்து கொண்டிருக்கிறாள். 216. என்னால் எப்படி இந்தக் காலையில், பிளவுபட்டுள்ள சிறு குடும்பங்களின் பேரில், அதைப்போன்ற காரியங்களின் பேரில் என்னுடைய கைகளை சுட்டிக்காட்ட முடியும், ஒரு குடிப்பழக்கம் உள்ள தகப்பனிடம், அது போன்ற காரியங்கள், அங்கே அழகான எளிய தாய்மார்கள் உள்ளே வந்து, அவனோடு ஏதோ காரியத்தை அவர்கள் செய்ய முடியும் என்று எண்ணினர், இப்பொழுது எல்லா தாய்மாரும் மற்றும் அவர்கள் எல்லோருமே குடித்துவிட்டு செல்கிறார்கள். இதுவே சூழலாய் உள்ளது. 217. அது என்ன? அது பிசாசாக உள்ளது. அது பிசாசாய், ஆக்கிரமிப்பாய் உள்ளது. ஒரு கர்ஜிக்கிற சிங்கத்தைப் போல, அவன் இந்த தேசத்திற்குள் பாய்ந்துவிட்டான். அவர்களுக்கு இருந்த மிகச்சிறந்த இடமான, ஹாலிவுட்டில் இங்கே அவன் தன்னை அமைத்துக் கொண்டான். அவன், “தொலைக்காட்சி வருகிற வரையில் நான் இங்கு திரைப்படங்களை கொண்டு வர முடியும், அதன்பின்னர் நான் அவர்களை அழைத்துச் செல்வேன்” என்றான். அவன் அங்கேயே அமர்ந்துவிட்டான். 218. மேலும் சபை ஜனங்கள், நிகழ்ச்சிகளை நிறுத்தி, தங்களுடைய பிள்ளைகள் செல்வதை தடுப்பதற்கு பதிலாக, அவர்கள் ஒரு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் அவர்கள் இவர்களுக்கு பத்து சென்ட் காசுகளை கொடுத்து அவர்களை அங்கே அனுப்புகிறார்கள், எனவே அவர்கள் ஒரு சிறிய சமுதாய சீட்டு விளையாட்டு குழுவில் இருந்துவிட்டு, தாங்களே வெளியே சுற்றித் திரிகிறார்கள். ஓ, என்னே ஒரு அவமானம். இப்பொழுது அவர்கள் தொலைக்காட்சியை மாத்திரமே இயக்கி எல்லா அசுத்தமான, அங்கே உலகத்தில் அழுகிப்போன முட்டாள்தனமானவற்றை, அதன் பேரில் பார்க்கிறார்கள். அது உண்மையே. 219. எனக்கு எந்த திரைப்படத்திற்கும் எதிராகவும் ஒன்றுமில்லை. எனக்கு தொலைக்காட்சிக்கு எதிராகவும் ஒன்றுமில்லை. அது அதன் பேரிலான மோசமான காரியமாய் உள்ளது. அதுதான் இது. நீங்கள் அதை ஒழுக்கமாக வைத்திருந்தால், அது ஒழுக்கமாக நிலைத்திருந்திருக்கும். 220. உங்களால் இன்றைக்கு, இங்கே நகரத்தில் பண்டைய நாகரீக பொத்தான்களைக் கொண்ட காலணிகளை விற்கவே முடியாது. ஸ்திரீகள் அவைகளை விரும்புகிறதில்லை. அவர்கள் தங்களிடமிருந்து முன் கால் விரல்கள் வெளியே வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். மற்ற ஸ்திரீகளும் அதை செய்து கொண்டிருக்கிறார்கள். அது உண்மை. 221. நீங்கள் சபைக்குச் செல்லும்போது, உங்களால் அவர்களுக்கு பண்டைய நாகரீக மார்க்கத்தை விற்க முடியாது, ஏனென்றால், மற்ற ஸ்திரீ, அவள் விரும்புகிறதில்லை, இல்லை, அவள் அதனோடு எதையும் செய்ய விரும்புவதில்லை. இல்லை, ஐயா. “நான் அங்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. நான் அப்படியே விசுவாசிக்கிறேன், அதற்கு அங்குள்ளதெல்லாம் அவ்வளவுதான்.' ஓ, சகோதரனே, பிசாசு கூட, விசுவாசிக்கிறான். உண்மை. நீங்கள் மனந்திரும்புங்கள் அல்லது அழிந்துபோங்கள். 222. இப்பொழுது, மன்னிக்கவும்; இல்லை, நான் இல்லை. இல்லை, நான் இல்லை. இல்லை, நான் சொன்னது தவறாகும். நான் ஜனங்களை நேசிக்கிறேன். ஆனால் நீங்கள் ஒரு தலைகீழான வீழ்ச்சிக்குள்ளாவதை காணாதபடிக்கு நான் நான் நான்—நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். தேவனுக்கு சித்தமானால், நான் இதை இந்த வாரம் சற்று கழித்து எடுத்துப் பேசுவேன். 223. இப்பொழுது, தாய்மார்களாயிருக்கிற தாய்மார்களாகிய உங்களுக்கு, நீங்கள் செல்வதற்கு முன்பாக உங்களுக்கு ஒரு வார்த்தை. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் உங்களுடைய பிள்ளைகளை சரியாக வளருங்கள். 224 நாம் இந்த ஆக்கிரமிப்பை எடுத்துப் பார்ப்போம்; நாம் இன்னும் வீடுகளுக்கு, ஏராளமான இடங்களுக்கு, பள்ளிகளுக்கு, அதனோடு வெளியில் உள்ள இடங்களுக்கும் செல்ல வேண்டும். நாம் இதை எடுத்துக்கொள்வோம். 225. ஆனால் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஆக்கிரமிப்பு, பிசாசு அவளை ஆக்கிரமித்துள்ளான். ரஷ்யாவைக் குறித்து பயப்படாதீர்கள். ரஷ்யா எந்த காரியத்தையும் செய்யப் போவதில்லை. நாம் அதை நாமாகவே செய்து கொண்டிருக்கிறோம், நம்முடைய சொந்த அழுகல்கள் நமக்கு மத்தியிலே உள்ளது. அது உண்மை. 226. உலகின் மற்ற எல்லா நாடுகளை விட அமெரிக்காவில் அதிகமான விவாகரத்து வழக்கு உள்ளன என்பது, உங்களுக்கு தெரியுமா? அதிகமான விவாகரத்துக்கள்; அதை குறித்து சிந்தித்துப் பாருங்கள். அது பயங்கரமானதா? தாய்மை முறித்துப்போடப்பட்டுள்ளது. வழக்கமாக தாய்மார்கள், தங்களுடைய பிள்ளைகளோடு வீட்டில் தரித்திருப்பதுபோல் அவர்கள் இருப்பதில்லை. அவர்களுக்கு ஒரு வேலைக்குச் செல்ல வேண்டும். 227. இங்கே அன்றொரு நாள், இந்த பட்டணத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட மளிகைக் கடைக்காரர், இதைக் குறித்து என்னிடத்தில் பேசிக்கொண்டிருந்தார். இந்த பொது ஆலையில் பணிபுரியும் பெண்கள், இந்த இளம் திருமணமான பெண்கள் சிறு குழந்தைகளுடன் உள்ளனர். அவர்கள் தங்களுடைய குழந்தைகளை கவனித்துக் கொள்ள குழந்தை பராமரிப்பாளர்களை வைத்துள்ளனர். அவர்களே இந்த பொது இடங்களில் பணிபுரிகிறார்கள். “அவர்களில் இருவர் அங்கே நின்று கொண்டிருந்தனர், அவர்கள் தங்களுடைய பொது பணிகளில், அவர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டபோது, 'கவலைப்படாதே. நாங்கள் அதை எப்படியும், சமாளித்துக்கொள்வோம்' என்று கூறினதாக” கூறினார். 228. ஓ, அப்படிப்பட்ட ஒரு விபச்சாரத்தின் நேரம் சமீபத்துவிட்டது. நிச்சயமாக. அவர்கள் வீட்டின் முதலாளியாய் இருக்கிறார்கள் என்று அவர்களிடம் பிசாசு சொல்லியிருக்கிறான். அவர்கள் தங்களுடைய சொந்த பணத்தை சம்பாதிப்பார்கள். அவர்கள் என்ன விரும்புகிறார்களோ அதை அவர்கள் செய்வார்கள். உங்களால் முடிந்தால், நீங்கள் அதை அவர்களிடத்திலிருந்து வெளியேற்றுங்கள். 229. அவர்களிடத்திலிருந்து அதை வெளியேற்றக் கூடிய ஒரே ஒரு காரியம் மாத்திரமே உண்டு, அது பலிபீடமே, இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாக, பண்டைய நாகரீகமே, கண்ணீர் வழிந்தோடும் மார்க்கமே அவர்களுடைய இருதயங்களை உடைத்து மற்றும் அவர்களை சுக்குநூறாக கிழித்து, அவர்கள் என்னவாக இருக்க வேண்டுமோ அவ்வாறு அவர்களை உருவாக்கும். அது உண்மையே. 230. நான் ஒரு பழமைவாதி என்று அவர்கள் நினைக்கலாம். ஆனால் நீங்கள் மரித்துக்கொண்டிருக்கும் அந்த நாளிலே, என்னுடைய சகோதரனே, சகோதரியே, நான் உங்களுக்கு சத்தியத்தை கூறினேன் என்பதை நீங்கள் தெளிவாக உணர்ந்துகொள்வீர்கள். அது உண்மை. 231. அவள் ஆக்கிரமிப்பில், இருக்கிறாள், அந்த வேளை இங்கு உள்ளது. இப்பொழுது, இப்பொழுது, ஆம், ஒரு தீர்மானத்தின் நேரமும், கூட, ஒரு தீர்மானத்தின் நேரம்; சபைக்கு வருவதற்கல்ல, ஆனால் நீங்கள் கிறிஸ்துவை சேவிக்கப்போகின்றீர்களா என்ற ஒரு தீர்மானத்தின் நேரம் அல்லது உங்களுடைய சபையில் வெதுவெதுப்பாக தரித்திருக்கபோகிறீர்களா என்பதேயாகும். அது உண்மை. 232. ஏராளமான சபை உறுப்பினர்கள் உள்ளனர். எல்லா அங்கத்தி-... அல்லது கிறிஸ்தவர் என்று உரிமைகோரும் அமெரிக்க மக்கள், உண்மையான கிறிஸ்தவர்கள், மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்கள், சகோதரனே, நீங்கள் பரலோகத்தில் இருப்பது போலவே, கிட்டத்தட்ட, போர்கள் மற்றும் பிரச்சினைகளிலிருந்து நாம் பாதுகாப்பாக இருப்போம், ஆம், ஐயா, வியாதிகள் பூமியை விட்டு வெளியேறும், மற்ற ஒவ்வொரு காரியமுமே. 233. வீதியிலிருந்து வந்த ஒரு பெண்மணியை எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்பது அருமையானதாக இருக்குமல்லவா, மற்றும் மனிதனோ, “சகோதரியே நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? காலை வணக்கம், சகோதரனே”? நடந்து, இல்லை...உங்களுக்கு உலகத்தில் ஒரு கவலையும் இருக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு காரியமும் அருமையாகவும் சிறந்ததாகவும் இருக்கிறது. மேலும் அந்த நபர் தெருவின் முனைக்கு வந்து; உங்களை கடந்து ஓட முயற்சிப்பதற்கு பதிலாக, அவர் நின்று, “சரி, சகோதரனே. சரி, உங்களுக்கு இருந்த...ஓ, நீங்கள் எனக்கு முன்பே," என்று கூறலாம், நீங்கள் பாருங்கள், விரும்புகிற...அது அற்புதமாக இருக்குமல்லவா? (சபையோர், “ஆமென்” என்கின்றனர்.-ஆசி.) நாம் அவ்வாறு இருக்கப்போகிறோம், ஆனால் அது ஆயிர வருட அரசாட்சியில் இருக்கும், சகோதரனே. அந்த நாள் வந்துகொண்டிருக்கிறது. அது உண்மை. எனவே இப்பொழுது நாம் அல்ல... 234. நான் அன்றொரு நாள் இங்கே, எங்களுடைய வீட்டின் சுற்றுப்புறத்தில் நின்றேன்; எங்களுடைய அண்டைவீட்டாருக்கு எதிராக ஒன்றுமில்லை, ஆனால் நான் எங்களுடைய சிறு பிள்ளைகளை கவனிக்க முடிகிறது. மனைவியோ அழுதுகொண்டிருந்தாள். இந்த பட்டணத்தில் ஒரு குறிப்பிட்ட மருத்துவர், அவருடைய குட்டி பெண்' என்னுடைய குட்டி பெண்ணோடு சுற்றிலும் ஓடிக்கொண்டிருந்தாள், மேலும் அவர்கள் அவளுடைய பெயர்; பிரான்ஹாமாக இருந்தது என்பதை கண்டுபிடிக்கும் வரை அவர்கள் ஒருவரை ஒருவர் நேசித்தனர், அவள் சங்கை. பிரான்ஹாமினுடைய பிள்ளையாயிருந்தாள் என்று அறிந்தபோதோ. அதுவே இதற்கு முடிவாயிற்று. அந்தக் குட்டி பெண்ணால் இனிமேல் என்னுடைய குட்டி பெண்ணோடு செல்ல முடியாது. “என்னே,” நான், "பாருங்கள், சரி” என்று எண்ணிக்கொண்டேன். 235. பக்கத்து வீட்டில் உள்ள சிலர் அங்கே ஓடி வந்து, "பாருங்கள், அது சரியாயிருந்தது” என்றனர். எனவே, அவர்கள் தங்களுடைய மேய்ப்பரிடம் சென்றனர். என்னிடம் சொல்லாதீர்கள். உங்களுக்கு தெரியும், எனக்கு—எனக்கு ஏராளமான காரியங்களை தெரிந்துகொள்ள ஒரு வழி இருக்கிறது, நீங்கள் பாருங்கள். எனவே அவர்கள்—அவர்கள் தங்களுடைய மேய்ப்பரிடம் சென்று, "உங்களுக்கு தெரியுமா ஒரு மனிதன் எங்களுடைய சுற்றுப்புறத்தில் வசிக்கிறார், எங்களுடைய பிள்ளைகளிடத்தில் மிகவும் நல்லவராக இருக்கிறார்” என்று கூறினர். “அது சங்கை. பிரான்ஹாம். அவர் அவர்களை அழைத்து, அவர்களை தன்னுடைய சிறிய பழைய திறந்த வண்டியில் ஏற்றுக்கொண்டு, அவர்களை வெளியே அழைத்துச் செல்கிறார்” என்று கூறினர். 236. "பாருங்கள், ஹூ, அஹேம்! சங்கை. பிரான்ஹாமுக்கு எதிராக எங்கள் இடத்தில் ஒன்றுமில்லை. அவர் சரியாக இருக்கிறார், ஆனால், நீங்கள் பாருங்கள், அவர் நம்மைக் காட்டிலும் ஒரு வித்தியாசமான வகுப்பின ஜனமாய் இருக்கிறார்." ஆம், "நாங்கள், நீங்கள் நெருக்கமாக இல்லாமல் இருப்பதை...நான்-நான் விரும்புவேன். உங்களுக்கு தெரியும் நான் அந்த விதமாக இருக்க மாட்டேன்... நீங்கள் அவர்களிடத்தில் பேசுங்கள், நட்பாக இருங்கள், ஆனால் அதுவே முடிவாக இருக்கட்டும்” என்றார். 237. ஓ, சகோதரனே! என்னுடைய மனைவியோ அங்கு நின்றுகொண்டு, அழுதுகொண்டிருந்தாள். நான், “அன்பே, இது ஒரு வேறுபிரிதலின் வரிசை. நானும் என் வீட்டாருமோவென்றால், நாங்கள் கர்த்தரையே சேவிப்போம்” என்றேன். 238. முழு உலகமும் கைவிட்டாலும்; அப்பொழுதும் இயேசு கிறிஸ்து இருக்கிறாரே! நான் ஒரு மதவெறியன் என்று அழைக்கப்பட வேண்டியிருந்தாலும், நான் என்னுடைய உறவின-...என்னுடைய சக மனிதர், அது போன்ற காரியங்களால் ஒதுக்கித் தள்ளப்பட வேண்டும் என்று இருந்தாலும், நான் இன்னமும் இயேசு கிறிஸ்துவை தெரிந்து கொள்வேன். தேவனுடைய மாறாத கரத்தையே பற்றிக்கொள்ளுங்கள். பூமிக்குரிய நண்பர்கள் உங்களை கைவிடும்போது, இன்னும் அதிகமாக அவரை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள். அவரைப் பற்றிக்கொள்ளுங்கள். 239. தேவனே, நான் இதற்கு முன்பு ஒருபோதும் பிரசங்கித்திராதது போல பிரசங்கிக்கட்டும். ஒரு மரித்துக் கொண்டிருக்கிற ஒரு மனிதனைப் போன்றே, நான் மரித்துக்கொண்டிருக்கிற மனிதர்களுக்கு பிரசங்கிக்கட்டும். நான் மற்றொரு பிரசங்கத்தை ஒருபோதும் பிரசங்கிக்கப்போவதில்லை என்பது போல நான் ஜனங்களுக்கு பிரசங்கிக்கட்டும். கண்ணீர் வடியும் முகங்களோடு பீடத்தண்டை வரும்படி, நான் அவர்களை சம்மதிக்கச் செய்யட்டும்; வீட்டிற்குத் திரும்பிச் சென்று கிறிஸ்தவர்களைப் போல ஜீவிக்கட்டும், அவர்களுடைய அண்டைவீட்டாரிடத்திலும் அப்படியே ஜீவிக்கட்டும். இங்கே இந்த எல்லா கேளிக்கைகளையும் நிறுத்திவிட்டு, சுற்றி ஓடுவதும், குதிப்பதும் மற்றும் தொடர்ந்து அதை செய்வதும்; இந்த விதமாக செயல்படுகிறீர்கள், மற்றும் இதை பெருமையடித்துக்கொண்டு அந்த விதமாக செல்கிறீர்கள். ஓ, அதை செய்யாதீர்கள். அது பிசாசாய் இருக்கிறது. அந்த பிசாசின் ஆவிகள் கிறிஸ்தவர்கள் மேல் வருகின்றன. 240. நினைவிருக்கட்டும், அங்கிருந்த அந்த ஊழியக்காரர்கள், அவர்கள் தீர்க்கதரிசிகளாக இருந்தனர். அவர்கள் தீர்க்கதரிசிகளாக இருந்தனர். அவர்கள் பலியை செலுத்திக்கொண்டிருந்த மத சம்பந்தமான மனிதராய் இருந்தனர். அவர்கள் இந்த நாளின் ஆசிரியர்களைப்போல அவ்வளவு பக்தியாய் இருந்தனர், ஆனால், சகோதரரே, அவர்கள் சத்தியத்தை அறிந்துகொள்வதிலிருந்து வெகு தொலைவில் இருந்தனர். 241. பிசாசு எவ்வளவு பக்தியானவன் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையா? பிசாசு எந்த அந்தி-, கம்யூனிசம் போன்ற மகத்தான பெரிய காரியமாய், கிறிஸ்தவ மார்க்கத்திற்கு முழு முழுவதும் எதிரானவன் அல்ல. அதுவல்ல. அது, ஓ, பாருங்கள், பிசாசு, நிச்சயமாகவே, அது அந்திக்கிறிஸ்துவல்ல. அந்திக்கிறிஸ்து மிகவும் பக்தியானவன், மிகவும் பக்தியானவன். ஒரு பக்தியான ஆவியே இயேசுவை சிலுவையில் அறைந்ததாய் இருந்தது. அது எப்பொழுதுமே ஒரு பக்தியான உலகமாய், ஒரு பக்தியான ஜனங்களாய் இருந்து வருகிற, அதுவே சிலுவையில் அறைகிறது. அது உண்மையான கிறிஸ்துவுக்கு எதிராக இருந்த பக்தியான ஜனங்களாகும். அது மிகாயாவுக்கு எதிராக இருந்த பக்தியான தீர்க்கதரிசிகளாக இருந்தது. அது தேவனுடைய செய்திக்கு எதிராக இருக்கிற அந்த நாளின் பக்தியான ஜனங்களாய் இருக்கிறது. 242. நான் உங்களை எச்சரித்திருக்கிறேன் என்பது, நினைவிருக்கட்டும். நான் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். நான் கத்தோலிக்கம், பாப்டிஸ்ட் மற்றும் மெத்தோடிஸ்ட்டைக் குறித்து அதிகமாக பேசிக் கொண்டிருக்கவில்லை; இங்கே இந்த வரிசைகளில் உள்ள, அந்த பரிசுத்த ஜனங்களை குறித்தே நான் பேசிக்கொண்டிருக்கிறேன். அது எப்படி வந்து நாடகத்தில் நிற்கிறது என்று, இன்றைக்கு அதை நோக்கிப் பாருங்கள். ஓ, என்னே. நான் எப்போதாவது, அதற்குள் செல்வேன். என்னுடைய இருதயம் எனக்குள்ளே நொறுங்குகிறது. 243. பண்டைய ஐந்து நரம்பு கருவியோடு அங்கு எழும்பி நின்று, அந்தப் பழைய ஐந்து நரம்பு கருவியை இசைத்து, அதைப் போன்ற பண்டைய நரம்பிசை கருவியை வாசித்து, "இந்த டெக்சாஸ் கால்நடைகளை மேய்க்கும் பையன் இன்னார் இன்னாரா?” அந்த மனிதனுக்கு எதிராக எனக்கு ஒன்றுமில்லை; ஆனாலும் அங்குள்ள உலகத்திற்கு சொந்தமானது. அது உண்மை. நான் எந்த ஒரு காரியமும் கூட இல்லாமல், எதுவுமில்லாமல், ஒன்றுமேயில்லாமல் நிற்க விரும்புகிறேன், ஆனால் நின்று என்னுடைய கரங்களை உயர்த்தி, “இயேசுவே என்னை சிலுவை அருகில் வைத்துக்கொள்ளும்.” ஆம், ஐயா. பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலுவையை நான் சுமப்பேன், மரணம் என்னை விடுவிக்கும் வரைக்கும், அதன்பின்னர் ஒரு கிரீடத்தை தரித்துக்கொள்ள பரலோக வீட்டிற்கு செல்வேன், ஏனென்றால் எனக்காக ஒரு கிரீடம் உண்டு. 244. இந்த காலையில் இங்கே எளிமையான தாய்மார்களாய், உண்மையான தாய்மார்களாயிருந்து வருகிற உங்களுக்கு, உங்களில் அநேகர் அவ்வாறு இருப்பதை நான் அறிவேன்; நீங்கள் ஒவ்வொருவரும் என்றே, நான் நினைக்கிறேன். நான் உங்களுக்கு ஒரு காரியத்தை சொல்லட்டும். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் ஐந்தாவது சுவிசேஷமாக இருக்கிறீர்கள் என்று, நான் கருதுகிறேன். உங்களுடைய பிள்ளைகளுக்காகவே, ஒரு சிறு காரியத்தை, இப்பொழுது நான் என்னவென்று உங்களுக்குச் சொல்லட்டும். காரணம், சகோதரன் நெவில் அநேகமாக இன்றிரவு தாயாரைக்...குறித்ததன் பேரில் பிரசங்கம் செய்வார், அல்லது யாரேனும், எங்களில் ஒருவர், சரி, தாயாரைக் குறித்து, அதைப் பிரசங்கிக்கலாம். ஆனால், கவனியுங்கள், நான் உங்களிடத்தில் ஒன்று கேட்கட்டும். 245. நினைவிருக்கட்டும், மோசே ஒரு குட்டி பையனாக இருந்தபோது, அவனுக்கு அறிவுரையை வழங்கியது ஒரு தாயாயாயிருந்தது. தேவபக்தியுள்ள ஒரு தாய் அந்த குட்டி மோசேயை எடுத்து தன்னுடைய மடியில் வைத்து, “மோசே,” என்று கூறி, அவனுக்கு எல்லாவற்றையும் கற்பித்தாள். அவன் அவளுடைய ஆசிரியராக இருந்தான், இல்லை, அவள் அவனுடைய ஆசிரியராக இருந்தாள், சரியாகக் கூறினால், பார்வோனின் கீழே, "இப்பொழுது இந்த காரியங்கள்” என்று கூறி, "மோசே, என்றோ ஒருநாள் நீ இஸ்ரவேலரை புத்திரரை விடுவிக்கப்போகிறாய். நீயே அதற்கென அழைக்கப்பட்ட பையனாய் இருக்கிறாய். உன்னை சுத்தமாகவும் உலகத்திலிருந்து கறைபடியாமலும் காத்துக்கொள், ஏனென்றால் நீயே அந்த ஒருவனாய் இருக்கிறாய். நீதான் அந்த ஒருவன்” என்று கூறினாள். 246. மற்ற வேறெந்த இடங்களுக்கும், எப்போதாவது அவன் சென்று எந்த வேத பாட கருத்தரங்கிலாவது, வேறெந்த உபதேசத்திலாவது அவன் எப்போதும் பெற்றுக் கொண்ட தேயில்லை என்பதை நாம் அறிவோம். ஒரு அஞ்ஞானியாயிருந்த, பார்வோனுடைய அரண்மனையிலே அவன் தங்கியிருந்தான்; ஆனால் அவனுடைய தாய் அவனுக்கு கற்பித்தாள். அதுதான் ஒரு உண்மையான தாய். அவள் அவனுக்கு கர்த்தருடைய கற்பனைகளை கற்பித்தாள். அவன் எப்படி பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்பதை அவள் அவனுக்குக் கூறினாள். அவள் அவனுக்கு எப்படி மற்றும் என்னவாக அவன் ஜீவிக்க வேண்டும், மேலும் எப்படி, தேவன் என்ன செய்ய வேண்டும், அவனுக்காக என்ன செய்வார் என்பதை அவனிடத்தில் கூறினாள். அது மோசேயினுடைய ஜீவிய காலம் முழுவதும் அவனோடு ஒட்டிக்கொண்டது. 247. எந்த நல்ல, உண்மையான, விசுவாசமான தாயும் தன்னுடைய சிறு குழந்தைகளை அழைத்து, அவர்களை படக்காட்சிகள் மற்றும் நடனங்கள், அதை போன்றவற்றிற்கு அனுப்புவதற்கு பதிலாக, அவள் அவர்களை தன்னுடைய மடியிலே வைத்து அவர்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை குறித்து போதிப்பாள். 248. இங்கே மற்றொரு நாள், நான் ஒரு தாயாரிடத்தில் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன். மேலும் அந்தத் தாயார், "ஓ, சகோதரன் பில்லி” என்று கூறி, அவள், “என்னுடைய பரிதாபமான பையன் பிரச்சினைக்குள்ளாக இருக்கிறான்” என்றாள். “ஓ, அவன் என்னே ஒரு பிரச்சனையில் இருக்கிறான்” என்றாள். 249. நானோ, “ஆம், அருமையான, சகோதரியே, அதைக் குறித்து எனக்குத் தெரியும்” என்றேன். மேலும் அவள், “அவன் தவறாக இருக்கலாம். எனக்குத் தெரியாது" என்று கூறினாள். “ஒருவர் இதைக் கூறுகிறார் மற்றும் ஒருவர் அதைக் கூறுகிறார். எனக்கு தெரியாது. ஆனால்” என்றாள். தொடர்ந்து, "அவன் தவறாய் இருந்தாலும் அல்லது சரியாய் இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, நான் அவனை நேசிக்கிறேன்” என்றாள். அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. “நான் அவனை நேசிக்கிறேன்.” 250. அவன் தன்னுடைய தாயிடம் கூறினான், “நான் இதனால் மற்றும் அதனால் மிகவும் வஞ்சிக்கப்பட்டிருக்கிறேன்” என்று கூறினான். “தாயே, நான் உண்மையாகவே பெற்றுள்ள ஒரே இனிய இருதயமாய் நீ இருக்கிறாய் என்று நான் நம்புகிறேன்; எனக்கு உண்மையாய் இருக்கிற ஒரு ஸ்திரியாய், என்னோடு இணைந்திருக்கிறாய்” என்று கூறினான். அதுவே தாயினுடைய அன்பு. அந்த ஒரு உண்மையான தாயே தன்னுடைய கரங்களை தன்னுடைய குழந்தையைச் சுற்றிப் போட்டுக்கொள்வாள். அவன் சரியாய் இருக்கிறானா அல்லது தவறாக இருக்கிறானா என்பதை பொருட்ப்படுத்தாமல், அவள் தொடர்ந்து செல்கிறாள். மேலும் தேவனால்...ஒரு தாயினால் தன்னுடைய குழந்தையைக் குறித்து அந்த விதமாக நினைக்க முடியுமானால், தேவனால் அவருடையவர்களைக் குறித்து எவ்வளவு அதிகமாக நினைக்க முடியும். உங்களுக்கு புரிகிறதா? நீங்கள் அவரோடு தரித்திருங்கள். தொடர்ந்து தரித்திருங்கள். 251. நான் முடிப்பதற்கு முன்பாக, வேதாகமத்தில் உள்ள, மற்றொரு தாயைக் குறித்து, உடனடியாக, இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லட்டும். ஏரோதியாள் என்று அழைக்கப்பட்ட ஒரு தாய் இருந்தாள். அவள் தன்னுடைய குமாரத்திக்கு தாளத்துக்கு ஏற்றவாறு காலடி போட்டு ஆடும் நடனத்தை கற்றுக் கொடுத்தாள். அவள் புகழ் பெற்றவளாய் இருக்க வேண்டும் என்று இவள் விரும்பினாள். அவள் ராஜாவுக்கு முன்பாக நடனமாடி, யோவான் ஸ்நானகனின் தலையைக் கேட்டாள். அவளுடைய எழுபது சந்ததிகளைக் குறித்த பதிவு நம்மிடம் உள்ளது, நடனமாடின இந்தப் பெண் (ஏரோதினுடைய குமாரத்தி), ஏரோதுக்கு முன்பாக நடனம் ஆடினாள்; அவளுடைய சந்ததிகளில் எழுபது பேர், அவர்கள் விபச்சாரிகளாகவோ அல்லது தூக்கு மேடையிலோ மரித்தனர். 252. ஒரு தாய் அவளுடையவர்களுக்கு உலகத்தின் காரியங்களைக் கற்பித்தாள்; மற்றொரு தாயோ அவளுடையவர்களுக்கு தேவனுடைய காரியங்களைக் கற்பித்தாள். ஒருவன் மிகப்பெரிய ஒரு தலைவனாயும் மற்றும் ஒரு ஜெயங்கொள்பவனுமாகி, இன்றைக்கு மனிதருக்கு மத்தியிலே அழிவில்லாதவனாய் இருக்கிறான்; மற்றவளோ ஒழுக்கங்கெட்டு நரகத்தில் இருக்கிறாள், மற்றும் தன்னோடு ஆயிரக்கணக்கானவர்களை அழைத்துச் சென்றாள். நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்பது புரிகிறதா? "பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து.” 253. உங்களுடைய வெள்ளை ரோஜாக்களோடு இங்கே அமர்ந்திருக்கிற பரிதாபமான தாய்மார்களாகிய உங்களோடு நான் நிச்சயமாகவே அனுதாபப்படுகிறேன். இன்றைக்கு, ஒரு தாய் சென்றுள்ள ஒரு பரலோகம் ஒன்று உண்டு, அங்கே தேவனுக்காக ஜீவித்த பண்டைய நாகரீகங்கொண்ட ஒரு நல்ல தாய், அநேகமாக திரைக்குப்பால் கடந்து சென்றுள்ளாள். நீங்கள் வருவதற்காக அவள் காத்துக் கொண்டிருக்கிறாள். அது உண்மையே. 254. உங்களுடைய சிகப்பு ரோஜாக்களோடு அங்கே உள்ள உங்களை நான் கனப்படுத்தி மரியாதை செலுத்துகிறேன். உங்களுடைய தாயாருக்கு, நீங்கள் அவளுக்காக இந்த காரியத்தை செய்ய வேண்டும் என்று விரும்பினால், ஒரு வருடத்தில் உள்ள முந்நூற்று அறுபத்தைந்து நாட்களும் அதை செய்யுங்கள். அவருடைய வீட்டுக்கு சென்று, ஜெபத்தை ஏறெடுத்து, தேவனுக்காக ஜெபியுங்கள். அதுதான் செய்ய வேண்டிய காரியம். உங்களுடைய பிள்ளைகளை வளருங்கள். உங்களுடைய பிள்ளைகள் வரும்போது, நீங்கள் திரைக்கபால் கடந்து சென்றுவிட்டப் பிறகு, அவர்களும் உங்களை “ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்று அழைப்பார்கள். அதுவே உண்மையான தாய்மையின் ஆவியாயும், உண்மையான அன்னையர் தினத்தினுடைய ஆவியாயுமுள்ளது. ஒரு வருடத்தில் உள்ள முந்நூற்று அறுபத்தைந்து நாட்களும் அன்னையர் தினமாகவே இருக்கிறது. 255. இந்த நாளில் அவர்கள் மலர்களை விற்கிறார்கள் மற்றும் அன்பளிப்புகளை அனுப்புகிறார்கள், உலகத்தார் அதை செய்கிறார்கள். இது கடந்து செல்லுமானால், உலகம் இன்னும் மற்றொரு இருபது வருடங்கள் நீடித்து நிலைக்குமானால், அவர்கள் குமாரனுடைய நாட்களையும், குமாரத்தியினுடைய நாட்களையும், மற்றும், உறவினருடைய நாட்களையும், மற்றும் மாமாவினுடைய நாட்களையும், அதைப் போன்று அவர்கள் எல்லா காரியங்களையும் உடையவராய் இருப்பார்கள், அதுவே உலகமானது ஒரு வணிக கவர்ச்சியில் கொண்டு செல்வதற்கு போதுமானதாகும். அது எங்கே போய்க் கொண்டிருக்கிற தென்றால், நேராக நரகத்திற்கு, அதனால் போக முடிந்த அளவு கடினமாக அழிவிற்கு சென்றுகொண்டிருக்கிறது. ஆனால், உங்களை, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக என்பதே, என்னுடைய ஜெபமாயுள்ளது. நாம் ஜெபம் செய்வோம். 256. எங்கள் தயவுள்ள பரலோகப் பிதாவே, இந்தக் காலையில், நாங்கள் எங்களுடைய சிந்தைகளோடு, திரும்பிப் பார்க்கையில், அங்கே முன்னர், நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, அங்கே ஆகாப் ராஜாவின் பக்கத்தில் யோசபாத் நின்றுகொண்டிருந்தான். ஒரு சிறிய ஆவி அவனுடைய இருதயத்திற்குள்ளாக இறங்க, அவன் ஒரு தவறை செய்திருந்தபோதிலும், இன்னமும் தேவனை விட்டு விலகாமல், அவனிடத்தில் சொன்னதோ, “இது தவறாக உள்ளது. இது தவறாக உள்ளது. இது சுத்தமாக இல்லை. இது பரிசுத்தமாக இல்லை. இந்த காரியங்கள் இந்த விதமாக தொடர முடியாது என்ற தீர்க்கதரிசி கூறியிருக்கிறான்” என்று கூறினது. சிறு தேவனுடைய அக்கினி அவனை எழுப்பிற்று. 257. அதன்பின்னர் அந்த சிறிய அக்கினிக்கு பதில் சொல்ல நீர் ஒருவரை உடையவராய் இருந்தீர், அது உண்மையான தேவனுடைய தீர்க்கதரிசியான, மிகாயாவாக இருந்தது. அவனோ அங்கு கந்தைகளை உடுத்திக்கொண்டு வந்திருந்திருந்த போதிலும், அவன் அங்கு இகழப்பட்டு வந்திருந்தபோதிலும், ஒரு கூட்ட ஓநாய்கள் ஒரு ஆட்டுக்குட்டியை நோக்கி பார்ப்பது போல அவர்கள் எல்லோரும் அவனை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவன் முகத்தில் அறையப்பட வேண்டியிருந்தாலும், அவன் சிறையிலே போடப்பட்டு இடுக்கத்தின் அப்பத்தினாலும் தண்ணீரினாலும் போஷிக்கப்பட வேண்டியிருந்தபோதிலும், அவன் உண்மையை சொன்னான். ஆனால் அதே சமயத்தில் அவன் கூறின வார்த்தை நிறைவேற்று, ஏனென்றால் நீர் அவனோடு இருந்தீர். 258. தேவனே, அதை அருளும், நாங்கள் இந்த வேதாகமத்தை நோக்கிப் பார்க்கிறோம். நாங்கள் சபைப் புத்தகங்களையும், பத்து கட்டளைகள், முதலினவற்றையும், சபைகளைக் குறித்தும், சடங்குகளைக் குறித்தும் நோக்கிப் பார்க்கிறோம், மேலும் அவர்கள் எப்படி இதை அதை அல்லது மற்றதை செய்கின்றனர் என்பதையும் பார்க்கிறோம். ஆனால் இங்கே இந்த உண்மையான வார்த்தையை நாங்கள் நோக்கிப் பார்த்து அது என்ன கூறுகிறது என்பதை புரிந்துகொள்வோமாக: “பரிசுத்தமில்லாமல், ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே. சமாதானத்தையும் பரிசுத்தத்தையும் பின்பற்றுங்கள், அது, இல்லாமல், ஒருவனும் கர்த்தரை தரிசிப்பதில்லையே. உலகத்தையும், அல்லது உலகத்தின் காரியங்களிலும் அன்பு கூறுகிறவனுக்கு, அவனுக்குள் தேவனுடைய அன்பு இல்லை." 259. 'கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வரும். மனுஷர்கள் தற்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும் இருப்பார்கள்.” ஓ, அந்த பெரிய காரியங்கள், கர்த்தாவே, சம்பவித்துக்கொண்டிருக்கின்றன. “துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப் பிரியராயும்; தேவனுடைய கட்டளைகளை போதிப்பதற்கு பதிலாக மனுஷனுடைய கட்டளை ஜனங்களுக்கு போதிக் கிறார்கள்; தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து, பரிசுத்த ஆவியின் வல்லமையை மறுதலிக்கிறார்கள்” ஒரு மனிதனை ஆவினால் நிரப்பப்படும்படிச் செய்யவும், அவனை களிகூரச் செய்யவும், அவனுடைய கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடச் செய்யவும், அவனை வெளியே போய் வியாதியஸ் தருக்காக ஜெபிக்கவும் செய்து, அவனை அந்நிய பாஷைகள் பேசி வியாக்கியானிக்கும்படி செய்து, அவனை தீர்க்கதரிசனம் உரைக்கும்படிக்கும் செய்கிறார்கள். தேவனுடைய ஆவியை, ஜீவனுள்ள தேவனை, அவர்கள் அதை ஏதோ ஒரு விடுதிக்குள்ளாக அல்லது அதைப்போன்று ஏதோ ஒன்றில் கொண்டு சென்று, "தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து, அதன் பலனை மறுதலிக்கிறார்கள்.” 260.ஓ தேவனே, இந்த சிறு கூட்டத்தார், இந்த நாளிலே, இப்பொழுதே, துரிதமாக, கடைசி நேரம் வந்து, எங்களை இந்த நிலையில் பிடித்துக்கொள்வதற்கு முன்பே, விழித்து எழும்புவார்களாக. "எழும்பி உங்களையே குலுக்கி கொள்ளுங்கள்” என்று வேதம் கூறியுள்ளது போல நாங்கள் எங்களையே புதுப்பித்துக்கொள்வோமாக. "பண்டைய வழியையே கேட்போமாக, அதுவே நல்ல வழியாக இருக்கிறது, நாங்கள் அதை கண்டறியும் போது, அதில் நடப்போமாக." தேவனே, அந்தப் பண்டைய கரடு முரடான வழியை நாங்கள் கண்டுபிடிக்க அனுமதித்து, நாங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து, நூற்றுக்கனக்கானவர்களாக நிற்க முடியும்போது, எங்களுடைய கரங்களை ஒன்று சேர்த்து இணைத்துப் பாடுவோமாக. நான் கர்த்தருடைய நிதிக்கப்பட்ட சிலரோடு வழியை தெரிந்துகொள்வேன். நான் இயேசுவோடு துவங்கியிருக்கிறேன் நான் சென்று கொண்டேயிருக்கிறேன். தேவனே அவ்விதமாய் இருக்க, அதன்படி ஜீவிக்க எங்களுக்கு உதவி செய்யும். 261. கர்த்தாவே இங்கே அமர்ந்துகொண்டிருக்கிற இந்த அருமையான எல்லா தாய்மார்களையும் ஆசீர்வதியும்; அவர்கள் தங்களை தாய்மார்கள் என்று அறிந்து, தங்களுடைய மேற்சட்டையில் வெள்ளை ரோஜாக்கள் குத்தப்பட்டதோடு, இந்தக் காலையில், ஒரு அருமையான வயோதிக தாயார் காட்சிக்கு அப்பால் கடந்து சென்றுவிட்டார் என்பதை குறித்த ஒரு நினைவாக அமர்ந்திருக்கிறார்கள். ஓ ஜீவனின் எஜமானே, கர்த்தாவே, அவர்களை ஆசீர்வதியும். அவர்களும் கூட, ஆசிர்வதிக்கப் படுவார்களாக, மேலும் அவர்களுடைய பிள்ளைகளுடைய நினைவுகள் அவர்களுடைய தாயாரோடு இருப்பது போலவே இருப்பதாக, ஒரு மகிமையான பரலோகத்திற்கு, அவள் திரைக்கப்பால் சென்றுவிட்டிருந்தாலும். கர்த்தாவே இதை அருளும். 262. என்றோ ஒரு காலையில் ஜீவனானது எங்களுடைய நரம்புகளிலிருந்து பிரிக்கப்படும்போது, எங்களுடைய சுவாசம் எங்களிடத்திற்கு வரத் தவறுகிறபோது, திரையானது மீண்டும் திறக்கும்; ஒருவேளை, அவள் யோர்தானின் கடைசியிலே, எங்களுக்கு உதவி செய்ய வருவாள். ஓ, அந்த மகிமையான நாளுக்கு நாங்கள் அப்பால் எங்களுடைய காலடிகளை எடுத்து வைக்கும்போது, அங்கே...இருக்காது. காற்றானது சிகரெட் புகையினால் மாசுபடுத்தப்பட்டிருக்காது. வீதியிலே ஒரு குடிகாரனும் ஒருபோதும் இருக்கமாட்டான். ஒரு விபச்சாரி ஒருபோதும் இருக்கமாட்டாள். பாவமே ஒருபோதும் இருக்காது. அதைப்போன்று எந்த காரியமும் ஒருபோதும் இருக்காது. ஆனால் என்றென்றும் மகிமையில், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடும் மற்றும் நம்முடைய பிள்ளைகளோடும் நாம் சமாதானத்தோடு ஜீவிப்போம். மேலும், ஓ, என்னே ஒரு அற்புதமான நாள். 263. ஓ பிதாவே, பெரிதான இருளின் வேளையிலே, யுத்தமும் மற்றும் பிசாசும் தேசங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன, பிரசங்க பீடங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன, சபைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக் கின்றன, ஜனங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன, வியாபாரங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன, நகரங்களையும், பள்ளிகளையும் வீடுகளையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன; ஓ தேவனே, தேவனுக்காக போர் புரிய துரிதமாக பட்டயத்தை உறுவி, நிற்க எங்களுக்கு உதவி செய்யும், பாளையத்திலே பாவம் இருந்தபோது அங்கே மோசேயும் மற்றும் மற்றும் மற்றும் லேவியர்களும் அங்கே செய்தது போலவே. கர்த்தாவே, எங்களுக்கு உதவி செய்யும். 264. இப்பொழுது எங்களை மன்னித்து, எங்களை ஆசீர்வதியும். எங்களை தாழ்மையாகவே வைத்தருளும், கர்த்தாவே எங்களை நொறுக்கும். ஓ தேவனே, நீர், “கண்ணீரோடே, விதைக்கிறவன், தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பி வருவான்" என்றீர். ஓ தேவனே, எங்களை சுக்குநூறாக உடையும். எங்களை வனைந்து, கர்த்தாவே, புதிதாக உருவாக்கும். நாங்கள் மிக அதிகமாக வழியில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறோம். 265. நான், நானே, கர்த்தாவே, எத்தனை பேர் என்னுடைய கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்பதை குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருக்கிற ஓரிடத்திற்கு வந்து கொண்டிருக்கிறேன். ஓ தேவனே, நீர் கலந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கர்த்தாவே, வாரும்! ஓ, கிறிஸ்துவே, கர்த்தாவே வாரும்! என்னை உடையும்; என்னை வனையும். ஓ கர்த்தாவே, வேண்டாம், அந்தக் காரியங்கள் என்னுடைய சிந்தையில் ஒருபோதும் எனக்கு வர விடாதேயும். அவைகளிலிருந்து என்னைக் காத்துக் கொள்ளும். 266. நான் சற்று முன்பு, கூறியது போல, கர்த்தாவே, பிரசங்கிக்க, எனக்கு உதவி செய்யும், மரித்துக்கொண்டிருக்கிற மனிதர்களுக்கு ஒரு மரித்துகொண்டிருக்கிற மனிதன் பிரசங்கிப்பது போலவே, நாங்கள் யாவரும் நித்தியத்தை சந்திக்க வேண்டும் என்பதை அறிந்திருக்கிறோம். நாங்களும் உமக்கு முன்பாக நிற்க வேண்டும்; நீர் உம்முடைய மகிழ்வூட்டுகிற முறையில் இல்லாதிருக்கும்போது, நீர் இரக்கத்தோடு இல்லாத இருக்கும்போது, நீர் இரக்கமில்லாமல் நின்று கொண்டிருக்கும்போது; தேசங்களின் மீது நியாயத்தீர்ப்பை கொண்டு வரும்படி, புறக்கணிக்கப் பட்டிருக்கிற ஜனங்களின் மீதும் மற்றும் உம்முடைய பிள்ளையின் அன்பை நிராகரித்தவர்களின் மீதும், கோபத்தோடு, நீர் நின்று கொண்டிருக்கும்போது, உதவி செய்யும். 267. தேவனே, அந்த நாளில் நான் உறுதியாக நிற்கும்படிக்கு, இன்று அவரோடு எனக்கு இரக்கத்தை தாரும். இப்பொழுது அழ வேண்டியிருக்கலாம், ஆனால் அந்த நேரத்தில், சந்தோஷத்திற்கென்று, "உலகத்தோற்ற முதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற கர்த்தருடைய சந்தோஷத் துக்குள் பிரவேசியுங்கள்” என்று நீர் கூறும்போது, நீர் அதைத் துடைத்துப்போடுவீர். தேவனே, இப்பொழுது எங்களோடிரும், எங்களுக்கு உதவி செய்யும், நாங்கள் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென்.